Friday, June 5, 2009

காதலரின் மங்கா காவியம்

காட்டின் பாதையில் நடந்து கொண்டிருக்கிறது ஒர் லின்க்ஸ் பூனை. நிறைக் கர்ப்பமாக இருக்கும் அப்பூனையின் வயிற்றினுள் இரு குட்டிகள் காட்டிற்கு வருகை தர ஆயத்தமான நிலையில் உள்ளன. குட்டிகளை ஈனுவதற்காக பாதுகாப்பான ஒர் மறைவிடத்தை தேடிக் கொண்டிருகிறது அத் தாய்ப் பூனை. ஆனால் அதன் கண்களில் தெரிகிறது அகோரமான பசி.


கடந்த வருடம் பனிக்காலத்தில் உருவான ஒர் நோயால் லின்க்ஸ் பூனைகளின் வழமையான உணவான அமெரிக்க முயல்கள் இனம் அழிந்து போயின. அளவிற்கதிகமாகவிருந்த பனி வீச்சாலும், கடும் குளிராலும் தரையின் குளிர் நிலை உயர்ந்து விட, கானாங் கோழிகளில் பெரும்பாலானவை இல்லாது போயின. இலை துளிர் காலத்தின் போது பெய்த அடை மழை வேறு நீர் நிலைகளின் நீர் மட்டத்தை உயர்த்தி விட, மீன்களும் தவளைகளும் லின்க்ஸின் பாதங்களிற்கு எட்டாத தூரத்தில் ஆனந்தமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன.

லின்க்ஸ் பூனை பசிக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயத்திலிருந்தது. அது தன் குட்டிகளை ஈனும் முன் பட்டினியால் இறந்து விடும் நிலை. இருப்பினும் அப்பூனை தனக்கு கிடைத்த ஆமை முட்டைகளையும், சிறிய இறால்களையும் உண்டு தன் உயிரை தக்க வைத்துக் கொண்டது. பின் ஒர் நாள் காட்டில் வீழ்ந்து கிடந்த பிரம்மாண்டமான மரமொன்றின் கோறையான நடுப் பகுதியில் தன் குட்டிகளை பாதுகாப்பாக ஈனுவதற்கான ஒர் மறைவிடத்தை கண்டு கொண்டது.

மேலும் படிக்க செட்டொனும் லின்க்ஸ் பூனையும்

9 comments:

j s praveen said...

please close this blog. it is a shame that for the last one year no original post is done here and we get fooled by seeing this.

Rafiq Raja said...

What's there to feel shame about it? This blog will act as an aggregator for the best comics blog posts on Internet, and you have all reasons to follow the link and read more, or ignore the post.

காமிக்ஸ் பிரியன் said...

தோழர் இளவஞ்சி,

இங்கு நடப்பவைகளை நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்களா? உங்களை சமீப வருடங்களில் இந்த வலைப் பக்கம் காண வில்லை. அதனால் தான் சந்தேகப்பட்டேன்.

Rafiq Raja said...

சின்ன குழந்தை போல, "டீச்சர் என்ன இவன் கிள்ளி விட்டான், அவன் கிள்ளி விட்டான்" என்று புகார் செய்யும் சிறுபிள்ளைத்தனம் சில பேருக்கு இன்னும் மாறவில்லை. சிலரிடம் அதை எதிர்பார்ப்பது சரியில்லை தான்.

இதை விட்டு, முடிந்தால் இந்த வலையகத்தை புதுப்பிக்க உதவலாம்.

பூங்காவனம் said...

அன்புடையீர்,

கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

கனவுகளின் காதலன் said...

நண்பரே உங்கள் வலைப்பூவில் என் பதிவிற்கு சுட்டியமைத்து தந்ததிற்கு நன்றி. உங்கள் அன்பான ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.

Rafiq Raja said...

ஷங்கர் நண்பரே,

நண்பர்களின் வலைப்பூவில் தோன்றும் முத்தான பதிவுகளை அவ்வப்போது கவுரவிக்கும் விதத்தில் தான் இந்த முன்னோட்ட பதிவுகள். இவை மூலம் உங்கள் நல்ல பதிவு பல வாசகர்களுக்கு சென்று அடைந்தால் பெருமிதம் கொள்ளும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்று சொல்ல தான் வேண்டுமோ...

அமர்க்களமாக பதிவேற்றுங்கள்.

ÇómícólógÝ

Anonymous said...

Rafiq, I didnt expect your anger :)
You may explain the purpose of this site politely. Actually I was also wondering since I read Nanbar.Kanaukalin Kathalan post already. All are our friends only. Take care.

Rafiq Raja said...

@ Anony: Believe me, I am not angry man at the first-up :-). But the tone of the comments really deserved a response on the equal measure.

No one would have missed Kathalan's blog post, but I wanted to introduce to the other members who might be visiting this first ever blog on Tamil Comics through a Group of Bloggers (and still remains the single-most), who might not have been visiting the other comics blogs.

The good thing is that the discusssion atleast brought a new annonymous blogger to post exclusively at Tamil Comics Ulagam Blog. So it helped in some way. :)

I still believe everyone over here who share the comics passion are all our friends. :) Thanks for your comment, and hopefully this puts rest to any more discussion on this topic :).

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin