Monday, January 19, 2009

ரபீக் ராஜாவின் ராணி காமிக்ஸ் நினைவுகள்

ராணி காமிக்ஸ் வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, அதை மூன்று கால கட்டங்களில் வரையறுக்கலாம்:



பொற்க்காலம்
வசந்தக்காலம்
இருண்டக்காலம் மேலும் படிக்க

கன்னித் தீவு

'கன்னித் தீவு' என்ற வார்த்தைகள் காமிக்ஸ் ஆர்வம் கொண்டோர்கள் மட்டுமல்ல சராசரி தமிழ் வாசகர்கள் கூட அறிந்தவை. தினத்தந்தியில் 47 வருடங்களாக தொடர்ந்து வெளிவரும் காமிக்ஸ் ஸ்ட்ரிப் கன்னித் தீவு. இது 1961 -இல் வெளிவர தொடங்கியிருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. தற்போதைய கன்னித் தீவு '17,226' நாட்களை தாண்டியுள்ளது.



தொடக்க காலத்தில் இரண்டாம் பக்க அடியில் வெளி வந்தது. பின்னர் இரண்டாம் பக்க மேற்பகுதியில் இன்றுவரை வெளியிடபடுகிறது. பாலன் என்ற ஓவியர் தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார்? 1961-இல் அவருக்கு வயது 20 என்றாலும் கூட தற்போது அவருக்கு 67 வயதாக இருக்க வேண்டும். இது சாத்தியமில்லை. எனவே தற்போதுள்ள பாலனும், ஆரம்ப கால பாலனும் ஒருவரே என்பது கேள்விக்குரியதே! சித்திரங்களின் தரத்தை எடுத்துகொண்டாலும் கூட சற்று கூட ஒப்பிட முடியாத அளவிலேதான் இருக்கின்றன. சிந்துபாத், லைலா, மந்திரவாதி மூசா இவர்கள் தான் முக்கியமான பாத்திரங்கள். எனக்கு தெரிந்தவரை கன்னித் தீவு கதையை 'சுருக்கமாக' இப்படி சொல்லலாம். மேலும் படிக்க

Friday, January 16, 2009

சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி

சென்னை புத்தக திருவிழாவில் காமிக்ஸ் கிடைப்பது பற்றி லக்கிலூக் பதிவில் வந்துள்ள மேட்டர் !!!

///சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி. ஸ்டால் எண் 35, இன்ஃபோ மேப்ஸ் அரங்கில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் ஐந்துரூபாய், ஆறு ரூபாய் விலைக்கு ஏராளமாக கிடைக்கிறது. ரூபாய் நூறு விலையில் பெரிய சைஸ் கவுபாய் ஸ்பெஷலும் அங்கேயே கிடைக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி, மருத்துவர் ப்ரூனோ, கவிஞர் யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட ஏராள பிரபலங்கள் காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வரங்கில் இருக்கும் அருண் என்ற நண்பரை தொடர்பு கொண்டால் புத்தகங்களை விலை மற்றும் தரம் வாரியாக பிரித்து செட்டாக எடுத்துக் கொடுப்பார்.சித்திரக்கதை வடிவிலான சீரிய இலக்கியம் ஒன்று இரு நூலாக விடியல் மற்றும் கீழைக்காற்றில் கிடைக்கிறது. சிம்புதேவனின் ’கி.மு.வில்...’ முழுநீள கார்ட்டூன் தொடர் புத்தகம் நர்மதாவில் கிடைக்கிறது////

மேல் விவரம் இங்கே க்ளிக்
Blog Widget by LinkWithin