தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு தேக்க நிலை வந்துள்ளது என்னவோ மறுக்க இயலாத உண்மைதான். அதனை போக்க என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது இருட்டில் உள்ள புத்தகம் போல இருக்கிறது. படிப்பதற்கு ஒரு வெளிச்சம் தேவை. இந்த நிலை எப்போது மாறும் என்ற ஒரு ஆயாசம் வந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. பார்க்கலாம், நிலைமை ஒரு நாள் மாறும் என்பது உறுதி, ஆனால் அது எவ்வளவு சீக்கிரம் என்பதுதான் கேள்வி.
ஆனால், சினிபுக் நிறுவனத்தினர் ஆங்கிலத்தில் சொன்னமாதிரி வெளியிட்டு விட்டனர். விலை ருபாய் நானூற்றி ஐம்பது (ஒரே ஒரு கதை மட்டும் - அதாவது முதல் பாகம் மட்டும் - முழு வண்ணத்தில்). உலக அளவில் விற்பனை சந்தை உள்ள வசதி, ஆங்கில புத்தகங்களுக்கு இந்தியாவில் உள்ள மோகம், இந்த கதையின் பிரம்மாண்டம், சமீபத்தில் படமாகவும் வந்த விளம்பர வசதி என்று பல காரணிகளை சொன்னாலும்கூட, தமிழில் படிக்கும் அந்த சுகம் இதில் இல்லைதான்.
இப்போதைக்கு முதல் இதழ் மட்டும்தான் வெளிவந்துள்ளது, மற்ற இரண்டு இதழ்களும் அடுத்த இரண்டு மாதங்களில் வந்துவிடுமாம். இதோ அந்த அட்டைகளின் அணிவகுப்பு.
இரத்தப் படலம் - பாகம் 1 அட்டை | இரத்தப் படலம் - பாகம் 2 அட்டை | இரத்தப் படலம் - பாகம் 3 அட்டை |
இந்த புத்தகத்தின் சில சாம்பிள் பக்கங்களை அந்த நிறுவனத்தினரே கொடுத்துள்ளனர். பார்த்து ரசியுங்கள்.
இரத்தப் படலம் - ஆங்கிலத்தில் - முழு வண்ணத்தில் – பக்கம் 1 | இரத்தப் படலம் - ஆங்கிலத்தில் - முழு வண்ணத்தில் - பக்கம் 2 |
இந்த கதை ஒரு மறக்க முடியாது சரித்திரம் ஆகும். பல தடவை படிக்கும்போதும் எனக்கு கண்ணில் நீர் வராத குறைதான், ஆம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த உணர்சிபூர்வமான கதை இது. இந்த கதையின் சில ஓவியங்கள் ஆன்லைனில் கிடைத்தன. உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.
நேற்று நம்முடைய சக தோழர் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களுக்கு பிறந்த நாள், தாமதமானாலும் கூட வாழ்த்து சொல்வதில் தவறில்லை. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தோழர். அவருக்கு பிடித்த மேஜர் ஜோன்ஸ் அவர்களின் படமும் இந்த வரிசையில் இருப்பது அவருக்கு மகிழ்வை தரும் என்றே நம்புகிறேன்.
நண்பர் விஸ்வா கேள்வி பதில்களுக்கு என்று தனியாக ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளார். காமிக்ஸ் சம்பந்தமான அனைத்துக் கேள்வி பதில்களுக்கும் அங்கு விடை கிடைக்குமாம். சுட்டி இதோ: தமிழ் காமிக்ஸ் உலகம்.
அங்கு கேட்க வேண்டிய கேள்விதான், இருந்தாலும் இங்கேயே எழுப்புகிறேன் - இரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் எப்போது வரும்?
நன்றி, வணக்கம்.