Thursday, December 29, 2011

The reurn of இரும்புக்கை மாயாவி - லயன் கம்பேக் ஸ்பெஷல் (Jan 2012)

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

இந்த வருடம் (2011) நம் அனைவருக்கும் மிகவும் சோதனையாக அமைந்தது கண்டு வருத்தம் அடைந்தாலும், அடுத்தது என்ன என்று எதிர்நோக்குகையில் குகையின் முடிவில் வெளிச்சம் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. ஆமாம், தோழர்களே. நம்முடைய அபிமான லயன் காமிக்ஸ் இந்த இன்டர்நெட் யுகத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதன் முதல் கட்டமாக இதோ எடிட்டர் விஜயன் சாரின் பிரத்யேக வலைப்பூ:

http://lion-muthucomics.blogspot.com/

மீள்வருகையின் முதல் கட்டமாக அற்புதமான ஆர்ட் பேப்பரில் உயர்தர அச்சில் முழுவண்ணகலவையில் ஒரு மீள்வருகை சிறப்பு இதழ் தயாராகி வருகிறது. நேற்று சிவகாசி சென்ற நான் மேலும் பல விவரங்களை சேகரித்து வந்துள்ளேன். அதன் விளைவே இந்த பதிவு.

  • புத்தகத்தின் விலை: ருபாய் நூறு மட்டுமே.
  • புத்தகத்தின் அளவு: சைஸ் (சமீபத்தில் வந்த விண்வெளி கொள்ளையர் அளவு)
  • புத்தக பக்கங்கள்: இருநூறு பக்கங்கள்.
  • புத்தகத்தின் அமைப்பு: நூறு பக்கங்கள் முழு வண்ணத்தில் + நூறு பக்கங்கள் கருப்பு வெள்ளையில்.
  • புத்தகத்தில் உள்ள கதைகள்: ஐந்து
  • புத்தகம் கிடைக்குமிடங்கள்: லயன் காமிக்ஸ் அலுவலகம்,சென்னை புத்தக கண்காட்சி
  • எப்போது முதல் கிடைக்கும்: ஜனவரி பத்தாம் தேதி முதல்
  • புத்தகத்தை வாங்குவது எப்படி: ருபாய் 130 ஐ முன்பதிவு லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் செய்து வாங்கலாம். சென்னை வாசகர்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கலாம்.

லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் வாசகர்கள் ஒரு விஷயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். தமிழில் தரமான அச்சில், நல்ல தாளில், தெளிவான சித்திரங்களுடன், திறமையான மொழிபெயர்ப்புடன் காமிக்ஸ் படிக்க வேண்டுமெனில் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலக எண்ணிற்கு போன் செய்து (04562-272649) சந்தா விவரங்களை கேட்டறிந்து சந்தா கட்டவும், உங்கள் வீடு தேடி காமிக்ஸ் புத்தகங்கள் வந்து சேரும். இந்த புத்தகத்தில் உள்ள கதை விவரங்கள்:

1. லக்கி லுக் ஒற்றர்கள் ஓராயிரம்

2. கேப்டன் பிரின்ஸ் - பரலோகப்பாதை பச்சை

3. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை

4. எஜன்ட் காரிகன் - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்

5. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை

புத்தகத்தின் அட்டைப்படங்கள்:  (நன்றி விஜயன் சார்)

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு முகப்பு அட்டை

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு பின் அட்டை

Lion Comeback special front cover Lion Comeback special back cover

 

இந்த வருடம் ஒரு மாதம் விடுமுறையில் வந்து இருப்பதால் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்க ஆவல். குறிப்பாக அய்யம்பாளையம் அவர்களை.

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றி. வணக்கம்.

11 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

1.புத்தகக் கண்காட்சி, 2.முத்து+லயன் 2012 ஸ்பெஷல், 3.விஜயன் அவர்களின் பிளாக் - இவை மகிழ்ச்சியான செய்திகள்.

Jolna paiyan said...

அடடே சூப்பர் நியூஸ்.

Lucky Limat - லக்கி லிமட் said...

புத்தக கண்காட்சி எப்போது ஆரம்பிக்கிறது???

புலா சுலாகி said...

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.இந்த புத்தாண்டானது இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.

புலா சுலாகி said...

Limat: இவ்வருடம் சென்னை புத்தககண்காட்சி ஜனவரி 5 முதல் 17 தேதி வரை நடைபெற இருக்கிறது:நேரம்-3 PM To 9 PM விடுமுறை நாட்களில்:11 AM To 9 PM

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

Come Back Special - நமது பல நாள் கனவு இன்று நனவானது!

Anonymous said...

வணக்கம் அன்பு நண்பர்களே
நான் உங்கள் அயல் நாட்டு சகோதரன் எழுதுகிறேன்.(இலங்கையிலிருந்து )
இப்போது எனக்கு 26 வயதாகிறது.சுமார் 10 வயதிலிருந்தே லயன்,முத்து வெறியன் நான்
வீட்டில் சண்டைபிடித்து காமிக்ஸ் வாசிக்கும் அளவுக்கு அடிமை
ஆனால் கொடுமை எனது நாட்டிற்கு அதுவும் எனது ஊரிற்கு எப்போதாவது தான் ஏதாவது
இதழ் மட்டுப்படுத்திய அளவில் வருவது வழக்கம்.
நானும் நண்பர்களும் அடி,பிடி பட்டு வாங்குவோம்.
அப்பா,அம்மாவிடம் பிடுங்குவதைவிட சில வேளைகளில் வீட்டு கல்லா பெட்டிகளிலும் கை வைப்பது உண்டு
நண்பர்களே இப்போதெல்லாம் லயன் ,முத்து ஒரு இதழ் கூட வருவதில்லை(நான் சம்பாதிக்கும் காலத்திலா நடக்கவேண்டும்)
இதற்கிடையில் புதிய புதிய காமிக்ஸ் எல்லாம் முளைத்தன ஆனால் லயன்,முத்து Range க்கு இல்லை
குங்குமம்,குமுதம்,விகடன் எல்லாம் அன்றே கிடைக்கின்றன. ஏன் லயன் இல்லை
ஒருவேளை பிரகாஷ் publication க்கு தெரியாதோ என்னவோ அவர்களின் இதழிற்கு எவ்வளவும் செலுத்தி வாங்ககூடிய (என்னைபோன்ற)
காமிக்ஸ் வெறியர்கள் பெரியளவில் இலங்கையில் உண்டு என்று
நண்பர்களே எனக்கு தெரியவேண்டும் எப்படி நான் லயனிட்கு இலங்கையிலிருந்து சந்தா செலுத்துவது
உங்களுக்கு தெரிந்தால் அறிவியுங்களேன் எவ்வளவு செலுத்தவும் தயாராக உள்ளேன்.

Kishore said...
This comment has been removed by the author.
தருமி said...

ஜாலி ஜம்பர் இங்கே எப்படி வந்தார்?இன்னொரு பதிவில் டாக்டர் செவன் இருக்கிறார். காமிக்ஸ் போய் மேஜிக்ஸ் நிறைய இருக்கே!!

ரவி said...

இலங்கையில் இருந்து எழுதும் தோழரே...

சந்தா கட்டிவிடுங்கள், கொரியர் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பிவிடுவார்கள். ப்ரகாஷ் பப்ளிஷர்ஸ் எண் இருக்கிறது, எடிட்டர் விஜயன் அவர்களின் வலைப்பதிவு இருக்கிறது. முயலுங்கள்.

Charubala said...

naanum chinna paiyanaka irukkumpodhu rani comics, ambuli mama, poonthalir , rathnabala ellam padiththen comics books i serthu vaippathu enbathu enakku theriyamal vittu vitten ippothu varunthukiren (neengal koorinirkal old books patri ketka vendam endru) aanalum oru vendukol vaikkiren ore oru book mattum vaithirunthen antha bookum ippothu illai athu ennavendral verum mirukangal thaan comics story oru puththisali muyal thaan hero thannudaya nanbarakalai puli , singam , nari ivaikalidam irundhu kaapathu athu pondru oru comics veli idalamay vendukolai yerpeera yetrukondal enakku mail anuppavum

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin