Saturday, June 13, 2009

கண்ணாடி அணிந்த காமிக்ஸ் ஹீரோ : ரிப் கிர்பி

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்ம்பரின் வணக்கம்.

காமிக்ஸ் ஹீரோ என்றாலே அவர் சில வகைகளில் அடங்கி விடுவார்:

சூப்பர் ஹீரோ (ஸ்பைடர், ஆர்ச்சி. இரும்புக் கை மாயாவி)

உளவாளிகள் (ஜேம்ஸ் பாண்ட், மாடஸ்டி, ஜானி நீரோ, லாரன்ஸ் டேவிட்)

அநீதிகளை எதிர்த்து போராடுபவர் (டெக்ஸ் வில்லர், மற்ற கௌபாய்கள், ஜான் சில்வர்)

அதைப் போலவே ஹீரோ என்றால் அவர் அசாதாரண மன வலிமையும், உடல் வலிமையும் பெற்று தோற்றத்திலேயே பலரை தன்னுடைய திறமைகளை பற்றி கேள்வி எதுவும் எழாமல் கன்வின்ஸ் செய்பவராகவும் இருக்க வேண்டும்.

ஆனால், இந்த ஸ்டிரியோடைப் வட்டத்தில் சிக்காமல் இருக்கும் ஒரு சில ஹீரோக்களில் முதன்மையானவர்: ரிப் கிர்பி.

ஒரு கண்ணாடி அணிந்த ஹீரோவை நான் எந்த கதையிலும் படித்தது இல்லை (கிளார்க் கென்ட் சூப்பர் மேன் ஆக இல்லாத போது கண்ணாடி அணிவதை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது). அதிலும் ஹீரோக்கள் தனக்கு உதவியாக பெரும்பாலும் புத்திசாலியான ஒரு பெண்ணையோ (ஜானி நீரோ - ஸ்டெல்லா) அல்லது உடல் பலம மிக்கவரையோ (லாரன்ஸ் - டேவிட்) தான் தன்னுடைய சகாவாக கொண்டு இருப்பார்கள்.ஆனால், ஐம்பது வயது கிழவரை தன்னுடைய துணைவராக கொண்டு, கண்ணாடி அணிந்து கொண்டு துப்பறியும் ஒரு காமிக்ஸ் ஹீரோ உண்மையிலேயே புதுமையானவர்தான். இந்த வித்தியாசமான கான்செப்ட் மூலம் ரிப் கிர்பி முதன் முதலில் வாசகர்கள் மனதை கவர்ந்தார்.

அவரைப் பற்றி விரிவாக அடுத்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவு ஒரு டீசர் தான்.


உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.

14 comments:

Rafiq Raja said...

தமிழ் வலையுலகில் ரிப் கிர்பி பற்றி முதலில் பதிவிட்டதற்கு வாழ்த்துகள். அவரின் சில கதைகள் எனக்கு பிடிக்காமல் போனாலும், வித்தியாசமான கதைகளம் கொண்ட ஒரு ஹீரோ என்ற விசயத்தில் அவர் சாதனையாளர் தான்.

அலெக்ஸ் ரேமாண்டுக்கு தான் அந்த பெருமை சேரும், கூடவே வித்தியாசமாக ஒரு கதைதொடர் எழுது சொல்லி அவறை வற்புறுத்திய அவர் நண்பருக்கும் தான்.

ÇómícólógÝ

murugan said...

good.

Anonymous said...

nice. when is the next post?

Lucky Limat - லக்கி லிமட் said...

I need Invitation for this blog.

Lucky Limat || browsecomics@gmail.com
Browse Comics

Lucky Limat - லக்கி லிமட் said...

I need Invitation for this blog.

Lucky Limat || browsecomics@gmail.com
Browse Comics

Unknown said...

நண்பரே,

ரிப் கிர்பி என் உள்ளம் கவர் ஹீரோக்களில் ஒருவர். மென்மையான கதை, நேர்த்தியான சித்திரங்கள், மற்றும் கிர்பியின் பட்லர் டெஸ்மண்டின் அட்டகாசங்கள் என அது ஒர் மாயக் கலவை.

அதிலும் ஆரம்ப காலங்களில் முத்துக் காமிக்ஸ் வெளியிட்ட அவர் கதைகளைப் படித்த நண்பர்கள் நிச்சயம் அவற்றை நினைவில் சிறிதாவது வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு முறையும் டெஸ்மண்ட் பீர் அருந்தும் முன் அவர் கோப்பையில் பீரின் மீது ஏறி வழிந்து கொண்டிருக்கும் நுரை தனி அழகு.

பிரமிட் ரகசியம், மற்றும் அஸ்டெக் நாகரீகத்தில் டெஸ்மண்ட் ராஜாவாகும் கதை என்பன மனதில் எட்டிப் பார்க்கின்றன.

உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன். உற்சாகத்துடன் தொடருங்கள்

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

நண்பரே லக்கி லூக்!

ரிப் கெர்பி பிற வீர தீர சாகஸ வீரர்களை போல இல்லையெனினும் அவரது கதைகளில் விறுவிறுப்புக்குச் சிறிதும் பஞ்சம் இருக்காது. மேலும் டெஸ்மாண்ட், ரிப் கெர்பி இருவருக்கும் இடையே நிலவும் ஒட்டுதல் முதலாளி, வேலையாள் என்பதையும் தாண்டி இருக்கும். சில கதைகளில் ஒருவரை குறித்து ஒருவர் கொள்ளும் அக்கரை, புரிந்துகொள்ளுதல் போன்றவை கவனத்துக்குரியவை.

அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் said...

நண்பரே லக்கி லூக்!

ரிப் கெர்பி பிற வீர தீர சாகஸ வீரர்களை போல இல்லையெனினும் அவரது கதைகளில் விறுவிறுப்புக்குச் சிறிதும் பஞ்சம் இருக்காது. மேலும் டெஸ்மாண்ட், ரிப் கெர்பி இருவருக்கும் இடையே நிலவும் ஒட்டுதல் முதலாளி, வேலையாள் என்பதையும் தாண்டி இருக்கும். சில கதைகளில் ஒருவரை குறித்து ஒருவர் கொள்ளும் அக்கரை, புரிந்துகொள்ளுதல் போன்றவை கவனத்துக்குரியவை.

இரவின் நிசப்தம்-Silent Night said...

excellent. i love rip kirby and the best are the ones which came in muthu comics in the one re books. the best is the one in which rip goes in search of a heir and the story is hugely inspired by Cinderella and her single shoe story. can anyone post about that?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நான் அண்மையில் தான் வாராயோ வைர நெக்லஸ் பழைய புத்தகக் கடையில் வாங்கிப் படித்தேன்.

இங்கே இலங்கையில் இப்ப ஒண்டுமே கிடைக்கிறதில்லை. லயன் அல்லது முத்து இப்பவும் இந்தியாவில் வெளிவருகிறதா..

ம்ம்ம்... அந்த இளவயது காலங்கள் காமிக்ஸுடன் பின்னிப்பினைந்த மறக்கமுடியா நினைவுகள்.

பாட்ஷா மாணிக் பாட்ஷா said...

very good post for 1st up.

கனவில் வாழ்பவன் said...

Wot you're saying is true. But still he got an enigma dat no other hero can pose! :)

shaji said...

what happened to the continuing part of this post?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

ஜானி நீரோ, ரிப் கெர்பி இவர்கள் எனக்குப் பிடிக்கும். சாதாரண
ஆனால் மதிக்கத்தக்க ஒரு பெரியவர் என்ற தோற்றமே
அவருக்கு பிள்ஸ் பாயிண்ட்.
பதிவிற்கு நன்றி!

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin