
தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
எப்போ வரும், எப்போ வரும் என்று பலரும் காத்திருந்த லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல்இதழ் ஒரு வழியாக வந்தே விட்டது. நேற்றே வந்திறங்கிய இந்த புத்தகங்களின் முதல் பக்கங்களை அனுப்பியமைக்கும், என்றும் அன்புடன் இருக்கும் நட்பிற்கும் திரு கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றி. தயவு செய்து தாமதிக்காமல் உடனடியாக வாங்கி விடுங்கள். பின்னர் தேடினாலும் கிடைக்காது.
இதோ, அந்த அட்டைப் படங்கள்:
வழக்கம் போல என்றுமே லயன் மற்றும் முத்து காமிக்ஸ் புத்தகங்களில் முதலில் படிப்பது ஆசிரியரின் ஹாட் லைன் தான். இதோ, அந்த பக்கங்கள். ஆம், வழகத்திற்கு மாறாக இந்த இதழில் இரண்டு பக்கங்கள் எழுதி உள்ளார் விஜயன் சார். சென்ற புத்தகமாகிய கொலை செய்ய விரும்பு ஹாட் லைனும் இரண்டு பக்கங்களே என்றாலும் அவை சிறிய வடிவமைப்பில் இருந்தவை.
இந்த புத்தகத்தின் பின்னால் இருந்த கடின உழைப்பை பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள் மற்றுமொரு ஹாட் லைனாக:
முதன்முறையாக இந்த கதாபாத்திரங்களை நம்முடைய மனக்கண் முன்னே உலாவ விட்ட கதையாசிரியர்களை பற்றி: மேலும், இந்த புத்தக தொடரில் பதிமூன்றாம் பாகமானது ஒரு வித்தியாசமான ஒன்றாகும். கிட்டத்தட்ட ஒரு கதை சுருக்கம் போல இருக்கும் (முந்தைய பனிரெண்டு இதழ்களுக்கும்). அந்த பதிமூன்றாம் பாகத்தை தனி இதழாக ஆசிரியர் வெளியிட இருப்பது மற்றுமொரு சிறப்பு.
அடுத்து வரப்போகும் எட்டு இதழ்களின் முன்னோட்டங்களை ஏற்கனவே கிங் விஸ்வாவின் இந்த பதிவில் பார்த்துவிட்டோம், இருந்தாலும் நெடுநாள் கழித்து லயன் காமிக்ஸில் எட்டு கதை விளம்பரங்கள்: பேக் டு பார்ம்?
இந்த ஏழு புத்தகங்களையும் முன்பதிவின் மூலம் வீடு தேடி வரச்செய்ய உடனடியாக இந்த முன்பதிவு கூப்பனை நிரப்பி அனுப்புங்கள்: மூன்று மாதத்தில் ஏழு புத்தகங்களும் வந்து சேரும்.
அடுத்தபடியாக, அனைவராலும் விரும்பி படிக்கப்படும் ஒரு தொடர்: சிங்கத்தின் சிறு வயதில் (பதினைந்தாம் பாகம்):
இந்த புத்தகத்தை பற்றிய முத்துவிசிரியின் முத்தான பதிவு இங்கே: http://muthufanblog.blogspot.com/2010/10/wait-is-over.html
அந்த பதிவின் மூலம் தெரியவரும் மற்றுமொரு முக்கியமான விஷயம்: தமிழ் காமிக்ஸ் உலகம் இணையதளத்தில் விரிவான, தெளிவான பதிவொன்று விரைவில் வரும்.
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி. வணக்கம்.