Friday, July 24, 2009

முன்னோட்டம் 1: முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? Preview

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

கடைசியாக முத்து காமிக்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இப்போது சரியாக ஐந்து மாதங்கள் கழித்து அடுத்த இதழ் வெளிவர இருக்கிறது. அடுத்து வரப் போகும் முத்து காமிக்ஸ் பற்றிய முன்னோட்ட பதிவு இது.

 

தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான். அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இந்த கதை சரியாக நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. இதனுடைய ஆங்கில மூலம் உலகில் மிகச் சிலரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிட தக்கது. குறிப்பாக ஆன் லைனில் இந்த புத்தகம் கிடைப்பது இல்லை. ஆனாலும் இந்த புத்தகம் நண்பர் ஒருவரிடம் இருப்பதால் இந்த புத்தகம் வெளிவந்த உடனே இதனைப் பற்றிய பதிவை நாம் வெளியிடலாம். என்ன சரிதானே?

முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? -  மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

Muthu Comics 312 Mandrake Nizhal Edhu Nijam Edhu

இந்த இதழை பற்றி சென்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் வந்த விளம்பரம் இதோ (இந்த கதை ஏற்கனவே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு விளம்பரம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது):

முத்து காமிக்ஸ் இதழ் எண் 311ல் வந்த விளம்பரம் - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

Muthu Comics Issue No 311 Dated 03-02-2009 Next Issue

Comics Classics Issue No 24

சென்ற பதிவாகிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் மக்களிடம் சிறப்பான வரவேற்ப்பை பெற்றதை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். அதனை இன்னும் படிக்காத ரசிகர்களுக்கு இதோ ஒரு மீள்-விளம்பரம்:

 

அந்த பதிவை படிக்க இந்த அட்டைப் படத்தை கிளிக் செய்தாலே போதும். அருமையான இந்த கதை சரியாக இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு காணக் கிடைக்காத பொக்கிஷம். இந்த கதை இப்போது உங்களுக்கு உலக அளவில் கிடைக்கும் ஒரே இடம் சிவகாசி தான். உலகில் அனைத்து மொழிகளிலும் மிகவும் அரிதான புத்தகம் இது.

 

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04562 – 262749.

 

உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.

Tuesday, July 21, 2009

காமிக்ஸ் கிளாசிக்ஸ் 24 - விண்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

இடைப் பட்ட காலத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. இனிமேல் அதனைப் பற்றி பேசி பயனில்லை என்பதால், அதனை ஒரு துன்பியல் நிகழ்வாக மறந்து விடுவோம்.

இதோ என்னுடைய அடுத்த பதிவு: புத்தம் புதிய காமிக்ஸ் கிளாசிக்ஸ். என்னுடைய அன்பு நண்பர் ஒருவருன் உதவியால் இந்த பதிவை இட முடிகிறது. அவருக்கு என்னுடைய நன்றி. இந்த பதிவை படிக்கும் முன் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களின் முழு நீள விமரிசனத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவுக்கான சுட்டி இதோ: விண்வெளிக் கொள்ளையர்

இந்த புதிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் மூலம் நம்முடைய மனம் கவர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பத்திப்பகத்தினர் பழைய நினைவுகளுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதில் உணரலாம். அதாவது, பழைய கதைகளை அதே வடிவத்தில் அளிப்பதின் மூலம் அந்த பழைய நினைவுகளை மலர செய்கின்றனர். அவர்களுக்கு நம்முடைய நன்றிகள். நல்ல விடயம் என்னவெனில் அடுத்த இதழும் இரும்புக் கை மாயாவியின் கதை தான். ஆம், களிமண் மனிதர்கள் என்ற கதைதான் அடுத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ் எண் 25.

காமிக்ஸ் கிளாசிக்ஸ் எண் 25- இரும்புக்கை மாயாவி- விண்வெளிக் கொள்ளையர்-முன் அட்டை

காமிக்ஸ் கிளாசிக்ஸ் எண் 25- இரும்புக்கை மாயாவி- விண்வெளிக் கொள்ளையர்-பின் அட்டை

Comics Classics Issue No 24  Front Cover Comics Classics Issue No 24 Back Cover

கண்ணை கவரும் அட்டைப் படம். ஆனால், பின் அட்டையை முன் அட்டையாக மாற்றி அமைத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும். ஏனெனில் இந்த இரண்டு அட்டைகளில் நன்றாக இருப்பது பின் அட்டையே என்பது என்னுடைய கருத்து. உங்களின் எண்ணங்களை பின்னுட்டத்தின் மூலம் தெரிவித்ததால் மகிழ்வேன்.

 

ஒரு சிறிய கேள்வி: இந்த இதழின் முன் அட்டை ஏற்கனவே நமது நெடுநாள் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒன்று. அதனால் இந்த இதழின் அட்டை எதனுடன் சம்பந்தப் பட்டது என்று வாசகர்கள் கூறுவீர்களா? அல்லது நான் தான் முடிவில் தெரிவிக்க வேண்டுமா?

 

இந்த கதையை பற்றி திரு கிங் விஸ்வா அவர்களின் கருத்து இதோ: இரும்புக் கை மாயாவியின் "சூப்பர் ஹீரோ" கால கட்டத்தில் நான் படித்த முதல் கதை இதுவே. அந்த உதிரும் நோய் பற்றி பல காலம் நான் வியந்தது உண்டு.

X-டோல் உபயோகப் படுத்தும் படிக கதிர் துப்பாக்கி, மல்டிமேன் உதவிக்காக வரும் கிராவா கதிர்கள், டார்கத் வரும் ஹோவர் டிஸ்க், உறைய செய்யும் க்ரிஸ்டளிசர் கதிர்கள், பொருட்களை பெரிதாக்கும் கொலஸ்ஸா கதிர்கள், எதிரிகளை அழிக்க அரசாங்கம் உபயோகிக்கும் ட்ரகடான் குண்டு, மாயாவியை குணமாக்கும் நியுக்ளியர் நர்ஸ், கம்மா-ட்ரான் மின் இணைப்பின் மூலம் உருவாகும் வீரிய சைத்தான், அதை அழிக்க நிழல் படை பயன்படுத்திய ட்ரேசர் குண்டு, நிழல் படையின் வோல்டா துப்பாக்கி, ராட்சஸ உருவம் பெற்ற டார்கத் என்று பல ஃபாண்டஸி நிறைந்த கதை இது.

பலருக்கு இந்த கதை பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. இந்த கருத்தில் எனக்கு எப்போதும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

 

இந்த கதையை பற்றி ஏற்கனவே நம்முடைய பயங்கரவாதி தலைவர் அலசி ஆராய்ந்து விட்டதால் நான் அதிகமாக எதுவும் சொல்லப் போவது இல்லை. முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் பாருங்கள்.

விண்வெளிக் கொள்ளையர்-முதல் பக்கம்

விண்வெளிக் கொள்ளையர்-கடைசி பக்கம்

Comics Classics Issue No 24  1st Page Comics Classics Issue No 24  Last Page

சமீபத்தில் ஆசிரியர் திரு எஸ் விஜயன் அவர்கள் மறுபடியும் பழைய பாணியில் இதழ்களை வெளியிடப் போவதாக கூறி இருந்தார். அதாவது நிறைய விளம்பரங்கள் (வரப் போகும் கதைகள், நாயகர்கள், சிறப்பிதழ்கள்), சிறு சிறு கதைகள் (விச்சு, கிச்சு, குண்டன் பில்லி, பரட்டை தலை ராஜா), புதிய பகுதிகள் (வாசகர் ஹாட் லைன்) என்று மீண்டும் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இதழ்களில் வரும் என்று கூறி இருந்தார்.

 

அதனை நிறைவேற்றும் விதத்தில் இதோ இந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதில் நம் மனம் கவர்ந்த இரண்டு விச்சு கிச்சு சிறுகதைகள்.

உங்கள் அபிமான விச்சு கிச்சு சாகசம் 1

உங்கள் அபிமான விச்சு கிச்சு சாகசம் 2

Vichu Kichu Vichu Kichu

ஏற்கனவே கூறியது போல அடுத்த இதழ் இரும்புக் கை மாயாவியின் கதை தான். இது வரை அதிகள் கேள்விப் படாத ஒரு கதை. ஆம், இந்த கதை இதுவரை ஒரே ஒரு முறை தான் வந்து உள்ளது. அதுவும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு. அதனால் இந்த கதையை மறு பதிப்பு செய்யும் ஆசிரியருக்கு ஒரு ஜே.

 

வழமை போல இந்த புத்தகத்திலும் ஜம்போ ஸ்பெஷல் இதழின் விளம்பரம் உள்ளது. முதன் முதலில் பதிவு செய்து நூறு பெயர்களின் பட்டியல் இந்த லயன் காமிக்ஸ் இதில் வெளியிடப் பட்டு உள்ளது (அடியேனும் முதலில் செய்ததால் நம்முடைய பெயரும் ஐக்கியம்).பிறகு பதிவு செய்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப் படும்.

 

இது வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஐநூறைக் கூட தொடவில்லை என்பது மனம் வருந்தக் கூடிய ஒரு செய்தி. என்ன செய்வது? நம்முடைய வாசகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மொக்கை படத்தை பார்க்க சென்றாலோ, அல்லது ஹோட்டலில் சாப்பிட்டாலோ ஆகும் செலவான ருபாய் இருநூறை இதற்க்கு செலவழிக்க மறுக்கிறார்கள்.

 

இந்த பதினெட்டு புத்தகங்களை நீங்கள் ஒரிஜினல் புத்தகமாக வாங்கினால் அதற்க்கு ஆகும் செலவு என்ன தெரியுமா? 360 அமெரிக்க டாலர்கள். அதாவது கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் ருபாய், இந்திய மதிப்பில். நம்முடைய ஆசிரியர் அவர்கள் இப்படி பாடுபட்டு கொண்டு வரும் இந்த புத்தகத்தை யாரும் கண்டுக் கொல்லாமல் இருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.

 

ஒரு விடயம்: இந்த காமிக்ஸ் களஞ்சியமே இதுவரை இந்தியாவில் வந்த மிகப் பெரிய காமிக்ஸ் கதையாகும். இதுவே ஒரு சாதனை. அதனால், அந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற முதலில் அந்த புத்தகத்தை முன்பதிவு செய்யுங்கள்.

அடுத்த கிளாசிக்ஸ் களிமண் மனிதர்கள்

ஜம்போ ஸ்பெஷல் விளம்பரம்

 Next Issue Ad in Last Page Jumbo Spl Ad

இந்த கதை ஆங்கிலத்தில் Valiant இதழில் வந்தது. அந்த இதழின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இப்போது கிடைக்கிறது. அந்த ஒரு பிரதியில் வந்த இரண்டு பக்கங்களை பாருங்கள்.

Valiant 1967_09_02_20

Valiant 1967_09_02_21

Valiant 1967_09_02_20 Valiant 1967_09_02_21

ஆங்கிலத்தில் இந்த கதை முப்பது வாரங்களில் அறுபது பக்கங்களாக வந்தது என்பதால் இந்த கிளாசிக்ஸ் கதையின் பக்கங்களை கவன்த்தேன். பார்த்தால் வெறும் ஐம்பத்தி ஆறு பக்கங்கள் மட்டுமே. என்னடா இது என்று யோசித்ததில், இது தொடர் கதையாக வந்த காலத்தில் முன்கதை சுருக்கம் மற்றும் தலைப்பு என்று ஒவ்வொரு எபிசொடிலும் இரண்டு பேணலை முழுங்கியதால் கடைசியில் இரண்டு பக்கங்கள் குறைந்த மர்மம் புலப்பட்டது.

 

இந்த புத்தகம் கடையில் கிடைக்க வில்லை, எங்கே கிடைக்கிறது என்று விசனப் படாமல் நம்முடைய காமிக்ஸ் புத்தகங்களுக்கு சந்தா கட்டி விடுங்கள். சந்தா கட்டாமல் இருக்க சிலர் கூறும் நொண்டி சாக்கு என்னவென்றால் புத்தகங்கள் ஒரு ஆண்டில் சரியாக வருவதில்லை என்பதே. நண்பர்களே, இந்த சந்தா என்பது ஆண்டு கணக்கில் வராது. புத்தக கணக்கில் வரும்., அதாவது பனிரெண்டு புத்தகங்கள் என்று கணக்கிட்டால் அந்த பனிரெண்டு புத்தகங்கள் தீரும் வரை (ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ) உங்களுக்கு புத்தகங்கள் வரும். ஆகையால் தயவு செய்து சந்தா கட்டிவிடுங்கள்.

 

விரைவில் மற்றுமொரு பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

Blog Widget by LinkWithin