தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
நீண்ட நாட்கள் ஆகி விட்டது நாம் சந்தித்து. இந்த இடைப்பட்ட காலத்தில் சில நல்ல விஷயங்கள் நடந்து உள்ளன. நம்முடைய சக காமிக்ஸ் நண்பர் லவ்டேல் மேடி அவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. திருமணம் இந்த மாத இறுதியில் ஈரோட்டில் நடைபெற உள்ளது. நான் கலந்து கொள்ள உள்ளேன், சக காமிக்ஸ் நண்பர்களை சந்திக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையுமே.
மேலும் நெடு நாள் காமிக்ஸ் வாசகர் ஹாஜா இஸ்மாயில் அவர்கள் ஒரு காமிக்ஸ் பிளாக் ஆரம்பித்து உள்ளார். இங்கே சென்று அதனை ரசிக்கவும். காமிக்ஸ் உலகின் முடி சூடா மன்னரைத்தான் காணோம். அவரை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி அவர் தன்னுடைய பணி நிமித்தமாக அயல் நாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். எங்கிருந்தாலும் வாழ்க தலைவரே.
புத்தக விவரங்கள்
தலைப்பு : SWEET CAROLINE
எழதியவர் : பீட்டர் ஒ’டான்னல்
ஓவியர் : நெவில் கால்வின்
முதலில் வெளியானது : 29-11-1983 முதல் 19-04-1984 வரை (120 Strips)
வெளியானது: EVENING STANDARD (5815-5914A)
இந்தியாவில் : லயன் காமிக்ஸ்
தமிழாக்கம் : S.விஜயன்
வெளியீட்டு எண் # 207 தமிழ்
தலைப்பு : கொலை செய்ய விரும்பு!
முதலில் வெளியானது : நவம்பர் 06, 2009
வழமை போல புத்தகத்தில் மிகுந்த ரசிக்கத்தக்க பகுதி ஆசிரியரின் ஹாட் லைன் தான். இதோ, அந்த பக்கங்கள். ஆம், வழகத்திற்கு மாறாக இந்த இதழில் இரண்டு பக்கங்கள் எழுதி உள்ளார் விஜயன் சார்.
கதையின் முதல் இரண்டு பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:
கதை விமர்சனம்: வழமையான மாடஸ்டி கடைக்கான பிளாட் தான் இதிலும் உள்ளது. மாடஸ்டியும், வில்லியும் ஓய்வு எடுக்க அமைதியான இங்கிலாந்து கிராமபுரத்தில் இருக்கும்போது அவர்களின் நண்பர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கும்போது.
விசாரணையில் இந்த கொலை ஒரு புதிய கூலிக் கும்பலின் வலிமையை பறைசாற்ற ஒரு விளம்பரம் என்று அறியும்போது நண்பர்கள் இருவரும் இந்த புதிய கும்பலை ஒழிக்க சபதம் மேற்கொள்கின்றனர். அந்த கும்பலை பற்றிய விவரங்களை அறிய ஒரு கிரிக்கெட் பந்துதான் மாடஸ்டிக்கு உதவுகிறது.
மேலும் தகவல் கொடுத்த நபரின் மனைவியை அந்த கும்பல் கடத்தி சென்று பிணையக்கைதியாக வைத்து இருக்கின்றனர். அப்போது மேஜர் டர்ரன்ட்டின் நண்பி ஒருவரும் இந்த கும்பலால் மிரட்டப் படுவதை அறிந்த மாடஸ்டி வலிய சென்று இந்த கும்பலின் இலக்கு ஆகிறாள். அதனால் எதிரிகளால் கைதாகிறாள் மாடஸ்டி.
- வில்லி கார்வின் என்னவானார்?
- மாடஸ்டி இருக்குமிடம் தெரிந்ததா?
- மேஜர் டர்ரன்ட்டின் நண்பி கொலை மிரட்டலில் இருந்து தப்பித்தாரா?
- பிணையக்கைதியை காப்பாற்ற முடிந்ததா?
- அந்த புதிய கூலிக் கும்பல் யார்?
என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் இந்த கதை சிறப்பாக அமைந்து உள்ளது. படிக்க தவறாதீர்கள். கதை பற்றி விரிவாக பின்பு பேசலாம். இதோ இந்த புத்தகத்தில் உள்ள மற்ற கதை விளம்பரங்கள்:
முடிவில் சிங்கத்தின் சிறு வயதை நாம் விட முடியாது அல்லவா? இதோ அந்த பக்கங்கள்:
//சாம்பியன்ஸ் கோப்பை பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சார்ந்த ஒரு கதையை வெளியிட இருக்கும் நம்முடைய ஆசிரியரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆமாம், இந்த கதையில் கிரிக்கெட் ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வில்லி கார்வின் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதை கவனியுங்கள்.//
என்று நம்முடைய முந்தைய பதிவில் எழுதி இருந்தோம். ஆனால், அதற்க்கு பின்னர் சாம்பியன்ஸ் கோப்பையும், ஆஸ்திரேலியா பயண தொடரும் முடிந்த நிலையிலேயே இந்த புத்தகம் வந்து உள்ளது. இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் வேளையில் வந்து என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டது இந்த புத்தகம். இதோ இந்த புத்தகத்தின் அட்டைப்பட மாதிரியும், ஆங்கில வடிவத்தின் முதல் பக்கத்தின் பிரதியும்.
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஈரோட்டிற்கு வரலாம்.
நன்றி. வணக்கம்.
பின் குறிப்பு: இந்த பதிவில் முதலில் உள்ள மாடஸ்டி படம் ஒரு அரிய படம் என்பதால் அதனை இங்கு அளித்து உள்ளேன். புகழ் பெற்ற ஓவியர் ஸ்டீபன் ரிச்சர்ட் போல்டேரோ என்ற ஓவியர் வரைந்த மாடஸ்டி அட்டைப்படம் இது. அவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்: பியர் ஏல்லி