Tuesday, August 25, 2009

சென்னையில் ஒரு காமிக்ஸ் காலம்

 

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

நம்முடைய ரசிகர்கள் அடிக்கடி நம்மிடம் லயன் காமிக்ஸ் எங்கு கிடைக்கும்?, முத்து காமிக்ஸ் எங்கு கிடைக்கின்றது? காமிக்ஸ் கிளாசிக்ஸ் வந்து விட்டதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பதால் இந்த பதிவு இடப் படுகிறது.

 

சிவகாசியில் உள்ள லயன் காமிக்ஸ் ஆபீசுக்கு செல்ல முடியாதவர்கள் சென்னையில் கீழ்க் கண்ட முகவரிக்கு சென்றால் அவர்களுக்கு சமீபத்திய லயன், முத்து மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்கள் கிடைக்கும்:

ரம்யா ஏஜன்சி,

எண் பனிரெண்டு,

நைனான் தெரு, அபிராமபுரம், சென்னை - 18.

தொலைபேசி எண்: 044 – 2495 0495.

 

இதை தவிர மாம்பலம் ரயில் நிலையத்தில் உள்ள மாருதி புத்தக நிலையத்திலும் அந்த மாதத்து காமிக்ஸ் இதழ்கள் கிடைக்கும். சென்ற வாரம் நண்பர் மாரியப்பன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விவரங்களை தெரிவித்தது இருந்தேன்.

 

Image(301) Image(302)

 

பின்னர் நானே அங்கு செல்லும் சந்தப்பம் நேரிட்டது. உடனே என்னுடைய கைபேசியில் இருந்த . கேமரா மூலம் அந்த புத்தக கடையை சில படங்கள் எடுத்து விட்டேன். ஒவ்வொரு இதழிலும் பத்து, பத்து புத்தகங்களை வரவழைககிறார்கலாம். லயன் காமிக்ஸ் தீர்ந்து விட்டதாம். காமிக்ஸ் கிளாசிக்ஸ் இன்னமும் இரண்டு காபி உள்ளது (மடக்காமல் இருக்கும் இதழ் என்பதால் நானும் இன்னும் ஒன்று வாங்கி விட்டேன்). முத்து காமிக்ஸ் நேற்று தான் வந்தது. மூன்று விற்று விட்டது. இந்த கடையில் நமது காமிக்ஸ் இதழ்களை நல்ல முறையில் டிஸ்பிளே செய்து உள்ளார்கள்.

Image(300) Image(299)

வாசக அன்பர்களே, நீங்களும் உங்களுக்கு தெரிந்த காமிக்ஸ் விற்பனை கடைகளை உங்களின் பின்னூட்டம் மூலம் தெரிவித்தால் மற்ற நண்பர்கள் பயன் பெறுவார்கள்.

Thursday, August 6, 2009

முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

நம்முடைய சென்ற பதிவாகிய முன்னோட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி. சென்ற பதிவை போலவே ஒவ்வொரு பதிவும் சிரத்தையுடன் செய்வேன் என்று உங்களுக்கு நான் உறுதி அளிப்பதோடில்லாமல் இதோ முன்னோட்டத்தை நிஜமாக்கும் பதிவு இடப்படுகிறது. ஆம், புத்தகம் வந்து விட்டது. சமீப கால வழமை போல வலையுலகில் இதனையும் நாம் தான் முதன்முதலில் இடுகிறோம். உதவி செய்யும் நண்பர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.

 

அட்டைப் படம் சமீபத்திய டெம்பிளேட்டை கொண்டு உள்ளது மகிழ்வை அளிக்கிறது. சிறப்பாகவும் உள்ளது. மாண்டிரெக்'கின் குளோஸ் அப அட்டைப் படம் நன்றாகவே உள்ளது என்பது என்னுடைய கருத்து. உங்கள் கருத்தையும் அறிய ஆவலாக உள்ளேன்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu- Front Cover

நம்முடைய காமிக்ஸ் எடிட்டர் திரு s.விஜயன் அவர்கள் தன்னுடைய காமிக்ஸ் டைம் பகுத்தியில் கூறி உள்ள விடயங்கள் மனதிற்கு மகிழ்வை அளிக்கின்றன. உதாரணமாக அடுத்த வெளியீடு, விரைவில் வரப் போகும் கதைகள் குறித்த விளம்பரங்களும் தகவலும் ஆவலை தூண்டும் விதத்தில் அமைந்து உள்ளன. அதிலும் குறிப்பாக நம்முடைய சென்ற பதிவில் குறிப்பிட்டது போல இந்த கதை தொண்ணுருகளின் ஆரம்பத்தில் விளம்பரப் படுத்தப் பட்டதை கூட அவர் கூறி உள்ளார்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Editorial Comics Time

இதோ அந்த பழைய விளம்பரம்:

Muthu Comics Issue No 197 Diwali Special Parandhu Vandha Bayangaravaadhigal Fleetway Barracuda Coming Soon Mandrake

இந்த கதை ஒரு அற்புதமான கதை. சிலருக்கு இது பிடிக்காமல் போகலாம். ஆனால் கண்ணாடிகளுக்கு பின்னாலும் ஒரு உலகம் இருக்கக் கூடும் என்பதே ஒரு பேண்டசி தான். அதிலும் அங்கிருப்பவர்கள் நம்முடைய குணாதிசயங்களுக்கு நேர் மாறாக இருப்பார்கள் என்பதை நினைத்தால் ஒரு விடயம் தோன்றுகிறது - அங்கிருக்கும் அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருப்பார்கள்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu 1st Page

இந்த கதை கூட ஒரு வகையில் ஒரு தொடர்தான். ஆம், மாண்டிரெக் கதைகளில் வரும் எத்தர் கும்பல் எட்டு, லூசிபார் என்ற நாகம்/காலன் போல இந்த கதை வரிசையும் தொடரும். அதனால் தான் கதையின் முடிவில் ஆங்கில படங்களில் வருவதைப் போல அடுத்த கதைக்கு இப்போதே ஒரு ஹின்ட் கொடுத்து இருப்பார்கள்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Last Page

விங் கமாண்டர் ஜார்ஜ் மறுபடியும் சாகசம் செய்ய வருகிறார். கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை அவரது சாகசம் வந்தது ஐம்பதுகளில் அல்ல. அறுபதுகளின் முடிவில். ஆம், அடுத்து வரப் போவது ஒரு கிளாசிக் டெய்லி ஸ்டிரிப் கதை ஆகும். மறவாமல் படியுங்கள் முத்து காமிக்ஸ். சென்ற ஆண்டு அவரது கதை வந்தது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Next Issue Ad

அதற்க்கு அடுத்த இதழ் நம்முடைய மனம் கவர்ந்த ரிபோர்டர் ஜானி கதை ஆகும். நெடு நாட்களுக்கு பின்னர் ரிபோர்டர் ஜானி திரும்ப வருகிறார். அவருடைய இந்த கதையை நான் படித்து இருக்கிறேன். அதனால் சொல்கிறேன் - இது சமீப கால ஜானி கதைகளில் ஒரு டாப் கதையாக இருக்கும்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Coming Soon Ad

முன்பே நம்முடைய பதிவில் கூறி இருந்தது போல பல பழைய கதாநாயகர்களை திரும்பவும் கொணர ஆசிரியர் முயல்கிறார். அதன் ஒரு பிரதி பிம்பமாக எண்பதுகளில் நம்முடைய மனதை கொள்ளை கொண்ட கதாநாயகன் ரோபோட் ஆர்சியின் சிறுகதை ஒன்று.இந்த கதை ஐம்பத்தி ஆறில் வந்த லயன் இதழின் ஆண்டு மலரில் வந்த கதை ஆகும்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Archie Story 1st Page

வழமை போல ரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் இதழின் விளம்பரமும் முன் பதிவு கூப்பனும் இந்த இதழிலும் உள்ளன. இதோ அவை:

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Back XIII Spl Ad Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Back XIII Spl Form

அடுத்து வரப் போகும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழின் விளம்பரம் பின் அட்டையை அலங்கரிப்பதை பாருங்கள். உங்கள் காதை அருகில் கொண்டு வாருங்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன். வெகு விரைவில் இதனை பற்றிய ஒரு முன்னோட்டப் பதிவினை உங்கள் அபிமான இந்த காமிக்ஸ் வலைப் பூவில் நீங்கள் படிக்கலாம்.

Muthu Comics Issue No 312 Dated Aug 2009 Mandrake Nizhal Edhu- Nijam Edhu Back Cover

இந்த புத்தகம் கடையில் கிடைக்க வில்லை, எங்கே கிடைக்கிறது என்று விசனப் படாமல் நம்முடைய காமிக்ஸ் புத்தகங்களுக்கு சந்தா கட்டி விடுங்கள். சந்தா கட்டாமல் இருக்க சிலர் கூறும் நொண்டி சாக்கு என்னவென்றால் புத்தகங்கள் ஒரு ஆண்டில் சரியாக வருவதில்லை என்பதே. நண்பர்களே, இந்த சந்தா என்பது ஆண்டு கணக்கில் வராது. புத்தக கணக்கில் வரும்., அதாவது பனிரெண்டு புத்தகங்கள் என்று கணக்கிட்டால் அந்த பனிரெண்டு புத்தகங்கள் தீரும் வரை (ஒரு ஆண்டோ, இரண்டு ஆண்டுகளோ) உங்களுக்கு புத்தகங்கள் வரும். ஆகையால் தயவு செய்து சந்தா கட்டிவிடுங்கள். நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04562 – 262749.

 

விரைவில், வெகு விரைவில் இந்த கதையின் ஆங்கில பதிப்பு மற்றும் வண்ணத்தில் ரீபிரிண்ட் வடிவத்துடன் வந்த புத்தகங்களை பற்றிய பதிவின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

 

உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.

Friday, July 24, 2009

முன்னோட்டம் 1: முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? Preview

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

கடைசியாக முத்து காமிக்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இப்போது சரியாக ஐந்து மாதங்கள் கழித்து அடுத்த இதழ் வெளிவர இருக்கிறது. அடுத்து வரப் போகும் முத்து காமிக்ஸ் பற்றிய முன்னோட்ட பதிவு இது.

 

தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான். அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இந்த கதை சரியாக நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. இதனுடைய ஆங்கில மூலம் உலகில் மிகச் சிலரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிட தக்கது. குறிப்பாக ஆன் லைனில் இந்த புத்தகம் கிடைப்பது இல்லை. ஆனாலும் இந்த புத்தகம் நண்பர் ஒருவரிடம் இருப்பதால் இந்த புத்தகம் வெளிவந்த உடனே இதனைப் பற்றிய பதிவை நாம் வெளியிடலாம். என்ன சரிதானே?

முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? -  மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

Muthu Comics 312 Mandrake Nizhal Edhu Nijam Edhu

இந்த இதழை பற்றி சென்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் வந்த விளம்பரம் இதோ (இந்த கதை ஏற்கனவே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு விளம்பரம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது):

முத்து காமிக்ஸ் இதழ் எண் 311ல் வந்த விளம்பரம் - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

Muthu Comics Issue No 311 Dated 03-02-2009 Next Issue

Comics Classics Issue No 24

சென்ற பதிவாகிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் மக்களிடம் சிறப்பான வரவேற்ப்பை பெற்றதை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். அதனை இன்னும் படிக்காத ரசிகர்களுக்கு இதோ ஒரு மீள்-விளம்பரம்:

 

அந்த பதிவை படிக்க இந்த அட்டைப் படத்தை கிளிக் செய்தாலே போதும். அருமையான இந்த கதை சரியாக இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு காணக் கிடைக்காத பொக்கிஷம். இந்த கதை இப்போது உங்களுக்கு உலக அளவில் கிடைக்கும் ஒரே இடம் சிவகாசி தான். உலகில் அனைத்து மொழிகளிலும் மிகவும் அரிதான புத்தகம் இது.

 

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04562 – 262749.

 

உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.

Blog Widget by LinkWithin