தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்ம்பரின் வணக்கம்.
காமிக்ஸ் ஹீரோ என்றாலே அவர் சில வகைகளில் அடங்கி விடுவார்:
சூப்பர் ஹீரோ (ஸ்பைடர், ஆர்ச்சி. இரும்புக் கை மாயாவி)
உளவாளிகள் (ஜேம்ஸ் பாண்ட், மாடஸ்டி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட்)
அநீதிகளை எதிர்த்து போராடுபவர் (டெக்ஸ் வில்லர், மற்ற கௌபாய்கள், ஜான் சில்வர்)
அதைப் போலவே ஹீரோ என்றால் அவர் அசாதாரண மன வலிமையும், உடல் வலிமையும் பெற்று தோற்றத்திலேயே பலரை தன்னுடைய திறமைகளை பற்றி கேள்வி எதுவும் எழாமல் கன்வின்ஸ் செய்பவராகவும் இருக்க வேண்டும்.
ஆனால், இந்த ஸ்டிரியோடைப் வட்டத்தில் சிக்காமல் இருக்கும் ஒரு சில ஹீரோக்களில் முதன்மையானவர்: ரிப் கிர்பி.
ஒரு கண்ணாடி அணிந்த ஹீரோவை நான் எந்த கதையிலும் படித்தது இல்லை (கிளார்க் கென்ட் சூப்பர் மேன் ஆக இல்லாத போது கண்ணாடி அணிவதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது). அதிலும் ஹீரோக்கள் தனக்கு உதவியாக பெரும்பாலும் புத்திசாலியான ஒரு பெண்ணையோ (ஜானி நீரோ - ஸ்டெல்லா) அல்லது உடல் பலம மிக்கவரையோ (லாரன்ஸ் - டேவிட்) தான் தன்னுடைய சகாவாக கொண்டு இருப்பார்கள்.
ஆனால், ஐம்பது வயது கிழவரை தன்னுடைய துணைவராக கொண்டு, கண்ணாடி அணிந்து கொண்டு துப்பறியும் ஒரு காமிக்ஸ் ஹீரோ உண்மையிலேயே புதுமையானவர்தான். இந்த வித்தியாசமான கான்செப்ட் மூலம் ரிப் கிர்பி முதன் முதலில் வாசகர்கள் மனதை கவர்ந்தார்.
அவரைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவு ஒரு டீசர் தான்.
உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.