Tuesday, July 21, 2009

காமிக்ஸ் கிளாசிக்ஸ் 24 - விண்வெளிக் கொள்ளையர் - இரும்புக்கை மாயாவி

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

இடைப் பட்ட காலத்தில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. இனிமேல் அதனைப் பற்றி பேசி பயனில்லை என்பதால், அதனை ஒரு துன்பியல் நிகழ்வாக மறந்து விடுவோம்.

இதோ என்னுடைய அடுத்த பதிவு: புத்தம் புதிய காமிக்ஸ் கிளாசிக்ஸ். என்னுடைய அன்பு நண்பர் ஒருவருன் உதவியால் இந்த பதிவை இட முடிகிறது. அவருக்கு என்னுடைய நன்றி. இந்த பதிவை படிக்கும் முன் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களின் முழு நீள விமரிசனத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவுக்கான சுட்டி இதோ: விண்வெளிக் கொள்ளையர்

இந்த புதிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் மூலம் நம்முடைய மனம் கவர்ந்த பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பத்திப்பகத்தினர் பழைய நினைவுகளுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதில் உணரலாம். அதாவது, பழைய கதைகளை அதே வடிவத்தில் அளிப்பதின் மூலம் அந்த பழைய நினைவுகளை மலர செய்கின்றனர். அவர்களுக்கு நம்முடைய நன்றிகள். நல்ல விடயம் என்னவெனில் அடுத்த இதழும் இரும்புக் கை மாயாவியின் கதை தான். ஆம், களிமண் மனிதர்கள் என்ற கதைதான் அடுத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ் எண் 25.

காமிக்ஸ் கிளாசிக்ஸ் எண் 25- இரும்புக்கை மாயாவி- விண்வெளிக் கொள்ளையர்-முன் அட்டை

காமிக்ஸ் கிளாசிக்ஸ் எண் 25- இரும்புக்கை மாயாவி- விண்வெளிக் கொள்ளையர்-பின் அட்டை

Comics Classics Issue No 24  Front Cover Comics Classics Issue No 24 Back Cover

கண்ணை கவரும் அட்டைப் படம். ஆனால், பின் அட்டையை முன் அட்டையாக மாற்றி அமைத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்து இருக்கும். ஏனெனில் இந்த இரண்டு அட்டைகளில் நன்றாக இருப்பது பின் அட்டையே என்பது என்னுடைய கருத்து. உங்களின் எண்ணங்களை பின்னுட்டத்தின் மூலம் தெரிவித்ததால் மகிழ்வேன்.

 

ஒரு சிறிய கேள்வி: இந்த இதழின் முன் அட்டை ஏற்கனவே நமது நெடுநாள் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒன்று. அதனால் இந்த இதழின் அட்டை எதனுடன் சம்பந்தப் பட்டது என்று வாசகர்கள் கூறுவீர்களா? அல்லது நான் தான் முடிவில் தெரிவிக்க வேண்டுமா?

 

இந்த கதையை பற்றி திரு கிங் விஸ்வா அவர்களின் கருத்து இதோ: இரும்புக் கை மாயாவியின் "சூப்பர் ஹீரோ" கால கட்டத்தில் நான் படித்த முதல் கதை இதுவே. அந்த உதிரும் நோய் பற்றி பல காலம் நான் வியந்தது உண்டு.

X-டோல் உபயோகப் படுத்தும் படிக கதிர் துப்பாக்கி, மல்டிமேன் உதவிக்காக வரும் கிராவா கதிர்கள், டார்கத் வரும் ஹோவர் டிஸ்க், உறைய செய்யும் க்ரிஸ்டளிசர் கதிர்கள், பொருட்களை பெரிதாக்கும் கொலஸ்ஸா கதிர்கள், எதிரிகளை அழிக்க அரசாங்கம் உபயோகிக்கும் ட்ரகடான் குண்டு, மாயாவியை குணமாக்கும் நியுக்ளியர் நர்ஸ், கம்மா-ட்ரான் மின் இணைப்பின் மூலம் உருவாகும் வீரிய சைத்தான், அதை அழிக்க நிழல் படை பயன்படுத்திய ட்ரேசர் குண்டு, நிழல் படையின் வோல்டா துப்பாக்கி, ராட்சஸ உருவம் பெற்ற டார்கத் என்று பல ஃபாண்டஸி நிறைந்த கதை இது.

பலருக்கு இந்த கதை பிடிக்காமல் போகலாம். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. இந்த கருத்தில் எனக்கு எப்போதும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

 

இந்த கதையை பற்றி ஏற்கனவே நம்முடைய பயங்கரவாதி தலைவர் அலசி ஆராய்ந்து விட்டதால் நான் அதிகமாக எதுவும் சொல்லப் போவது இல்லை. முதல் பக்கத்தையும் கடைசி பக்கத்தையும் பாருங்கள்.

விண்வெளிக் கொள்ளையர்-முதல் பக்கம்

விண்வெளிக் கொள்ளையர்-கடைசி பக்கம்

Comics Classics Issue No 24  1st Page Comics Classics Issue No 24  Last Page

சமீபத்தில் ஆசிரியர் திரு எஸ் விஜயன் அவர்கள் மறுபடியும் பழைய பாணியில் இதழ்களை வெளியிடப் போவதாக கூறி இருந்தார். அதாவது நிறைய விளம்பரங்கள் (வரப் போகும் கதைகள், நாயகர்கள், சிறப்பிதழ்கள்), சிறு சிறு கதைகள் (விச்சு, கிச்சு, குண்டன் பில்லி, பரட்டை தலை ராஜா), புதிய பகுதிகள் (வாசகர் ஹாட் லைன்) என்று மீண்டும் லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் இதழ்களில் வரும் என்று கூறி இருந்தார்.

 

அதனை நிறைவேற்றும் விதத்தில் இதோ இந்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதில் நம் மனம் கவர்ந்த இரண்டு விச்சு கிச்சு சிறுகதைகள்.

உங்கள் அபிமான விச்சு கிச்சு சாகசம் 1

உங்கள் அபிமான விச்சு கிச்சு சாகசம் 2

Vichu Kichu Vichu Kichu

ஏற்கனவே கூறியது போல அடுத்த இதழ் இரும்புக் கை மாயாவியின் கதை தான். இது வரை அதிகள் கேள்விப் படாத ஒரு கதை. ஆம், இந்த கதை இதுவரை ஒரே ஒரு முறை தான் வந்து உள்ளது. அதுவும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு. அதனால் இந்த கதையை மறு பதிப்பு செய்யும் ஆசிரியருக்கு ஒரு ஜே.

 

வழமை போல இந்த புத்தகத்திலும் ஜம்போ ஸ்பெஷல் இதழின் விளம்பரம் உள்ளது. முதன் முதலில் பதிவு செய்து நூறு பெயர்களின் பட்டியல் இந்த லயன் காமிக்ஸ் இதில் வெளியிடப் பட்டு உள்ளது (அடியேனும் முதலில் செய்ததால் நம்முடைய பெயரும் ஐக்கியம்).பிறகு பதிவு செய்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப் படும்.

 

இது வரை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஐநூறைக் கூட தொடவில்லை என்பது மனம் வருந்தக் கூடிய ஒரு செய்தி. என்ன செய்வது? நம்முடைய வாசகர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏதாவது ஒரு மொக்கை படத்தை பார்க்க சென்றாலோ, அல்லது ஹோட்டலில் சாப்பிட்டாலோ ஆகும் செலவான ருபாய் இருநூறை இதற்க்கு செலவழிக்க மறுக்கிறார்கள்.

 

இந்த பதினெட்டு புத்தகங்களை நீங்கள் ஒரிஜினல் புத்தகமாக வாங்கினால் அதற்க்கு ஆகும் செலவு என்ன தெரியுமா? 360 அமெரிக்க டாலர்கள். அதாவது கிட்டத்தட்ட பதினெட்டாயிரம் ருபாய், இந்திய மதிப்பில். நம்முடைய ஆசிரியர் அவர்கள் இப்படி பாடுபட்டு கொண்டு வரும் இந்த புத்தகத்தை யாரும் கண்டுக் கொல்லாமல் இருப்பது உண்மையில் வருத்தம் அளிக்கிறது.

 

ஒரு விடயம்: இந்த காமிக்ஸ் களஞ்சியமே இதுவரை இந்தியாவில் வந்த மிகப் பெரிய காமிக்ஸ் கதையாகும். இதுவே ஒரு சாதனை. அதனால், அந்த சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற முதலில் அந்த புத்தகத்தை முன்பதிவு செய்யுங்கள்.

அடுத்த கிளாசிக்ஸ் களிமண் மனிதர்கள்

ஜம்போ ஸ்பெஷல் விளம்பரம்

 Next Issue Ad in Last Page Jumbo Spl Ad

இந்த கதை ஆங்கிலத்தில் Valiant இதழில் வந்தது. அந்த இதழின் ஒரே ஒரு பிரதி மட்டுமே இப்போது கிடைக்கிறது. அந்த ஒரு பிரதியில் வந்த இரண்டு பக்கங்களை பாருங்கள்.

Valiant 1967_09_02_20

Valiant 1967_09_02_21

Valiant 1967_09_02_20 Valiant 1967_09_02_21

ஆங்கிலத்தில் இந்த கதை முப்பது வாரங்களில் அறுபது பக்கங்களாக வந்தது என்பதால் இந்த கிளாசிக்ஸ் கதையின் பக்கங்களை கவன்த்தேன். பார்த்தால் வெறும் ஐம்பத்தி ஆறு பக்கங்கள் மட்டுமே. என்னடா இது என்று யோசித்ததில், இது தொடர் கதையாக வந்த காலத்தில் முன்கதை சுருக்கம் மற்றும் தலைப்பு என்று ஒவ்வொரு எபிசொடிலும் இரண்டு பேணலை முழுங்கியதால் கடைசியில் இரண்டு பக்கங்கள் குறைந்த மர்மம் புலப்பட்டது.

 

இந்த புத்தகம் கடையில் கிடைக்க வில்லை, எங்கே கிடைக்கிறது என்று விசனப் படாமல் நம்முடைய காமிக்ஸ் புத்தகங்களுக்கு சந்தா கட்டி விடுங்கள். சந்தா கட்டாமல் இருக்க சிலர் கூறும் நொண்டி சாக்கு என்னவென்றால் புத்தகங்கள் ஒரு ஆண்டில் சரியாக வருவதில்லை என்பதே. நண்பர்களே, இந்த சந்தா என்பது ஆண்டு கணக்கில் வராது. புத்தக கணக்கில் வரும்., அதாவது பனிரெண்டு புத்தகங்கள் என்று கணக்கிட்டால் அந்த பனிரெண்டு புத்தகங்கள் தீரும் வரை (ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ) உங்களுக்கு புத்தகங்கள் வரும். ஆகையால் தயவு செய்து சந்தா கட்டிவிடுங்கள்.

 

விரைவில் மற்றுமொரு பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

26 comments:

Anonymous said...

super. thanks for the info.

C.J.S

ராஜேஷ் said...

ஆஹா,

இரும்புக் கை மாயாவி மறுபடியும் வந்து விட்டாரா? சூப்பர்.

இதுவரையில் நான் படிக்காத கதை இது.

தகவலுக்கு நன்றி. புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான்.

Lucky Limat - லக்கி லிமட் said...

ஜாலி ஜம்ப்பர் அவர்களே ,
உங்கள் பதிவு என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது . நான் சிறுவயதாக இருந்த போது வந்த பல கதைகளை நான் படித்தது இல்லை . மீண்டும் காமிக்ஸ் கிளாசிக்சில் வந்த போது மகிழ்ந்தேன் . ஆனால் புத்தகம் சைஸ் சிறியதாக இருந்தது ஒரு குறையாகவே இருந்தது . அதை முழு மகிழ்ச்சியோ்டு படிக்க முடியவில்லை.இக்கதையை நான் படித்து இல்லை . கண்டிப்பாக படிக்க வேண்டும் . களிமண் மனிதர்கள் கதையையும் ஆவலோடு எதிபார்த்து கொண்டிருக்கிறேன் .

தற்போது முழு சைஸ் இல் வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சி. அதன் ஸ்கேன் வெளியட்டு அசத்திவிடீர்கள். நீங்கள் கூறியது போல் பின் அட்டையை பின் அட்டையாக வெளியட்டு இருக்கலாம் . விச்சு கிச்சு ஸ்கேன் தந்ததற்கு நன்றி .

//இந்த பதினெட்டு புத்தகங்களை நீங்கள் ஒரிஜினல் புத்தகமாக வாங்கினால் அதற்க்கு ஆகும் செலவு என்ன தெரியுமா? 360 அமெரிக்க டாலர்கள்.//
நீங்கள் மிகவும் உண்மை . இப்பதிவை பார்த்த பின் கண்டிப்பாக நிறைய முன் பதிவு வரும் என நினைக்கிறன் .

கடைசியாக ஒரு வேண்டுகோள் .ரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் வாசகர்கள் முன்பதிவு செய்ய ஒரு விளம்பரமாக என் blog sidebar இல் போடலாம் என நினைக்கிறேன். அதற்க்கு ஸ்கேன் தேவை உங்கள் பதிவில் நீங்கள் உபயோகித்த ரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் விளம்பர ஸ்கேன் ஐ நான் உபயோகித்து கொள்ளலாமா ? உங்கள் அனுமதி தேவை

Lovingly,
Limat
Browse Comics

senthil kumar said...

from where you got this book?

iam also a subscriber and iam yet to get this book.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சிறப்பு

Anonymous said...

excellent.

great to know that we can still read mayavi stories.

thanks for the post.

ravi.

கனவில் வாழ்பவன் said...

ஜாலி ஜம்பர்.
கையைக் கொடுங்கள்.. அருமையான பதிவு. எனது பாடசாலை நண்பன் ஒருவனுடன் போட்டிபோட்டு அவன் தோற்றதால் எனக்கு பரிசளித்த புத்தகம் இது. எனக்கு இப்போதும் இந்தக் கதை ஞாபகம் இருக்கின்றது.

கிளசிக் எப்போதும் கிளசிக்தான். அருமை அருமை. மீள பாடலசாலைக்குச் சென்றதுபோல ஒரு பிரமை.

நன்றி நண்பரே
Mr. J

Bee'morgan said...

காமிக்ஸ் நண்பர்களே,
உங்களுக்கு என்னால் ஆன சிறிய பரிசு..
http://beemorgan.blogspot.com/2009/07/blog-post.html

நீங்களும் தொடர்ந்தால் பெரிதும் மகிழ்வேன்.. :)

சுந்தர் said...

ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

முதன் முதலில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் பற்றிய பதிவை பதிந்தமைக்கு நன்றி.

தொடருங்கள் உங்கள் அதிரடியை.

சுந்தர்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Anonymous said...
super. thanks for the info.

C.J.S//



திரு CJS அவர்களே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//ராஜேஷ் said...

ஆஹா,

இரும்புக் கை மாயாவி மறுபடியும் வந்து விட்டாரா? சூப்பர்.

இதுவரையில் நான் படிக்காத கதை இது.

தகவலுக்கு நன்றி. புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான்//



ஆமாம் ராஜேஷ்,

மாயாவி இஸ் பேக். தமிழ் காமிக்ஸின் தலை சிறந்த நாயகன் வந்து விட்டார்.


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Limat said...

ஜாலி ஜம்ப்பர் அவர்களே ,
உங்கள் பதிவு என்னை மகிழ்ச்சி அடைய செய்கிறது . நான் சிறுவயதாக இருந்த போது வந்த பல கதைகளை நான் படித்தது இல்லை . மீண்டும் காமிக்ஸ் கிளாசிக்சில் வந்த போது மகிழ்ந்தேன் . ஆனால் புத்தகம் சைஸ் சிறியதாக இருந்தது ஒரு குறையாகவே இருந்தது . அதை முழு மகிழ்ச்சியோ்டு படிக்க முடியவில்லை.இக்கதையை நான் படித்து இல்லை . கண்டிப்பாக படிக்க வேண்டும் . களிமண் மனிதர்கள் கதையையும் ஆவலோடு எதிபார்த்து கொண்டிருக்கிறேன்//



லிமட் அவர்களே

இனிமேல் காமிக்ஸ் கிளாசிக்சில் பாக்கெட் சைஸ் கிடையாது என்பது மகிழ்வூட்டும் செய்தி.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//senthil kumar said...

from where you got this book?

iam also a subscriber and iam yet to get this book//



திரு செந்தில் குமார் அவர்களே,

சந்தாதாரர்களுக்கு புத்தகம் முதலில் வரும். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தாமதம் ஆகலாம்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...

சிறப்பு//



நன்றி மருத்துவர் ஐயா.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Anonymous said...

excellent.

great to know that we can still read mayavi stories.

thanks for the post.

ravi.//



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரவி அவர்களே.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Mr. J said...

ஜாலி ஜம்பர்.
கையைக் கொடுங்கள்.. அருமையான பதிவு. எனது பாடசாலை நண்பன் ஒருவனுடன் போட்டிபோட்டு அவன் தோற்றதால் எனக்கு பரிசளித்த புத்தகம் இது. எனக்கு இப்போதும் இந்தக் கதை ஞாபகம் இருக்கின்றது.

கிளசிக் எப்போதும் கிளசிக்தான். அருமை அருமை. மீள பாடலசாலைக்குச் சென்றதுபோல ஒரு பிரமை.

நன்றி நண்பரே
Mr. J//



மிக்க நன்றி திரு ஜெ.


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//சுந்தர் said...

ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

முதன் முதலில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் பற்றிய பதிவை பதிந்தமைக்கு நன்றி.

தொடருங்கள் உங்கள் அதிரடியை.

சுந்தர்.//



நன்றி சுந்தர்.


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Bee'morgan said...

காமிக்ஸ் நண்பர்களே,
உங்களுக்கு என்னால் ஆன சிறிய பரிசு..
http://beemorgan.blogspot.com/2009/07/blog-post.html

நீங்களும் தொடர்ந்தால் பெரிதும் மகிழ்வேன்.. //



மிக்க நன்றி திரு முருகன் அவர்களே.

தொடர்கிறேன்.


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

shaji said...

thanks jolly boy.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//shaji said...

thanks jolly boy.//

Shaji, now the book is available in shops. kindly buy it and then go for subscription if you want to get it earlier.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

RAMG75 said...

1) நீங்கள் கூறிய படி இரண்டாம் அட்டை முதல் அட்டையாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

2) Rs 200 ரூபாய் செலவு செய்ய நிறைய பேர் யோசித்தால் XIII கதை ஒரு கனவாக போய்விடும். இரண்டு நாட்களுக்கு முன் Rs 1000 செலவு செய்து லக்கி லுக் புக்ஸ் வாங்கினேன். அத்துடன் compare பண்ணும்போது X111 கதைக்கு Rs 200 எனபது ஒன்றும் இல்லை. வாசகர்கள் மனது வைத்தால் விரைவில் நாம் அதை படிக்கலாம். பார்ப்போம்

செந்தில் குமார் said...

ஜாலி ஜம்ப்பர்,

இப்போது தான் புத்தகத்தை படித்து முடித்தேன். மிகவும் அருமையான கதை. நான் படிப்பது இதுவே முதல் முறை என்பதால் ரசித்து படித்தேன். உங்கள் விமர்சனம் அருமை. தொடருங்கள்.

இதைப் போலவே பழைய காமிக்ஸ் இதழ்களுக்கும் எழுதுங்கள்.

செந்தில் குமார் said...

//RAMG75 said...
2) Rs 200 ரூபாய் செலவு செய்ய நிறைய பேர் யோசித்தால் XIII கதை ஒரு கனவாக போய்விடும். இரண்டு நாட்களுக்கு முன் Rs 1000 செலவு செய்து லக்கி லுக் புக்ஸ் வாங்கினேன். அத்துடன் compare பண்ணும்போது X111 கதைக்கு Rs 200 எனபது ஒன்றும் இல்லை. வாசகர்கள் மனது வைத்தால் விரைவில் நாம் அதை படிக்கலாம். பார்ப்போம்//

லக்கி லுக் கதை வெறும் ஐம்பது பக்கத்தில் , ஆனால் முழு வண்ணத்தில் இருக்கும். நம்முடைய புத்தகமோ எண்ணுரு பக்கங்களில் இருக்கும். யோசித்து பாருங்கள். இரண்டு புத்தகமும் ஒரே விலை. ஆனால் சிலர் ஆங்கில புத்தகங்களை வாங்குகின்றனர்ம் ஆனால் தமிழ் புத்தகத்தை வாங்குவதில்லை.

கம்பேர் செய்த திரு ராம்ஜி அவர்களுக்கு நன்றி.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//RAMG75 said...
1) நீங்கள் கூறிய படி இரண்டாம் அட்டை முதல் அட்டையாக இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

2) Rs 200 ரூபாய் செலவு செய்ய நிறைய பேர் யோசித்தால் XIII கதை ஒரு கனவாக போய்விடும். இரண்டு நாட்களுக்கு முன் Rs 1000 செலவு செய்து லக்கி லுக் புக்ஸ் வாங்கினேன். அத்துடன் compare பண்ணும்போது X111 கதைக்கு Rs 200 எனபது ஒன்றும் இல்லை. வாசகர்கள் மனது வைத்தால் விரைவில் நாம் அதை படிக்கலாம். பார்ப்போம்//

அட்டைப் படத்தை பற்றி பலரும் இதே கருத்தை முன் வைத்து உள்ளனர். உங்கள் கருத்துக்கு நன்றி ராம்ஜி அவர்களே.

//Rs 1000 செலவு செய்து லக்கி லுக் புக்ஸ் வாங்கினேன். அத்துடன் compare பண்ணும்போது X111 கதைக்கு Rs 200 எனபது ஒன்றும் இல்லை//

உண்மைதான். இதை மற்றவர்கள் உணர வேண்டுமே?

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//செந்தில் குமார் said...
ஜாலி ஜம்ப்பர்,

இப்போது தான் புத்தகத்தை படித்து முடித்தேன். மிகவும் அருமையான கதை. நான் படிப்பது இதுவே முதல் முறை என்பதால் ரசித்து படித்தேன். உங்கள் விமர்சனம் அருமை. தொடருங்கள்.

இதைப் போலவே பழைய காமிக்ஸ் இதழ்களுக்கும் எழுதுங்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி செந்தில் குமார் அவர்களே. விரைவில் உங்கள் அவாவை நிறைவேற்றுவேன்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நன்றி எஸ். கே அவர்களே.

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin