தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
நம்முடைய ரசிகர்கள் அடிக்கடி நம்மிடம் லயன் காமிக்ஸ் எங்கு கிடைக்கும்?, முத்து காமிக்ஸ் எங்கு கிடைக்கின்றது? காமிக்ஸ் கிளாசிக்ஸ் வந்து விட்டதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பதால் இந்த பதிவு இடப் படுகிறது.
சிவகாசியில் உள்ள லயன் காமிக்ஸ் ஆபீசுக்கு செல்ல முடியாதவர்கள் சென்னையில் கீழ்க் கண்ட முகவரிக்கு சென்றால் அவர்களுக்கு சமீபத்திய லயன், முத்து மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்கள் கிடைக்கும்:
ரம்யா ஏஜன்சி,
எண் பனிரெண்டு,
நைனான் தெரு, அபிராமபுரம், சென்னை - 18.
தொலைபேசி எண்: 044 – 2495 0495.
இதை தவிர மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள மாருதி புத்தக நிலையத்திலும் அந்த மாதத்து காமிக்ஸ் இதழ்கள் கிடைக்கும். சென்ற வாரம் நண்பர் மாரியப்பன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விவரங்களை தெரிவித்தது இருந்தேன்.
பின்னர் நானே அங்கு செல்லும் சந்தப்பம் நேரிட்டது. உடனே என்னுடைய கைபேசியில் இருந்த . கேமரா மூலம் அந்த புத்தக கடையை சில படங்கள் எடுத்து விட்டேன். ஒவ்வொரு இதழிலும் பத்து, பத்து புத்தகங்களை வரவழைககிறார்கலாம். லயன் காமிக்ஸ் தீர்ந்து விட்டதாம். காமிக்ஸ் கிளாசிக்ஸ் இன்னமும் இரண்டு காபி உள்ளது (மடக்காமல் இருக்கும் இதழ் என்பதால் நானும் இன்னும் ஒன்று வாங்கி விட்டேன்). முத்து காமிக்ஸ் நேற்று தான் வந்தது. மூன்று விற்று விட்டது. இந்த கடையில் நமது காமிக்ஸ் இதழ்களை நல்ல முறையில் டிஸ்பிளே செய்து உள்ளார்கள்.
வாசக அன்பர்களே, நீங்களும் உங்களுக்கு தெரிந்த காமிக்ஸ் விற்பனை கடைகளை உங்களின் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் மற்ற நண்பர்கள் பயன் பெறுவார்கள்.

சென்னை தி.நகரில் பாண்டி பஜாரில் ஹோட்டல் சரவணா பவன் வாசலில் இருக்கும் புத்தக கடையில் லயன், முத்து, மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் ரெகுலர் ஆக கிடைத்து வருகின்றது.
ReplyDeleteநன்றி கணேஷ். நானே இதனை மறந்து விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி. வாசகர்கள் அனைவரும் இப்படி தங்களுக்கு தெரிந்த கடைகளை தெரியப் படுத்தினால் நலம்.
ReplyDeleteT Nagar பஸ் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள ஒரு சிறு புத்தக கடையில் லயன் காமிக்ஸ் கிடைக்கிறது . நான் அங்கே தான் விண்வெளி கொள்ளையர் காமிக்ஸ் வாங்கினேன்.
ReplyDeleteLovingly,
Lucky Limat
Browse Comics
Thanks Guys. Now i can buy it in T nagar itself.
ReplyDeletemukunthan.
lion comics office number: 04562 272649.
ReplyDeletemadhu.
//Lucky Limat said...
ReplyDeleteT Nagar பஸ் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள ஒரு சிறு புத்தக கடையில் லயன் காமிக்ஸ் கிடைக்கிறது . நான் அங்கே தான் விண்வெளி கொள்ளையர் காமிக்ஸ் வாங்கினேன்.
Lovingly,
Lucky Limat
Browse Comics//
லிமட், நீங்கள் சொல்லும் அந்த கடை கிருஷ்ண வேணி தியேட்டர் அருகில் உள்ள கடையா?
//mukunthan said...
ReplyDeleteThanks Guys. Now i can buy it in T nagar itself.
mukunthan.//
Yes Mukunthan. But it is much better if you can subscribe to the books. this post was meant to only people like Mr mariyappan who, in his profession, keep changing places like covai, pune, chennai etc very often.
//Anonymous said...
ReplyDeletelion comics office number: 04562 272649.
madhu.//
thanks madhu. it is advertised in the sidebar of the blog.
actually i used to buy it from central railway station long time back. then it used to be park station, beach station or tambaram station once daddy shifted to tambaram.
ReplyDeleteit will be nice if such places were mentioned in bangalore as well.
forgot to tell you that i bought a lucky luke mini lion , 2 colour, way back in the 90's in the old parrys bus depot. also bought adhiradi archie there by pressurizing dad (it was 6 rs then).
ReplyDeleteso, there goes the bus stops as well.
நண்பரே,
ReplyDeleteகாமிக்ஸ்களை தேடித்திரியும் ரசிகர்களிற்கு உதவும் பதிவு இது.
தற்போதும் கூட கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் பிரதிகள், வாசகர்கள் திறந்து பார்க்க முடியாத வகையில் ஸ்டெப்ளரால் பிணைக்கப்பட்டிருக்கிறதா :))
இயக்குனர் டாராண்டினோ குறித்த உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
//கனவுகளின் காதலன் said...
ReplyDeleteநண்பரே,
காமிக்ஸ்களை தேடித்திரியும் ரசிகர்களிற்கு உதவும் பதிவு இது.//
நன்றி காதலரே. தங்களின் கனிவான கருத்து உள்ளத்தை குளிர வைத்தது.
//கனவுகளின் காதலன்:
ReplyDeleteநண்பரே,
தற்போதும் கூட கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் பிரதிகள், வாசகர்கள் திறந்து பார்க்க முடியாத வகையில் ஸ்டெப்ளரால் பிணைக்கப்பட்டிருக்கிறதா :))//
ஆமாம், அதனை இன்னமும் மாற்ற முடியவில்லை. என்ன செய்வது? இன்னமும் சிலர் கடையில் வரும் புத்தகங்களை பிரித்து படிப்பதிலேயே கருத்தாக உள்ளனர். அவர்கள் மாறாதவரை இவை எதுவும் மாறா.
//கனவுகளின் காதலன் said...
ReplyDeleteநண்பரே,
இயக்குனர் டாராண்டினோ குறித்த உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//
நண்பரிடம் சில உதவிகளை கேட்டு இருக்கிறேன் (வேறென்ன ஸ்கான்'கள் தான்). அதனால் விரைவில் அந்த பதிவு வந்து விடும்.
ஆமாம் ஜாலி ஜம்ப்பர் அவர்களே ,
ReplyDeleteகிருஷ்ண வேணி தியேட்டர் அருகில் ஐந்து கடைகள் அடுத்து வரும் ஒரு தெருவுக்கு அடுத்து ஒட்டிய கடை . நான் பெரும்பாலும் அங்கே தான் வாங்குகிறேன் .
அன்புடன் ,
லக்கி லிமட்
காமிக்ஸ் உலவல்
யாராவது இலங்கையில் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் கோடி புண்ணியம் கிடைக்கும். பூபாலசிங்கம் புத்தக சாலைக்கு அழைப்பு மேல் அழைப்பு போட்டு என் செல்போன் பில்லு ஏறினதுதான் மிச்சம்.
ReplyDeleteதோழர் ஜாலி!
ReplyDeleteமிகச்சிறப்பாக இந்த வலைப்பூவை கொண்டு செல்கிறீர்கள். எங்களைப் போன்ற ரிடையர்ட் ஆன பெர்சுகள் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!
//Mayooresan said...
ReplyDeleteயாராவது இலங்கையில் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் கோடி புண்ணியம் கிடைக்கும். பூபாலசிங்கம் புத்தக சாலைக்கு அழைப்பு மேல் அழைப்பு போட்டு என் செல்போன் பில்லு ஏறினதுதான் மிச்சம்.//
கொழும்பூவில் பிரின்ஸ் முத்தையா என்று ஒரு கடையில் நமது காமிக்ஸ் இதழ்கள் கிடைத்ததாக நியாபகம். நண்பர் ஜெ அவர்களே இதற்க்கு விடை கூறுங்கள்.
//Lucky Limat said
ReplyDeleteஆமாம் ஜாலி ஜம்ப்பர் அவர்களே ,
கிருஷ்ண வேணி தியேட்டர் அருகில் ஐந்து கடைகள் அடுத்து வரும் ஒரு தெருவுக்கு அடுத்து ஒட்டிய கடை . நான் பெரும்பாலும் அங்கே தான் வாங்குகிறேன் .
அன்புடன் ,
லக்கி லிமட்//
அன்பர் லிமட் அவர்களே, நானும் அங்கு சில முறை புத்தகங்கள் வாங்கி இருக்கிறேன். தகவலுக்கு நன்றி.
//யுவகிருஷ்ணா said...
ReplyDeleteதோழர் ஜாலி!
மிகச்சிறப்பாக இந்த வலைப்பூவை கொண்டு செல்கிறீர்கள். எங்களைப் போன்ற ரிடையர்ட் ஆன பெர்சுகள் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!//
வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்று சொல்ல வந்தேன். இப்போது மாற்றி கொள்கிறேன் - கலைஞர் வாயால் செயல் வீரன் என்ற பட்டம் பெற்ற மகிழ்வை அளிக்கிறது உங்களது பின்னூட்டம்.
உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி தலைவரே. உங்களின் அடிச்சுவட்டில் நடக்கும் மாணவன் நான்.
உண்மையிலேயே அட்டகாசமாக இருக்கிறது உங்கள் தளம். தொடருங்கள் ஜாலி ஜம்ப்பர்.
ReplyDelete//காமிக்ஸ் பிரியன் said...
ReplyDeleteஉண்மையிலேயே அட்டகாசமாக இருக்கிறது உங்கள் தளம். தொடருங்கள் ஜாலி ஜம்ப்பர்//
நன்றி நண்பரே. தொடருங்கள் உங்கள் ஆதரவை.
நண்பரே,
ReplyDeleteமாண்டிரெக் கதைக்கான விமர்சனமும், ஜேம்ஸ் பாண்ட் பதிவும் எப்போது வரும்?
ஆவலோடு காத்து இருக்கிறோம்.
//காமிக்ஸ் காதலன் said...
ReplyDeleteநண்பரே,
மாண்டிரெக் கதைக்கான விமர்சனமும், ஜேம்ஸ் பாண்ட் பதிவும் எப்போது வரும்?
ஆவலோடு காத்து இருக்கிறோம்//
விரைவில், வெகு விரைவில்.
நல்ல விளம்பரங்கள். ஆசிரியர் பார்த்தால் சந்தோஷப்படுவார்.
ReplyDeleteஅடுத்த லயன் கதைசுருக்கம் போட்டிருக்கலாமே. உங்களுடைய ''அந்த'' நண்பருக்கும் நன்றி.
Dear Friends,
ReplyDeleteIs there any shop in and around tmabaram to buy our comics?
Thanks,
Rajesh.