Friday, October 5, 2007

காமிக்ஸ் நினைவுகள்

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் என இன்று புகழ்பெற்று விளங்கும் திரைநாயகர்களும் காமிக்ஸ் கதாநாயகர்கள் அல்லவா? கார்ட்டூன் சானல் போன்றவை காமிக்ஸை அசைபடமாக காட்டுகின்றன. ஆனாலும் அந்தக் காலத்தில் சின்னஞ்சிறிய கையடக்க காமிக் புத்தகம் படித்த ஆனந்தம் இதில் கிட்டுவதாக தோன்றவில்லை. இப்போதைய குழந்தைகளுக்கு வருங்காலத்திய நினைவுகளாக புத்தகங்களுக்கு பதிலாக தொலைக்காட்சி கதைகள் தான் இருக்கக் கூடும்.

இரும்புக் கை மாயாவி தான் நம்ம பேவரிட். அப்புறம் அந்த லாரன்ஸ் டேவிட்டும் பிடித்தமான நாயகர்கள். அதுக்கப்பறம் நிறைய காமிக்ஸ் கதாநாயகர்கள் வந்து போனாலும் பெரிய அளவில் கவரவில்லை. கதாநாயகர்களை விட காமிக்ஸ் படிப்பதே இன்பம் என்ற நிலையில் மாற்றமில்லை. எங்கே காமிக்ஸ் புத்தகம் கண்டாலும் படிக்காமல் விடுவதில்லை இன்று வரைக்கும்.

மற்ற காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்காமல் போன நிலையில் வாங்கிய ராணிகாமிக்ஸ் புத்தகங்கள் இன்னமும் பரணில் பழைய அட்டைப்பெட்டியில் கிடக்கின்றன. தூசிதட்டி எடுத்து அடுக்கும் போது இப்போதும் ஓரிரண்டை எடுத்து படித்து விட்டுத் தான் வைக்கமுடிகிறது.

காமிக்ஸ் புத்தகங்களின் முக்கிய விஷயமே அதிலுள்ள ஓவியங்கள் தான். இன்று சில நவீன வசதிகள் வந்து விட்டாலும் அச்சுக்கலையின் ஆரம்ப காலத்திலேயே காமிக்ஸ் புத்தகங்களுக்காக ஓவியங்கள் வரைந்து முகபாவனைகளில் கூட தனித்தன்மை காட்டிய அந்த ஓவியர்கள் மிகவும் பாராட்டுக் குரியவர்கள். இதைப்பற்றி ஓவியர் மருது கூட உயிர்மையில் ஒரு தொடர் எழுதி இருந்தார்.

11 comments:

Anonymous said...

மாயாவி மட்டுமா,வேதாளன்,பிளாஷ் கோர்டன்,மாண்ட்ரெக்,பிலிப் காரிகன்,ரிப் கெர்பி,மாடஸ்டி,வி.கா.ஜார்ஜ்,ஜானி நீரோ,சு.கு.கபிஷ்,சினு வினு மறக்க முடியுமா,நன்றி முத்து காமிக்ஸ்

✪சிந்தாநதி said...

நிச்சயமாக! ஒவ்வொரு கதாபாத்திரமும் அதற்கென தனிக் குணாதிசயங்களுடன் சாகசங்கள் செய்வது தானே காமிக்சின் சிறப்பு அம்சம். அனைத்துமே மறக்க முடியாத கதாபாத்திரங்கள் தான்.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு கதாபாத்திரம் எதனாலோ ஒவ்வொருவருக்கு சற்று அதிகமாக பிடிக்கும் அந்த வகையில் எனக்கு மாயாவி.

Deepa said...

இந்த வார ஆனந்த விகட்னில் tamilcomics இடம்பெற்றுள்ளது... வாழ்துக்கள்

Bee'morgan said...

கண்டிப்பாக..! இன்னமும் கண்முன் நிற்கிறது ஒவ்வோர் பதினைந்து நாட்களுக்கொரு முறை அப்பாவை நச்சரித்து, ராணி காமிக்ஸ் வாங்கிவந்து படித்த அனுபவம்.. :) ஏறக்குறைய 4 வருடங்கள் தொடர்ந்து படித்திருக்கிறேன்.. இன்றும் அந்த கலெக்ஷன், எங்கள் வீட்டில் பலரது எதிர்ப்பையும்(!!:-)) மீறி ஒரு ஓரத்தில் உறைந்திருக்கிறது. என் விருப்பத்தில் மாயாவி எப்போதுமே அன்ன போஸ்ட்தான்.. அவரைத்தவிரவும், மாண்ட்ரெக், காரிகன், லொதார், அக்னி புத்ரா என அனைவரையும் பிடிக்கும். இந்த பதிவைப் படித்தவுடன் கொஞ்ச நேரம் காலத்தில் பின்னோக்கி பயணித்த அனுபவம்.. :-) நன்றி நண்பர்களே..

Anonymous said...

ரத்ணபாலா -வையும்கொன்சம் பட்டியலில் சேருங்களேன் நண்பர்களே...!

Surenthran said...

hai,

please tell me how to see the fonts?

yours,
surenthran@gmail.com.

✪சிந்தாநதி said...

ரத்னபாலா, அம்புலிமாமா, பாலமித்ரா, கோகுலத்தில் எல்லாம் படக்கதைகள் வரும் தான். ஆனாலும் காமிக்ஸ் என்ற வட்டத்துக்குள் அவை வருமோ?

இராம்/Raam said...

சூப்பரு.... இன்னமும் ஊரிலே நிறைய காமிக்ஸ் கலெக்ஷன்ஸ் நான் வைச்சிருக்கேன்... :)


அடுத்து ஊருக்கு போறப்போ எடுத்து படிக்க ஆர்வப்படுத்தீட்டிங்க... :)

sar said...

நன்றி நண்பரே
பழய நினைவுகளை நினைக்க வைத்ததுற்க்கு.

இன்றும் என்னால் பண்தம்,மந்திரவாதி மன்றேக்,இரும்புக்கை மாயாவி,குட்டி குரங்கு காபிஷ் ஆகிய பாத்திரங்களை மறக்க முடியவில்லை.

பூச்சாண்டி said...

"பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல,பக்தி பகல் வேடம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக."

என்ற தலைவரின் வைரவரிகளை சிரமேற்கொண்டு போலிச்சாமியாராம்
"குகுமாகி" என்ற கபடவேடதாரியின்
முகத்திரையை கிழித்து மக்களுக்கு அறிவொளி ஊட்டிய,

சிந்தனைச் சிற்பி,கொள்கைக்குன்று,
பகுத்தறிவுபகலவன்,

அண்ணன் ஸ்பைடர் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

johny said...

COMICS A EVER SWEET MEMORIES!
KEEP IT UP!

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin