Sunday, September 20, 2009

முன்னோட்டம் 2:லயன் காமிக்ஸ் 207-கொலை செய்ய விரும்பு

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான் (அந்த முதல் முன்னோட்டத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்). அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் கூட லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.

சரி வெறுமனே அட்டைப் படங்களை மட்டும் போடாமல் வேறு சில தகவல்களையும் வழங்கலாம் என்று நினைத்ததால் இந்த பதிவு தொடர்கிறது. சென்ற இதழ் மாண்டவன் மீண்டானில் அடுத்த லயன் காமிக்ஸ் பற்றிய விளம்பரம் இப்படி ஆக வெளியாகி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Next issue Ad

வழமை போல இந்த இதழையும் நாம் ஏற்கனவே படித்து விட்டதால் இதோ இந்த இதழின் சில உள் படங்களை விளம்பரம் போல மாற்றி அமைத்ததின் விளைவை பாருங்கள்.

Next Issue A
Next Issue B
Next Issue c
Next Issue makeup

என்ன நண்பர்களே, இந்த முன்னோட்டம் பிடித்து இருந்ததா? என்ன பிடிக்கவில்லையா? சரி, சரி, இதோ இந்த லயன் காமிக்ஸ் புத்தகத்தின் முழு படம்.

both

சாம்பியன்ஸ் கோப்பை பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சார்ந்த ஒரு கதையை வெளியிட இருக்கும் நம்முடைய ஆசிரியரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆமாம், இந்த கதையில் கிரிக்கெட் ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வில்லி கார்வின் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதை கவனியுங்கள்.

இந்த புத்தகம் இன்னும் ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் வந்து சேர்ந்து விடும். அப்போது இதனை பற்றிய முழுமையான விமர்சனத்தை பார்க்கலாம். வழமை போல இந்த புத்தகம் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரே பதில்: தயவு செய்து சந்தா தொகையை உடனே செலுத்துங்கள் என்பதுதான். அப்படி முடியாதவர்கள், இந்த பதிவை படியுங்கள்.

நன்றி, வணக்கம்.

Saturday, September 12, 2009

அடுத்த பதிவு?

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

இந்த புத்தகம் வெளிவந்தபோது அமோக வரவேற்ப்பை பெற்றது. தற்போதைய ரசிகர்களுக்கு இது அந்த அளவுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் இது ஒரு கிளாசிக் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.

 

இந்த பதிவு ஒரு டீசர் தான். முழுமையான பதிவு அடுத்த வாரத்தில் வெளிவரும். அதற்குள் இந்த படத்தை பார்த்து இது எதைப் பற்றியது என்று கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். 
என்னை மாதிரி இருக்கும் சிலருக்கு இதோ சில குளு'க்கள்:
 
 
* இந்த புத்தகம் எண்பதுகளில் வந்தது.
* இந்த புத்தகத்தின் கர்த்தா தற்போது தமிழ் சினிமாவில் இருக்கிறார்.
* இந்த புத்தகம் கிடைக்காதா என்று இன்னமும் பலர் தேடி அலைகின்றனர். ரேர் புத்தகம்.
* இதன் கதை சிறைச்சாலையில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் சொல்லப்படும்.
விடைகளை கமெண்ட் மூலமும் தெரிவிக்கலாம்.
நன்றி வணக்கம்.

Friday, September 4, 2009

தமிழ் கிராபிக் நாவல் - மோட்சத்திற்கு அப்பால்

 

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

நம்முடைய சென்ற பதிவாகிய சென்னையில் ஒரு காமிக்ஸ் காலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி. வாசகர்களில் பலரும் காமிக்ஸ் கிடைக்குமிடங்களை பற்றி தகவ தந்தது மகிழ்வை அளித்தது. இதைப் போலவே அனைத்து ரசிகர்களும் தங்களின் காமிக்ஸ் வாங்கும் கடைகளை தெரிவித்தால் அது புதிய மற்றும் பழைய வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த பதிவு ஒரு புதிய முயற்சியை பற்றிய பதிவாகும். தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே இப்படி ஒரு முயற்சி நடந்தது இல்லை என்று இந்த புத்தகத்தின் பதிப்பாளர் கூறுகிறார். அதுவும் இல்லாமல் இந்தியாவிலேயே இதுதான் முதல் முயற்சி என்று வேறு அவர் கூறுகிறார். ஆம், நம்முடைய இந்த பதிவு தமிழின் முதல் கிராபிக் நாவலைப் பற்றியது.

 

ஆங்கில புத்தக உலகில், தற்போது பலரும் கிராபிக் நாவல், கிராபிக் நாவல் என்று கூறிக் கொண்டு ஒரு முழு காமிக்ஸ் கதையை நம் தலையில் கட்டி விடுகின்றனர். முறையாக இந்த கதைகள் இதழ்களில் வந்தால் விலை குறைவாக இருக்கும். ஆனால் அதனை பப்ளிகேஷனில் போட்டு கிராபிக் நாவல் என்று சொல்லி விலையை பல மடங்கு கூட்டி மிளகாய் அரைக்கின்றனர். சரி, சரி, இதனைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இப்போது நம்முடைய தமிழ் கிராபிக் நாவலைப் பற்றிய பதிவுக்கு செல்வோம் வாருங்கள்.

 

மருத்துவர் எல். பிரகாஷ் அவர்களை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். சில வருடங்களுக்கு முன்பு அவர் பெயர் அடிபடாத ஊடகமே இல்லை. அப்படி ஒரு நிலைக்கு பின்னர் அவர் தற்போது சிறைச் சாலையில் இருந்தவாறே பல புத்தகங்களை எழுதி வருகிறார். அவரைப் பற்றி தற்போதைய நிலையில் நான் எது சொன்னாலும் உங்கள் காதுகளில் ஏறாது என்பதால் மூத்த பத்திரிக்கையாளரும், ஊடக உலகில் பெரிதும் மதிக்கப் படும் மிகச் சிலரில் ஒருவராகிய திரு அசோகன் அவர்கள் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

 

Dr Prakash Intro Dr Prakash Intro Editoial 1

Dr Prakash Intro Editoial 2

 

இப்படியாக சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்த பிரகாஷ் அவர்கள் எப்படி கிராபிக் நாவல் உலகில் நுழைந்தார் என்பதே ஒரு தனி கதை தான். அதனை நான் கூறுவதை விட, எடிட்டர் அசோகன் சாரே திறம்பட சுவைபட கூறுவதை படியுங்கள்.

Graphic Novel 3 Motchathirkku appaal editorial 1 Graphic Novel 3 Motchathirkku appaal editorial 2

 

இவ்வாறாக வேறு ஒருவர் மறுத்து விட்டதாலும், அதிகமாக காசு கேட்டதாலும் தான் மருத்துவர் பிரகாஷ் அவர்கள் தானே வரைய ஆரம்பித்தார். இவருடைய கதைகளுக்கு இவரே சித்திரங்கள் வரைவது நமக்கெல்லாம் ஆச்சர்யம் அளித்தாலும் பல காமிக்ஸ் ஜாம்பவான்கள் இப்படித்தான் என்பதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.

 

Graphic Novel 3 Motchathirkku appaal cover 1 Graphic Novel 3 Motchathirkku appaal cover 2

 

இந்த மோட்சத்திற்கு அப்பால் என்ற கிராபிக் நாவல் இருநூற்றி நாற்பது பக்கங்களை கொண்ட ஒரு முழு நாவல் ஆகும். இதோ அந்த நாவலின் முதன்மை பக்கங்கள்:

 

Graphic Novel 3 Motchathirkku appaal Page 1 2

 

இந்த லதையை சொல்லி இதனை வாங்க விடாமல் தடுக்க எனக்கு மனமில்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன், இந்த தமிழ் கிராபிக் நாவல் ஒரு அற்புதமான சயன்ஸ் பிகஷன் கதையாகும். விண்வெளி கதைகளை விரும்பும் ரசிகர்கள் இதனை தயவு செய்து மிஸ் செய்ய வேண்டாம். கதையின் முக்கிய அம்சமே நாயகனின் துணையாக வரும் ஒரு உயிரினம் தான். அது என்ன என்பதை இங்கு யாராவது இந்த நாவலை வாங்கி விட்டு கூறினால் நான் மகிழ்வேன்.

 

Graphic Novel 3 Motchathirkku appaal End Page

 

உண்மையில் இந்த இடத்தில் முடியும் இந்த கதையில் நான் மிகவும் அதிர்ச்சி கொண்டேன். ஏனென்றால் கதாநாயகனின் உடன் இரு துண்டுகளாக வெட்டப் பட்டு அவன் மரணம் அடையும் நிலையில் இந்த கதை முடிகிறது. ஆனால் அதனை இப்படியே முடிக்காமல் டைரக்டர்ஸ் கட என்று ஆங்கில படங்களில் கூறுவதை போல தன்னுடைய கிரியேட்டர்ஸ் கட மூலமாக கதையை தொடர்கிறார் மருத்துவர் பிரகாஷ்.

Graphic Novel 3 Motchathirkku appaal End Real end Graphic Novel 3 Motchathirkku appaal ad

இப்படியாக தொடர்ந்த கதை ஒரு வழியாக முடிகின்றது. உண்மையில் இதுவும் ஒரு சீரிஸ் போல தொடரும் என்றே தோன்றுகிறது. புத்தகத்தின் உள்ளே பிரகாஷ் அவர்கள் எழுதிய சில லேட்டஸ்ட் புத்தகங்களில் விளம்பரங்கள் இருப்பதை காணலாம். படங்களின் தரம் பற்றி பேசுபவர்களுக்காக இந்த புகைப் படங்கள்: சமீபத்தில் நான் கண்ட ஒரு ஆங்கில கிராபிக் நாவலின் அட்டைப் படம்,உள் பக்க படங்கள் மற்றும் அதன் விலை. இப்போது இந்த படங்களையும் நம்முடைய தமிழ் கிராபிக் நாவலின் படங்களின் தரத்தையும் கனிப்ப்புங்கள். பின்னர் விலையை சற்று பாருங்கள். (புகைப் படங்களை கிளிக் செய்தால் படம் பெரிதாக திறக்கும்).

notes of a war story cover notes of a war story inner page notes of a war story price

 

தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும் இந்த புத்தகங்களை சற்றே வாங்கி படித்து பாருங்களேன் தோழர்களே. இப்படி பட்ட முயற்சிகளை நம்மைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்கள் ஊக்குவிக்காவிட்டால் வேறு யார்தான் செய்வார்கள்?

Blog Widget by LinkWithin