Thursday, August 6, 2009

முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

நம்முடைய சென்ற பதிவாகிய முன்னோட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி. சென்ற பதிவை போலவே ஒவ்வொரு பதிவும் சிரத்தையுடன் செய்வேன் என்று உங்களுக்கு நான் உறுதி அளிப்பதோடில்லாமல் இதோ முன்னோட்டத்தை நிஜமாக்கும் பதிவு இடப்படுகிறது. ஆம், புத்தகம் வந்து விட்டது. சமீப கால வழமை போல வலையுலகில் இதனையும் நாம் தான் முதன்முதலில் இடுகிறோம். உதவி செய்யும் நண்பர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

 

அட்டைப் படம் சமீபத்திய டெம்பிளேட்டை கொண்டு உள்ளது மகிழ்வை அளிக்கிறது. சிறப்பாகவும் உள்ளது. மாண்டிரெக்'கின் குளோஸ் அப அட்டைப் படம் நன்றாகவே உள்ளது என்பது என்னுடைய கருத்து. உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu- Front Cover

நம்முடைய காமிக்ஸ் எடிட்டர் திரு s.விஜயன் அவர்கள் தன்னுடைய காமிக்ஸ் டைம் பகுத்தியில் கூறி உள்ள விடயங்கள் மனதிற்கு மகிழ்வை அளிக்கின்றன. உதாரணமாக அடுத்த வெளியீடு, விரைவில் வரப் போகும் கதைகள் குறித்த விளம்பரங்களும் தகவலும் ஆவலை தூண்டும் விதத்தில் அமைந்து உள்ளன. அதிலும் குறிப்பாக நம்முடைய சென்ற பதிவில் குறிப்பிட்டது போல இந்த கதை தொண்ணுருகளின் ஆரம்பத்தில் விளம்பரப் படுத்தப் பட்டதை கூட அவர் கூறி உள்ளார்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Editorial Comics Time

இதோ அந்த பழைய விளம்பரம்:

Muthu Comics Issue No 197 Diwali Special Parandhu Vandha Bayangaravaadhigal Fleetway Barracuda Coming Soon Mandrake

இந்த கதை ஒரு அற்புதமான கதை. சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். ஆனால் கண்ணாடிகளுக்கு பின்னாலும் ஒரு உலகம் இருக்கக் கூடும் என்பதே ஒரு பேண்டசி தான். அதிலும் அங்கிருப்பவர்கள் நம்முடைய குணாதிசயங்களுக்கு நேர் மாறாக இருப்பார்கள் என்பதை நினைத்தால் ஒரு விடயம் தோன்றுகிறது - அங்கிருக்கும் அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu 1st Page

இந்த கதை கூட ஒரு வகையில் ஒரு தொடர்தான். ஆம், மாண்டிரெக் கதைகளில் வரும் எத்தர் கும்பல் எட்டு, லூசிபார் என்ற நாகம்/காலன் போல இந்த கதை வரிசையும் தொடரும். அதனால் தான் கதையின் முடிவில் ஆங்கில படங்களில் வருவதைப் போல அடுத்த கதைக்கு இப்போதே ஒரு ஹின்ட் கொடுத்து இருப்பார்கள்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Last Page

விங் கமாண்டர் ஜார்ஜ் மறுபடியும் சாகசம் செய்ய வருகிறார். கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை அவரது சாகசம் வந்தது ஐம்பதுகளில் அல்ல. அறுபதுகளின் முடிவில். ஆம், அடுத்து வரப் போவது ஒரு கிளாசிக் டெய்லி ஸ்டிரிப் கதை ஆகும். மறவாமல் படியுங்கள் முத்து காமிக்ஸ். சென்ற ஆண்டு அவரது கதை வந்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Next Issue Ad

அதற்க்கு அடுத்த இதழ் நம்முடைய மனம் கவர்ந்த ரிபோர்டர் ஜானி கதை ஆகும். நெடு நாட்களுக்கு பின்னர் ரிபோர்டர் ஜானி திரும்ப வருகிறார். அவருடைய இந்த கதையை நான் படித்து இருக்கிறேன். அதனால் சொல்கிறேன் - இது சமீப கால ஜானி கதைகளில் ஒரு டாப் கதையாக இருக்கும்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Coming Soon Ad

முன்பே நம்முடைய பதிவில் கூறி இருந்தது போல பல பழைய கதாநாயகர்களை திரும்பவும் கொணர ஆசிரியர் முயல்கிறார். அதன் ஒரு பிரதி பிம்பமாக எண்பதுகளில் நம்முடைய மனதை கொள்ளை கொண்ட கதாநாயகன் ரோபோட் ஆர்சியின் சிறுகதை ஒன்று.இந்த கதை ஐம்பத்தி ஆறில் வந்த லயன் இதழின் ஆண்டு மலரில் வந்த கதை ஆகும்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Archie Story 1st Page

வழமை போல ரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழின் விளம்பரமும் முன் பதிவு கூப்பனும் இந்த இதழிலும் உள்ளன. இதோ அவை:

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Back XIII Spl Ad Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Back XIII Spl Form

அடுத்து வரப் போகும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழின் விளம்பரம் பின் அட்டையை அலங்கரிப்பதை பாருங்கள். உங்கள் காதை அருகில் கொண்டு வாருங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். வெகு விரைவில் இதனை பற்றிய ஒரு முன்னோட்டப் பதிவினை உங்கள் அபிமான இந்த காமிக்ஸ் வலைப் பூவில் நீங்கள் படிக்கலாம்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Back Cover

இந்த புத்தகம் கடையில் கிடைக்க வில்லை, எங்கே கிடைக்கிறது என்று விசனப் படாமல் நம்முடைய காமிக்ஸ் புத்தகங்களுக்கு சந்தா கட்டி விடுங்கள். சந்தா கட்டாமல் இருக்க சிலர் கூறும் நொண்டி சாக்கு என்னவென்றால் புத்தகங்கள் ஒரு ஆண்டில் சரியாக வருவதில்லை என்பதே. நண்பர்களே, இந்த சந்தா என்பது ஆண்டு கணக்கில் வராது. புத்தக கணக்கில் வரும்., அதாவது பனிரெண்டு புத்தகங்கள் என்று கணக்கிட்டால் அந்த பனிரெண்டு புத்தகங்கள் தீரும் வரை (ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ) உங்களுக்கு புத்தகங்கள் வரும். ஆகையால் தயவு செய்து சந்தா கட்டிவிடுங்கள். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04562 – 262749.

 

விரைவில், வெகு விரைவில் இந்த கதையின் ஆங்கில பதிப்பு மற்றும் வண்ணத்தில் ரீபிரிண்ட் வடிவத்துடன் வந்த புத்தகங்களை பற்றிய பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

 

உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.

61 comments:

வால்பையன் said...

மாண்ட்ரேக் கதாபாத்திரத்தை கொண்டு எதாவது சினிமா வந்திருக்கிறதா!?

இதுவரை நான் ஒன்று கூட கேள்விப்பட்டதில்லை,
தெரிந்தால் சொல்லுங்களேன்!

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//வால்பையன்

மாண்ட்ரேக் கதாபாத்திரத்தை கொண்டு எதாவது சினிமா வந்திருக்கிறதா!?

இதுவரை நான் ஒன்று கூட கேள்விப்பட்டதில்லை,தெரிந்தால் சொல்லுங்களேன்! //

தோழர் வால்பையன்,

மாண்ட்ரேக் கதாபாத்திரத்தை கொண்டு சினிமா வந்து இருக்கிறது. ஆனால் சமீபத்தில் அல்ல. சுமார் என்பது ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு வெள்ளையில் வந்தது, என்னிடம் அவை உள்ளது.

உங்களுக்காக அவற்றை ஒரு டவுன்லோட் செய்யும் பதிவாக அடுத்த வாரத்தில் இடுகிறேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நண்பர்கள் பலரின் தவறான கணிப்புக்கு மரண அடி கொடுக்கும் வகையில் மர்ம மனிதன் மார்டின் அவர்களின் இரண்டு பாக திரில்லர் சாகசம் ஒன்று டிசம்பர் மாதம் வர இருக்கிறது என்பது மகிழ்வூட்டும் சங்கதி தானே?


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

ராஜேஷ் said...

வாவ்,

இரும்பு மனிதன் ஆர்ச்சி கதை. எத்தனை வருடங்கள் ஆயிற்று இதனை பார்த்து? என்னுடைய சிறுவயதில் நான் படித்து ரசித்த உலகப் போரில் ஆர்ச்சி, நீதிக் காவலன் ஆர்ச்சி போன்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன.

இது எத்தனை பக்க கதை? முழு கதையையும் வலையேற்ற முடியுமா?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//ராஜேஷ்

வாவ்,
இரும்பு மனிதன் ஆர்ச்சி கதை. எத்தனை வருடங்கள் ஆயிற்று இதனை பார்த்து? என்னுடைய சிறுவயதில் நான் படித்து ரசித்த உலகப் போரில் ஆர்ச்சி, நீதிக் காவலன் ஆர்ச்சி போன்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன.
இது எத்தனை பக்க கதை? முழு கதையையும் வலையேற்ற முடியுமா? //

ராஜேஷ், மனிக்கவும். முழு கதையை வெளியிடுவது இயலாத காரியம்.


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

கனவுகளின் காதலன் said...

நண்பரே, சிறப்பான முன்னோட்டப் பதிவு.

மார்ட்டின் திரும்ப வருகிறார் என்பது நல்ல செய்திதான், ஆசிரியர் தரப்போகும் ஆச்சர்யத்திற்காக காத்திருக்கிறேன்.

உங்கள் பதிவுகளை சாத்தியமாக்கும் நண்பர்களிற்கு என் சார்பில் நன்றிகள் உரித்தாகுக.

உங்கள் வேகத்திற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே சிறப்பான முன்னோட்டப் பதிவு என்று முன்பு பதிந்திருந்தேன் அது தவறு, சிறப்பான அறிமுகப் பதிவு என்பதே உண்மை.

புலா சுலாகி said...

ஜாலி ஜம்ப்பருக்கு ஒரு ஜெ.

சூப்பர் பதிவு. அருமையான ஸ்கான்'கள்.

சூப்பர் ஸ்பீட் பதிவுக்கு மறுபடியும் ஒரு நன்றி.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

புலா சுலாகி said...

நமது ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும் ஒரு ஜெ.

இப்படி தலை கீழாக எழுத்துக்களை பதிப்பிப்பது ஒரு வித்தியாசமான முயற்சி.

கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைகின்றது. கதையை படிக்க காத்து இருக்கிறேன்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

புலா சுலாகி said...

விங் கமாண்டர் ஜார்ஜ்

சூப்பர் ரிபோர்டர் ஜானி

மர்ம மனிதன் மார்டின்

என்று ஆசிரியர் தூள் கிளப்புகிறார். அதுவும் அடுத்து வர இருக்கும் கதைக்கான விளம்பரங்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன.

முதலில் எல்லாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து அல்லது ஆறு விளம்பரங்கள் இருக்கும். அந்த பொறக்காலம் மறுபடி வருமா?

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

shaji said...

excellent post with nice scans. wonderful to know that the legacy will be continued for some more time and it is heartening fact.

welcome back, muthu comics.

Mr. J said...

கலக்கிட்டீங்க தலை.

ஏற்கனவே போட்ட முன்னோட்டப் பதிவு அருமை என்றால் அதைவிட இது பல மடங்கு அருமை.

தொடர்ந்து கலக்குகங்க

வழமை போல XII பதிவு ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. ;)

Mr. J Comics

Mariyappan Servai said...

Hi, Very Nice Post!!!can u tell me where i get this books in chennai.

shanmugasundaram said...

terrific blog. very well updated with good content.

keep it up.

shanmugasundaram.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//shanmugasundaram said...

terrific blog. very well updated with good content.
keep it up.
shanmugasundaram.//

thanks shanmugasundaram sir. thanks a lot. now i have got your mail as well.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Mariyappan Servai said...

Hi, Very Nice Post!!!can u tell me where i get this books in chennai.//

thanks mariyappan servai. welcome to our small little honest blog.

it is available in many places. kindly tell me which area you want to know. there are more than 10-15 shops.

The best thing is to subscribe.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Mr. J said...

கலக்கிட்டீங்க தலை.
ஏற்கனவே போட்ட முன்னோட்டப் பதிவு அருமை என்றால் அதைவிட இது பல மடங்கு அருமை.
தொடர்ந்து கலக்குகங்க
வழமை போல XII பதிவு ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. //

நன்றி மிஸ்டர் ஜெ. இன்னமும் ஒரு விமர்சனப் பதிவு காத்து உள்ளது. கவலை படாதீர்கள். கலக்கி விடலாம்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//shaji said...excellent post with nice scans. wonderful to know that the legacy will be continued for some more time and it is heartening fact.

welcome back, muthu comics.//

thanks shaji. thanks for the appreciative words. it boosts my confidence level.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//புலா சுலாகி said...

விங் கமாண்டர் ஜார்ஜ்
சூப்பர் ரிபோர்டர் ஜானி
மர்ம மனிதன் மார்டின்
என்று ஆசிரியர் தூள் கிளப்புகிறார். அதுவும் அடுத்து வர இருக்கும் கதைக்கான விளம்பரங்கள் ஆர்வத்தை தூண்டுகின்றன.
முதலில் எல்லாம் ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து அல்லது ஆறு விளம்பரங்கள் இருக்கும். அந்த பொறக்காலம் மறுபடி வருமா? //

இனிமேல் மறுபடியும் பழைய பொலிவை நம்முடைய காமிக்ஸ் புத்தகங்களில் காணலாம். கவலை படாதீர்கள் நண்பரே. இன்னமும் பல ஆச்சரியங்கள் காத்து இருக்கின்றன

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//புலா சுலாகி said...

நமது ஆசிரியர் விஜயன் அவர்களுக்கும் ஒரு ஜெ.
இப்படி தலை கீழாக எழுத்துக்களை பதிப்பிப்பது ஒரு வித்தியாசமான முயற்சி.
கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைகின்றது. கதையை படிக்க காத்து இருக்கிறேன். //

ஆங்கிலத்தில் கூட இப்படி தலை கீழாக இருக்காது. இட வலமாக மட்டுமே இருக்கும்.

நீங்கள் இன்னும் சந்தா கட்டவில்லையா என்ன?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//புலா சுலாகி said...

ஜாலி ஜம்ப்பருக்கு ஒரு ஜெ.சூப்பர் பதிவு. அருமையான ஸ்கான்'கள்.

சூப்பர் ஸ்பீட் பதிவுக்கு மறுபடியும் ஒரு நன்றி.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்//

நன்றி புலா சுலாகி அவர்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு.

இந்த வேகமான பதிவிற்கு காரணம் கூட்டு முயற்சியே.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//கனவுகளின் காதலன் said...

நண்பரே சிறப்பான முன்னோட்டப் பதிவு என்று முன்பு பதிந்திருந்தேன் அது தவறு, சிறப்பான அறிமுகப் பதிவு என்பதே உண்மை.//

காத்திருங்கள் காதலரே.முழு நீள விமர்சனப்பதிவு ஆங்கில ஸ்கான்'களுடன் விரைவில் வருகிறது.

by the way, a rose by any other name would have smelt the same'na? there is nothing in a Name.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//கனவுகளின் காதலன் said...
நண்பரே, சிறப்பான முன்னோட்டப் பதிவு.
மார்ட்டின் திரும்ப வருகிறார் என்பது நல்ல செய்திதான், ஆசிரியர் தரப்போகும் ஆச்சர்யத்திற்காக காத்திருக்கிறேன்.
உங்கள் பதிவுகளை சாத்தியமாக்கும் நண்பர்களிற்கு என் சார்பில் நன்றிகள் உரித்தாகுக.
உங்கள் வேகத்திற்கு சிறப்பு வாழ்த்துக்கள்.//

நன்றி கனவுகளின் காதலரே. உங்களின் வருகையால் மனமகிழ்ந்தேன்.

மார்டின் வருகை ஒரு நல்ல விடயமே. தொடர்ந்து பல அதிரடிகளை ஆசிரியர் அளிக்கவிருக்கிறார். அதில் இவை எல்லாம் ஒரு சிறு அங்கமே.

Mahesh kumar said...

Hi,

Nice review...
Was the next part of this story published in English?
Regards,
Mahesh

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Mahesh kumar said...
Hi,

Nice review...
Was the next part of this story published in English?
Regards,
Mahesh//

yes mahesh. the next part was published in english.

very recently diamond comics also published this in full colour.

thanks for the comment.

காமிக்ஸ் பிரியன் said...

ஜாலி ஜம்ப்பர்,

கலக்கல் பதிவு. இன்னமும் பலருக்கு புத்தகமே வரவில்லை. நீங்கள் என்னடாவென்றால் பதிவை போட்டு தாக்கி விட்டீர்கள். தொடருங்கள் உங்கள் முதன்மை சேவையை.

ஸ்கான்'கள் எல்லாமே அருமை.

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

காமிக்ஸ் பிரியன் said...

ஜாலி,

இந்த பதிவு முறை (முன்னோட்டம், அறிமுகம், முழுமையான விமர்சனம்-அடுத்து நீங்கள் பதிவிடப்போவது) தொடருமா?

ஏனெனில் இந்த நடை அட்டகாசமாக உள்ளது. தொடர வேண்டுகிறேன்.

முழுமையான விமர்சனத்தில் நீங்கள் கூறியதைப் போல ஆங்கில பதிப்பை காண விரும்புகிறேன். வண்ணத்தில் வேறு வந்து உள்ளதாக கூறி ஆவலை தூண்டி விட்டீர்கள்.

பதிவை விரைவில் இட வேண்டுகிறேன்.

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

காமிக்ஸ் பிரியன் said...

//நண்பர்கள் பலரின் தவறான கணிப்புக்கு மரண அடி கொடுக்கும் வகையில் மர்ம மனிதன் மார்டின் அவர்களின் இரண்டு பாக திரில்லர் சாகசம் ஒன்று டிசம்பர் மாதம் வர இருக்கிறது என்பது மகிழ்வூட்டும் சங்கதி தானே?//

செம தகவல். அதுவும் டிசம்பர் மாதம் வர இருப்பதை கூறியது நல்ல விடயம்.

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

காமிக்ஸ் பிரியன் said...

//ரோபோட் ஆர்சியின் சிறுகதை ஒன்று.இந்த கதை ஐம்பத்தி ஆறில் வந்த லயன் இதழின் ஆண்டு மலரில் வந்த கதை ஆகும்//

சூப்பர்.

இளவேனில் said...

1990 நிழல் நிஜமாகிறது = 2009 நிழல் எது? நிஜம் எது?

அருமையான தகவல். இரண்டையும் ஸ்கான் செய்து அளித்தமைக்கு நன்றி.

காமிக்ஸ் காதலன் said...

முழுமையான பதிவு.

கலக்கல். நன்றி. தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

காமிக்ஸ் காதலன் said...

அட்டைப் படத்தில் மாண்ட்ரேக் அருமையாக உள்ளார். ஆனால் லோதர்'ஐ என் இப்படி பழைய ஹிந்தி நடிகர் தாரா சிங் போல வரைந்து விட்டார்கள்?

Mariyappan Servai said...

Hi Jolly Jumper,

Teynampet & T.Nagar, Because every time, i'm going to sivakasi to buy this books. i cann't subscribe because i will be in traving all over India.
Thankx in advance.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Hi Jolly Jumper,

Teynampet & T.Nagar, Because every time, i'm going to sivakasi to buy this books. i cann't subscribe because i will be in traving all over India.
Thankx in advance.//

Mariyappan,

T.Nagar: Near T nagar bus depot, there is siva vishnu temple. Just opposite to the siva vishnu temple, there is a book shop. in that Book shop you will get tamil comics like lion, muthu and classics.

T Nagar: near t nagar hotel saravana bhavan, there is another book shop as well where you can buy tamil comics.

Mount raod: there are no shops near teynampet. this is the only one close to that. Near Anand theatre bus stand, there is a book shop in the walking pavement where comics are available.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் பிரியன் said...
ஜாலி ஜம்ப்பர்,
கலக்கல் பதிவு. இன்னமும் பலருக்கு புத்தகமே வரவில்லை. நீங்கள் என்னடாவென்றால் பதிவை போட்டு தாக்கி விட்டீர்கள். தொடருங்கள் உங்கள் முதன்மை சேவையை.
ஸ்கான்'கள் எல்லாமே அருமை.//

காமிக்ஸ் பிரியரே, நான் சந்தா கட்டி விடுவதால் புத்தகம் முதலில் கிடைத்து விடுகிறது. மற்றபடி இந்த பதிவு ஒரு கூட்டு முயற்சி தான். தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் பிரியன் said...
ஜாலி,
இந்த பதிவு முறை (முன்னோட்டம், அறிமுகம், முழுமையான விமர்சனம்-அடுத்து நீங்கள் பதிவிடப்போவது) தொடருமா?
ஏனெனில் இந்த நடை அட்டகாசமாக உள்ளது. தொடர வேண்டுகிறேன்.
முழுமையான விமர்சனத்தில் நீங்கள் கூறியதைப் போல ஆங்கில பதிப்பை காண விரும்புகிறேன். வண்ணத்தில் வேறு வந்து உள்ளதாக கூறி ஆவலை தூண்டி விட்டீர்கள்.
பதிவை விரைவில் இட வேண்டுகிறேன். //

நண்பரே, இந்த பதிவுத் தொடர் முறை தொடரும். ஆங்கில பதிப்பு அட்டைப் படத்துடன் விரைவில் வருகிறது. காத்திருங்கள்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் பிரியன் said...
//நண்பர்கள் பலரின் தவறான கணிப்புக்கு மரண அடி கொடுக்கும் வகையில் மர்ம மனிதன் மார்டின் அவர்களின் இரண்டு பாக திரில்லர் சாகசம் ஒன்று டிசம்பர் மாதம் வர இருக்கிறது என்பது மகிழ்வூட்டும் சங்கதி தானே?//
செம தகவல். அதுவும் டிசம்பர் மாதம் வர இருப்பதை கூறியது நல்ல விடயம்.//

இனி வரும் காலம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் பிரியன் said...
//ரோபோட் ஆர்சியின் சிறுகதை ஒன்று.இந்த கதை ஐம்பத்தி ஆறில் வந்த லயன் இதழின் ஆண்டு மலரில் வந்த கதை ஆகும்//
சூப்பர்.//

கருத்துக்கு நன்றி நண்பரே.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//இளவேனில் said...
1990 நிழல் நிஜமாகிறது = 2009 நிழல் எது? நிஜம் எது?
அருமையான தகவல். இரண்டையும் ஸ்கான் செய்து அளித்தமைக்கு நன்றி//

நம்மிடம் இது போன்ற பல தகவல்களை எதிர்பார்க்கலாம் நண்பரே.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் காதலன் said...
முழுமையான பதிவு.
கலக்கல். நன்றி. தொடர வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்//

பதிவுகள் தொடரும் நண்பரே. முதன்மையான பதிவுகளுக்கான முதல் இடம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் என்பதே இனி நடக்கும். கவலை வேண்டாம்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் காதலன் said...
அட்டைப் படத்தில் மாண்ட்ரேக் அருமையாக உள்ளார். ஆனால் லோதர்'ஐ என் இப்படி பழைய ஹிந்தி நடிகர் தாரா சிங் போல வரைந்து விட்டார்கள்?//

நண்பரே, இந்த அட்டைப் படம் அமேரிக்காவில் 1966ல வந்த அட்டைப் படத்தை மையமாக கொண்டதால் அதில் எப்படி உள்ளதோ அப்படியே வரைந்து இருக்கிறார்கள்.

நம்முடைய முழுமையான விமர்சனத்தில் இதனை பார்க்கலாம்.

Anonymous said...

very quick review i haven t read this book any way ur comic passion is very super keep it up

Mahesh kumar said...

Hi,

waiting for your review. hoping that yours will be without errors, unlike the others.

Regards,
Mahesh

Limat said...

இன்னும் இந்த காமிக்ஸ் எனக்கு கிடைக்கவில்லை . இப்போது தான் மாண்டவன் மீண்டான் கதை எனக்கு கிடைத்தது .அடுத்து வரவிருக்கும் காமிக்ஸ் விளம்பரங்கள்மகிழ்ச்சி அடைய செய்கின்றன.

Lovingly,
Limat

Mariyappan S said...

Not able find the shop?can u help?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Mariyappan S

Not able find the shop?can u help? //

Go to the Mambalam Railway station where in the station book shop you will get the comics.

similar to that of the nungambakkam railway station and park railway station.

if not, here is the chennai distributor for tamil comics

Ramya Agency, No 12, nynan street, abiramapuram, chennai 18.
Phone: 044-24950495.
ok?

murali kannan said...

now i find out the best comics blog. thanks a lot sir.

Kengashandralingam said...

Dear Jolly JUmber,

Its a great effort keeping touch with Tamil Comics world sinec we have no regular books in our tounge. As a team of Tamil comics, we have to think how we can support our great comrads publishing Tamil comic books in order to produce books in regular basis? I am a fan no no a slave of Lion comics since y younghood as I am in my 37 nowadays. Any idea when our famous XIII [the complete set ]is coming out?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Kengashandralingam said...
Dear Jolly JUmber,

Its a great effort keeping touch with Tamil Comics world sinec we have no regular books in our tounge. As a team of Tamil comics, we have to think how we can support our great comrads publishing Tamil comic books in order to produce books in regular basis? //

It will be of great help if the readers and supporters of tamil comics to subscribe to the tamil comics and book for the XIII Jumbo Spl.

It will Not cost us more than 500 rupees. What do you say?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Any idea when our famous XIII [the complete set ]is coming out? //

it is in our hands only. The total cost of buying the rights for tamil for the 18 parts can be covered only when the book is bought/booked by atleast 1000 comirades.

the count has reached so far 503 till this week.

my advice is, book multiple copies, at least 2 per head. this book will not available in shops and it is once in a life time book. if you buy this in french (as it is not available in english for 18 parts) it will cost you close to 16,000 rupees. so, why waiting?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//murali kannan said...
now i find out the best comics blog. thanks a lot sir.//

thanks you murali kannan. continue to support us.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Limat said...
இன்னும் இந்த காமிக்ஸ் எனக்கு கிடைக்கவில்லை . இப்போது தான் மாண்டவன் மீண்டான் கதை எனக்கு கிடைத்தது .அடுத்து வரவிருக்கும் காமிக்ஸ் விளம்பரங்கள்மகிழ்ச்சி அடைய செய்கின்றன//

உண்மை தான் லிமட். காமிக்ஸ் உலகுக்கு மறுமலர்ச்சி வருகிறது. ஆதரவுக்கு நன்றி.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Mahesh kumar said...
Hi,
waiting for your review. hoping that yours will be without errors, unlike the others.
Regards,
Mahesh//

thanks mahesh. will be done tomorrow and you can vouch that it will not have any errors unlike some wikipedia/google based reviews. the info here is authentic and reliable and the contents will not updated after each and every error being pointed out, regularly.

better skip these and concentrate well.

Anonymous said...

டப்பா கதை. Mandrake stories are just logicless and irritating. Itz for kids, not for matured adults. I hope Editor Sir will avoid Mandrake stories in future. Mandavan Meendan was v.good. All recent stories were good, except this. I knew now that why this story was not published earlier.

Anony said...

i second the anony.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Anonymous said...
டப்பா கதை. Mandrake stories are just logicless and irritating. Itz for kids, not for matured adults. I hope Editor Sir will avoid Mandrake stories in future. Mandavan Meendan was v.good. All recent stories were good, except this. I knew now that why this story was not published earlier.//

அனானி நண்பரே,

நீங்கள் தயவு செய்து என்னுடைய விமர்சனத்தை படித்து விட்டு மறுபடியும் கருத்து பதியுங்கள்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Anony said...
i second the anony.//

அனானி என்றே ஒரு பெயரா? உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வாழ்த்துக்கள்.

tharudhalai said...

சின்ன வயதில் எவ்வளவு முத்து காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருந்தேன்.எல்லாம் பழங்கதை ஆகிவிட்டது.இரும்புக்கை மாயாவி,பிலிப் காரிகன்,மாண்ட்ரேக் லொதார்,ரிப் கெர்பி,வேதாளர் என என் ஹீரோக்களின் பட்டியல் மிக நீளம்.மீண்டும் அந்த புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு ஏதும் இருக்கிறதா? யாராவது பதில் சொல்லுங்களேன்.ப்ளீஸ்.

johny said...

hai nanba arumaiyaga lion comics-i vilambaram seithu irukireergal! nanri!

thambu said...

The Problem with ordering subscription is if we are to change address then we will miss the books. Thats the prblm in books coming delayed....

Duraisamy N said...

HOW TO SUBSCRIBE ONLINE ?

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin