Sunday, September 20, 2009

முன்னோட்டம் 2:லயன் காமிக்ஸ் 207-கொலை செய்ய விரும்பு

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான் (அந்த முதல் முன்னோட்டத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்). அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் கூட லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.

சரி வெறுமனே அட்டைப் படங்களை மட்டும் போடாமல் வேறு சில தகவல்களையும் வழங்கலாம் என்று நினைத்ததால் இந்த பதிவு தொடர்கிறது. சென்ற இதழ் மாண்டவன் மீண்டானில் அடுத்த லயன் காமிக்ஸ் பற்றிய விளம்பரம் இப்படி ஆக வெளியாகி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Next issue Ad

வழமை போல இந்த இதழையும் நாம் ஏற்கனவே படித்து விட்டதால் இதோ இந்த இதழின் சில உள் படங்களை விளம்பரம் போல மாற்றி அமைத்ததின் விளைவை பாருங்கள்.

Next Issue A
Next Issue B
Next Issue c
Next Issue makeup

என்ன நண்பர்களே, இந்த முன்னோட்டம் பிடித்து இருந்ததா? என்ன பிடிக்கவில்லையா? சரி, சரி, இதோ இந்த லயன் காமிக்ஸ் புத்தகத்தின் முழு படம்.

both

சாம்பியன்ஸ் கோப்பை பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சார்ந்த ஒரு கதையை வெளியிட இருக்கும் நம்முடைய ஆசிரியரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆமாம், இந்த கதையில் கிரிக்கெட் ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வில்லி கார்வின் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதை கவனியுங்கள்.

இந்த புத்தகம் இன்னும் ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் வந்து சேர்ந்து விடும். அப்போது இதனை பற்றிய முழுமையான விமர்சனத்தை பார்க்கலாம். வழமை போல இந்த புத்தகம் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரே பதில்: தயவு செய்து சந்தா தொகையை உடனே செலுத்துங்கள் என்பதுதான். அப்படி முடியாதவர்கள், இந்த பதிவை படியுங்கள்.

நன்றி, வணக்கம்.

27 comments:

9th Monk said...

wow.

SIV said...

நீங்கள் முன்னோட்டம் போட்ட "நிழல் எது நிஜம் எது" இதழயே இன்னும் வாங்க முடியாமல் இருக்கிறேன். அதற்க்குள் அடுத்த முன்னோட்டமா? அசத்துங்கள்..
பின் குறிப்பு - ஜம்போ இதழுக்கு நான் முன்பதிவு செய்துவிடேன். ஆகையால் மாடஸ்டியின் உதையில் இருந்து நான் escap.

Muthu Fan's Comics Blog said...

நல்ல விளம்பரங்கள். ஆசிரியர் பார்த்தால் சந்தோஷப்படுவார்.

அடுத்த லயன் கதைசுருக்கம் போட்டிருக்கலாமே. உங்களுடைய ''அந்த'' நண்பருக்கும் நன்றி.

காமிக்ஸ் காதலன் said...

அருமை. மிகவும் சிறந்த பதிவு.

மிகச் சிறந்த காமிக்ஸ் பிளாக் இதுதான் என்பதில் இனியும் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அதனி மாற்றிக் கொள்ளவும்.

கலக்குங்கள் ஜாலி ஜம்ம்பர்.

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
குரங்கு குசலாவை தெரியுமா?

காமிக்ஸ் காதலன் said...

கீழ்கண்ட இந்த வரிகள் ஆவலை தூண்டுகின்றன.

//சாம்பியன்ஸ் கோப்பை பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சார்ந்த ஒரு கதையை வெளியிட இருக்கும் நம்முடைய ஆசிரியரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆமாம், இந்த கதையில் கிரிக்கெட் ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வில்லி கார்வின் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதை கவனியுங்கள்//

ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

ஷிவ் அவர்களைப் போல நானும் எஸ்கேப்.

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
குரங்கு குசலாவை தெரியுமா?

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//9th Monk said...
wow.//

thank you. any reason for choosing such a name?

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//siv said...
நீங்கள் முன்னோட்டம் போட்ட "நிழல் எது நிஜம் எது" இதழயே இன்னும் வாங்க முடியாமல் இருக்கிறேன். அதற்க்குள் அடுத்த முன்னோட்டமா? அசத்துங்கள்..//

நண்பர் ஷிவ் அவர்களே, நம்மிடம் இன்னமும் பல முன்னோட்டங்கள் தயாராக உள்ளன. அடுத்த பல இதழ்கள் ரெடி.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//siv said...
பின் குறிப்பு - ஜம்போ இதழுக்கு நான் முன்பதிவு செய்துவிடேன். ஆகையால் மாடஸ்டியின் உதையில் இருந்து நான் escape.//

இதே மாதிரி பலர் எஸ்கேப் ஆனால் தான் அந்த புத்தகத்தை நாம் கண்ணில் பார்க்க இயலும்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் காதலன் said...
அருமை. மிகவும் சிறந்த பதிவு.

மிகச் சிறந்த காமிக்ஸ் பிளாக் இதுதான் என்பதில் இனியும் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அதனி மாற்றிக் கொள்ளவும். //

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் நண்பரே. .

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Muthu Fan's Comics Blog said...
நல்ல விளம்பரங்கள். ஆசிரியர் பார்த்தால் சந்தோஷப்படுவார்.

அடுத்த லயன் கதைசுருக்கம் போட்டிருக்கலாமே. உங்களுடைய ''அந்த'' நண்பருக்கும் நன்றி.//

அந்த நண்பருக்கு என்றுமே நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். உங்களைப் போன்ற உண்மையான காமிக்ஸ் ஆர்வலர்களின் தொடர்ந்த ஆதரவு தான் என்னை தொடர்ந்து பதிவிட தூண்டுகிறது.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

rajaganesh said...

hai very super ya

காமிக்ஸ் பிரியன் said...

ஜாலி ஜம்ப்பர்,

சூப்பர் பதிவு. உங்களின் முன்னோட்டம் முன்பு இருந்ததி விட சூப்பர். அதைவிட நீங்கள் தந்த அந்த தகவல் (கிரிக்கெட்) மற்றும் உள் பக்க ஸ்கான் என்று எல்லாமே அருமையாக இருந்தது.

தொடர்ந்து அதிரடியை நடத்துங்கள்.

காமிக்ஸ் பிரியன் said...

நானும் தான் எஸ்கேப். ஆம், முன்பதிவு செய்து விட்டேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//rajaganesh said...
hai very super ya//

Thanks.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் பிரியன் said...
நானும் தான் எஸ்கேப். ஆம், முன்பதிவு செய்து விட்டேன்//

இப்படி அனைவரும் செய்து விட்டாலே போதும். இந்த புத்தகம் வந்து விடும். நன்றி நண்பரே.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மிக வேகமாக தமிழ் காமிக்ஸ் வெளியீடுகளின் வருகை குறித்து நண்பர்களிற்கு அறியத்தருவதில் சிறப்பாக செயற்படுகிறீர்கள் பாராட்டுக்கள்.

மாடஸ்டியிடம் உதை வாங்க நான் ரெடி, ஆனால் மாடஸ்டி டூ பீஸில் வர வேண்டும். கார்வினுக்கு அனுமதி இல்லை.

விரைவில் வரவிருக்கும் இதழ்கள் குறித்த பதிவுகளையும் விரைவாக வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

கனவில் வாழ்பவன் said...

தலை கலக்குங்க. அருமையான முன்னோட்டம். விளம்பரங்கள் அபாரம்.

Lucky Limat - லக்கி லிமட் said...

ஜாலி ஜம்பர் அவர்களே ,
கலக்குறீங்க போங்க ! வரவிருக்கும் காமிக்ஸ் விளம்பரம் அட்டை படத்தை போட்டு எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் . மாடஸ்டி கதைகளை படித்து பல நாள் ஆயிற்று எனக்கு . தொடருங்கள் உங்களின் இந்த அதிரடியை .....

XIII விளம்பரம் கலரில் அருமை .ஸ்கேன் அனுப்புங்களேன் ...

அன்புடன் ,
லக்கி லிமட்

Vedha said...

excellent. very good to have the cover of the upcoming comics in your blog well before anyone can even think about it.

keep it up the previews.

Vedha
Actually You Can Skip These Pages

Vedha said...

by the way, those photoshop works are very good.

kindly do similar promotion for muthu comics as well.

hoping for the best from your blog.

பின்னோக்கி said...

நான் லயன் காமிக்ஸின் தீவிர ரசிகன். உங்கள் பதிவை பார்த்தவுடன் படிக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. தகவலுக்கு நன்றி. நான் சந்தா கட்டிவிட்டேன். அதனால் மாடஸ்டி பிளைசியை பர்சனலாக சந்திக்கும் வாய்ப்பை நழுவவிட்டுவிட்டேன். அனைவரும் XIII க்கு முன்பதிவு செய்யவேண்டும். ஒரு இங்கிலீஷ் லக்கிலூக் புத்தகம் 200 ரூபாய்க்கு விற்கும் இக்காலத்தில், ஏன் அனைவரும் இதை வாங்க ஆர்வம் காட்டவில்லை எனத்தெரியவில்லை. இன்னமும் எவ்வளவு நாள் ஆகுமோ தெரியவில்லை.

காமிக்ஸ் பிரியன் said...

தமிளிச்தில் பாப்புலர் ஆகி விட்டது. வாழ்த்துக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சித்திரக் கதை இதழ்கள்
பற்றிய அனைத்து
இடுகைகளும்
மிக சுவையாக
உள்ளன.

தமிழ் ஜோதிடம் said...

Mr ஜாலி ஜம்பர்

கலக்கு கலக்குறீங்க போங்க,சூப்பர் பதிவு, நல்லா கருத்தை சொல்லுஙக

நன்றி

இன்றைய கவிதை said...

தலீவா!
இனி நான் உங்கள் அடிமை!
காமிக்ஸ் தாகத்தைத்
தீர்த்து வைத்ததற்கு நன்றி!

-கேயார்

Vedha said...

happy diwali to you & Your family/friends circle.

Ben said...

காமிக்ஸ் பைத்தியங்கள் பட்டியலில் என்னையும் இணைத்து கொள்க! தமிழ் நாட்டில் மிக தரம் வாய்ந்த லயன் காமிக்ஸ் போன்ற இதழ்கள் பெரும் வரவேற்பு ஏன் பெறுவதில்லை என்பதற்கான கரணங்கள் புரியவில்லை. காமிக்ஸ் கலை செழிக்கும் (மற்ற கலைகளும் தான்) பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையும் தமிழகத்தின் மக்கள் தொகையும் ஏறக்குறைய ஒன்று தான். மிக சிறந்த படைப்பாளிகளும் பெரும் ரசிகர் கூட்டமும் இருக்கும் பிரான்ஸ் நாட்டைப்போல இங்கு ஏன் இல்லை என்ற ஆதங்கம் உண்டாகிறது.

காமிக்ஸ் ரசிகர்கள் குழுவில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.... உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன்!

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin