தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
இரத்தப்படலம் கதையை படித்து முடித்துவிட்டு ஆவலுடன் அடுத்த புத்தகங்களை எதிர்பார்த்திருக்கும் வேளையில், இரத்தப்படலம் கதையை எழுதிய ஆசிரியர் ஷான் வான் ஹாமே அவர்களை பற்றி ஆசிரியர் விஜயன் சாரின் ஒரு சிறுகுறிப்பு: இதனை படித்துவிடுங்கள், பின்னர் பதிவை தொடருங்கள்.
இரத்தப்படலம் கதையை எழுதிய ஆசிரியர் ஷான் வான் ஹாமே அவர்களை பற்றி தீவிரமாக தேடி, அலசி ஆராயந்துக்கொண்டிருக்கையில், அவர் கதை எழுதி, அந்த கதை திரைப்படமாக தியேட்டரில் வெளிவந்துள்ளது என்பதைக்கேள்விப்பட்டவுடன், உடனடியாக இந்தப்பதிவினை இட்டுவிட்டேன்.
இந்த படமானது டை ப்ளுதோஷே என்ற ஷான் வான் ஹாமேவின் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்ட உருவாக்கப்பட்ட ஒன்றாகும். உண்மையில் இந்த காமிக்ஸ் கதை ஒரு சீரியஸ் ஆனா கதையாகும். ஆனால் இந்த சினிமா படமாக்கப்பட்ட விதத்தில் இருந்து இது ஒரு பிளாக் காமெடி என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. காமிக்ஸ் கதையில் பெண்ணின் தகப்பனார் ஆக வரும் அந்த நபரும் (ஹெர்மன் வால்சர் - திரைப்படத்தில் நடிகர் அர்மின் ரோடே) மற்றும் அந்த தலைமை சமையல்காரரும் (பிரான்ஸ் பெர்கர் - திரைப்படத்தில் நடிகர் உயே ஓஸ்சென்கேனேக்ட் ) இருவரும் மிகவும் சீரியஸ் ஆன கதாபாத்திரங்கள் ஆக வருபபவர்கள். அதுவும் நட்டத்தில் இயங்கும் அந்த ஹோட்டலை நடத்தி துன்பத்தில் இருக்கும் பிரான்ஸ் பெர்கரின் கதாபாத்திரம் ஒரு சிறப்புவாய்ந்த ஒன்றாக இருந்தாலும், அடிக்கடி கோபப்படும் பெண்ணின் தந்தையாக வரும் ஹெர்மன் வால்சர் பாத்திரம் தான் கதையின் மையம். அந்த பாத்திரத்தின் முன்கோபமே இந்த மொத்தக்கதைக்கும் காரணம்.
ஆம், மகளின் கல்யாண விழாவில் சமையல்காரர் சற்று மரியாதைக்குறைவாக நடந்து கொண்டார் என்று அவர் கோபித்துக்கொள்ள, அதன் விளைவாக நடக்கும், (சற்றும் நம்ம இயலாத) சம்பவங்களின் கோர்வையே இந்த நிமிடங்கள் ஓடும் ஜெர்மன் திரைப்படம். இந்த படம் ஆங்கிலத்தில் இன்னமும் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. இருந்தாலும் ஜெர்மனியில் இருந்து அந்த தலைப்பை ஆங்கில மொழியாக்கம் செய்தால் "பிளடி மேரேஜ்" என்று சொல்லாம்.
குறிப்பிட்டு சொல்வதானால் இரண்டு கர்வம் கொண்ட ஆண்களின் மோதல் என்று இந்த படத்தை சொல்லலாம். அதிலும் குறிப்பாக அந்த இறுதிக்காட்சியில் இருவரும் பேசாமல் முறைத்துக்கொள்ளும் காட்சியும், அதனை தொடரும் அந்த திக் திக் கிளைமேக்ஸும் சூப்பர்.
படத்தின் போஸ்டரே ஆயிரம் கதைகளை சொல்லும் விதத்தில் திறம்பட உருவாக்கப்பட்டு உள்ளது. கண்டு களியுங்கள்: அதுவும் பெக்கின்பா படங்களில் இருப்பதைவிட அதிகம் துப்பாக்கிகள் என்று சொல்லும் விததிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
படத்தின் கிரெட்டிடுகளில் நம்ம ஷான் வான் ஹாமே அவர்களின் பெயரை கவனியுங்கள்:
இந்த காமிக்ஸ் கதைதான் இப்படி திரைப்படமாக மாறியது: (இதில் இருக்கும் அந்த ஹெர்மான் என்பவர்தான் நம்ம கேப்டன் பிரின்ஸ் கதைகளின் மூலம் நம்மை மகிழ்விப்பவர்):
படத்தின் மற்ற விவரங்கள்:
விக்கிபீடியா: http://de.wikipedia.org/wiki/Die_Bluthochzeit
IMDB லிங்க்: http://www.imdb.com/title/tt0382572/
போஸ்டர்: http://www.imdb.com/media/rm1826984704/tt0382572
Film டிரைலர்: http://www.imdb.com/video/screenplay/vi403178265/
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி. வணக்கம்.