இந்தாருங்கள் சுட்டி : http://tamilcomicsulagam.blogspot.in/2013/07/comic-cuts-50-news-50.html
நன்றி !!
உலகெங்கும் உள்ள தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி. வாருங்கள், வந்து இணைந்துகொள்ளுங்கள்... நமது இளவயது ஈர்ப்பில் மீண்டும் சென்று இணைந்துகொள்வோம்...
நாளைமுதல் புதியதொரு ஆண்டு மலர்கிறது. புத்தாண்டுகளில் எப்போதுமே ஏதாவது ஒரு விஷயத்தை கடைபிடிக்க எண்ணுவதுண்டு (உதாரணமாக டயரி எழுதவேண்டும், காலையில் ஜாக்கிங் செல்ல வேண்டும் என்றெல்லாம்). ஆனால் ஒவ்வொரு வருடமும் முதல் ஐந்து நாட்கள் அல்லது மிஞ்சிப் போனால் பத்து நாட்கள் மட்டுமே இந்த ரெசல்யூஷன் வரும். பின்னர் பழைய குருடி கதைதான். ஆனால் இந்த முறை மட்டும் காமிக்ஸ் உலக நண்பர்களுக்காக ஒரே ஒரு வேண்டுகோள் வைத்து அதனை அனைவருமே பின்பற்ற ஆசைப்படுகிறேன்.
மேலே இருக்கும் அழகான இந்த சித்திரத்தை பாருங்கள். லக்கிலூக்கின் அதிதீவிர எதிரியான டால்டன் சகோதரர்களும், அதிரடிப்போடியன் பில்லியுமே அழகாக நமக்காக நட்புடன் போஸ் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். சர்ரியலிச உண்மைகளை விளக்கினால் இவர்கள் வெறும் கதை மாந்தர்கள் மட்டுமே. கதையில் சண்டை போடும் இவர்கள் கதை களனுக்கு வெளியில் இப்படித்தான் இந்த கதாசிரியரின் பார்வையில் இருப்பார்கள். அப்படி இருக்க, இந்த கதைகளின் தீவிர ரசிகர்களாகிய நாம் மட்டும் என் சண்டை, சச்சரவு என்று புழுதியை அடுத்தவர் மீது வாரியிறைக்க வேண்டும்?
என்னுடைய சிறு வயதில் பாடப்புத்தகத்தில் இந்த வாசகங்கள் இருக்கும். எனக்கு மிகவும் பிடித்தவை அவை:
"இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்".
இந்த வாசகத்தை சிறிதே மாற்றி,
"காமிக்ஸ் ரசிகர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்" என்று செயல்படலாமே?
தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
இந்த வருடம் (2011) நம் அனைவருக்கும் மிகவும் சோதனையாக அமைந்தது கண்டு வருத்தம் அடைந்தாலும், அடுத்தது என்ன என்று எதிர்நோக்குகையில் குகையின் முடிவில் வெளிச்சம் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. ஆமாம், தோழர்களே. நம்முடைய அபிமான லயன் காமிக்ஸ் இந்த இன்டர்நெட் யுகத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதன் முதல் கட்டமாக இதோ எடிட்டர் விஜயன் சாரின் பிரத்யேக வலைப்பூ:
http://lion-muthucomics.blogspot.com/
மீள்வருகையின் முதல் கட்டமாக அற்புதமான ஆர்ட் பேப்பரில் உயர்தர அச்சில் முழுவண்ணகலவையில் ஒரு மீள்வருகை சிறப்பு இதழ் தயாராகி வருகிறது. நேற்று சிவகாசி சென்ற நான் மேலும் பல விவரங்களை சேகரித்து வந்துள்ளேன். அதன் விளைவே இந்த பதிவு.
லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் வாசகர்கள் ஒரு விஷயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். தமிழில் தரமான அச்சில், நல்ல தாளில், தெளிவான சித்திரங்களுடன், திறமையான மொழிபெயர்ப்புடன் காமிக்ஸ் படிக்க வேண்டுமெனில் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலக எண்ணிற்கு போன் செய்து (04562-272649) சந்தா விவரங்களை கேட்டறிந்து சந்தா கட்டவும், உங்கள் வீடு தேடி காமிக்ஸ் புத்தகங்கள் வந்து சேரும். இந்த புத்தகத்தில் உள்ள கதை விவரங்கள்:
1. லக்கி லுக் ஒற்றர்கள் ஓராயிரம்
2. கேப்டன் பிரின்ஸ் - பரலோகப்பாதை பச்சை
3. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை
4. எஜன்ட் காரிகன் - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்
5. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை
புத்தகத்தின் அட்டைப்படங்கள்: (நன்றி விஜயன் சார்)
லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு முகப்பு அட்டை | லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு பின் அட்டை |
இந்த வருடம் ஒரு மாதம் விடுமுறையில் வந்து இருப்பதால் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்க ஆவல். குறிப்பாக அய்யம்பாளையம் அவர்களை.
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி. வணக்கம்.