Friday, September 4, 2009

தமிழ் கிராபிக் நாவல் - மோட்சத்திற்கு அப்பால்

 

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

நம்முடைய சென்ற பதிவாகிய சென்னையில் ஒரு காமிக்ஸ் காலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சி. வாசகர்களில் பலரும் காமிக்ஸ் கிடைக்குமிடங்களை பற்றி தகவ தந்தது மகிழ்வை அளித்தது. இதைப் போலவே அனைத்து ரசிகர்களும் தங்களின் காமிக்ஸ் வாங்கும் கடைகளை தெரிவித்தால் அது புதிய மற்றும் பழைய வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த பதிவு ஒரு புதிய முயற்சியை பற்றிய பதிவாகும். தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே இப்படி ஒரு முயற்சி நடந்தது இல்லை என்று இந்த புத்தகத்தின் பதிப்பாளர் கூறுகிறார். அதுவும் இல்லாமல் இந்தியாவிலேயே இதுதான் முதல் முயற்சி என்று வேறு அவர் கூறுகிறார். ஆம், நம்முடைய இந்த பதிவு தமிழின் முதல் கிராபிக் நாவலைப் பற்றியது.

 

ஆங்கில புத்தக உலகில், தற்போது பலரும் கிராபிக் நாவல், கிராபிக் நாவல் என்று கூறிக் கொண்டு ஒரு முழு காமிக்ஸ் கதையை நம் தலையில் கட்டி விடுகின்றனர். முறையாக இந்த கதைகள் இதழ்களில் வந்தால் விலை குறைவாக இருக்கும். ஆனால் அதனை பப்ளிகேஷனில் போட்டு கிராபிக் நாவல் என்று சொல்லி விலையை பல மடங்கு கூட்டி மிளகாய் அரைக்கின்றனர். சரி, சரி, இதனைப் பற்றி விரிவாக பின்னர் பார்ப்போம். இப்போது நம்முடைய தமிழ் கிராபிக் நாவலைப் பற்றிய பதிவுக்கு செல்வோம் வாருங்கள்.

 

மருத்துவர் எல். பிரகாஷ் அவர்களை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரியும். சில வருடங்களுக்கு முன்பு அவர் பெயர் அடிபடாத ஊடகமே இல்லை. அப்படி ஒரு நிலைக்கு பின்னர் அவர் தற்போது சிறைச் சாலையில் இருந்தவாறே பல புத்தகங்களை எழுதி வருகிறார். அவரைப் பற்றி தற்போதைய நிலையில் நான் எது சொன்னாலும் உங்கள் காதுகளில் ஏறாது என்பதால் மூத்த பத்திரிக்கையாளரும், ஊடக உலகில் பெரிதும் மதிக்கப் படும் மிகச் சிலரில் ஒருவராகிய திரு அசோகன் அவர்கள் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

 

Dr Prakash Intro Dr Prakash Intro Editoial 1

Dr Prakash Intro Editoial 2

 

இப்படியாக சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்த பிரகாஷ் அவர்கள் எப்படி கிராபிக் நாவல் உலகில் நுழைந்தார் என்பதே ஒரு தனி கதை தான். அதனை நான் கூறுவதை விட, எடிட்டர் அசோகன் சாரே திறம்பட சுவைபட கூறுவதை படியுங்கள்.

Graphic Novel 3 Motchathirkku appaal editorial 1 Graphic Novel 3 Motchathirkku appaal editorial 2

 

இவ்வாறாக வேறு ஒருவர் மறுத்து விட்டதாலும், அதிகமாக காசு கேட்டதாலும் தான் மருத்துவர் பிரகாஷ் அவர்கள் தானே வரைய ஆரம்பித்தார். இவருடைய கதைகளுக்கு இவரே சித்திரங்கள் வரைவது நமக்கெல்லாம் ஆச்சர்யம் அளித்தாலும் பல காமிக்ஸ் ஜாம்பவான்கள் இப்படித்தான் என்பதை நாம் இங்கே நினைவு கூற வேண்டும்.

 

Graphic Novel 3 Motchathirkku appaal cover 1 Graphic Novel 3 Motchathirkku appaal cover 2

 

இந்த மோட்சத்திற்கு அப்பால் என்ற கிராபிக் நாவல் இருநூற்றி நாற்பது பக்கங்களை கொண்ட ஒரு முழு நாவல் ஆகும். இதோ அந்த நாவலின் முதன்மை பக்கங்கள்:

 

Graphic Novel 3 Motchathirkku appaal Page 1 2

 

இந்த லதையை சொல்லி இதனை வாங்க விடாமல் தடுக்க எனக்கு மனமில்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன், இந்த தமிழ் கிராபிக் நாவல் ஒரு அற்புதமான சயன்ஸ் பிகஷன் கதையாகும். விண்வெளி கதைகளை விரும்பும் ரசிகர்கள் இதனை தயவு செய்து மிஸ் செய்ய வேண்டாம். கதையின் முக்கிய அம்சமே நாயகனின் துணையாக வரும் ஒரு உயிரினம் தான். அது என்ன என்பதை இங்கு யாராவது இந்த நாவலை வாங்கி விட்டு கூறினால் நான் மகிழ்வேன்.

 

Graphic Novel 3 Motchathirkku appaal End Page

 

உண்மையில் இந்த இடத்தில் முடியும் இந்த கதையில் நான் மிகவும் அதிர்ச்சி கொண்டேன். ஏனென்றால் கதாநாயகனின் உடன் இரு துண்டுகளாக வெட்டப் பட்டு அவன் மரணம் அடையும் நிலையில் இந்த கதை முடிகிறது. ஆனால் அதனை இப்படியே முடிக்காமல் டைரக்டர்ஸ் கட என்று ஆங்கில படங்களில் கூறுவதை போல தன்னுடைய கிரியேட்டர்ஸ் கட மூலமாக கதையை தொடர்கிறார் மருத்துவர் பிரகாஷ்.

Graphic Novel 3 Motchathirkku appaal End Real end Graphic Novel 3 Motchathirkku appaal ad

இப்படியாக தொடர்ந்த கதை ஒரு வழியாக முடிகின்றது. உண்மையில் இதுவும் ஒரு சீரிஸ் போல தொடரும் என்றே தோன்றுகிறது. புத்தகத்தின் உள்ளே பிரகாஷ் அவர்கள் எழுதிய சில லேட்டஸ்ட் புத்தகங்களில் விளம்பரங்கள் இருப்பதை காணலாம். படங்களின் தரம் பற்றி பேசுபவர்களுக்காக இந்த புகைப் படங்கள்: சமீபத்தில் நான் கண்ட ஒரு ஆங்கில கிராபிக் நாவலின் அட்டைப் படம்,உள் பக்க படங்கள் மற்றும் அதன் விலை. இப்போது இந்த படங்களையும் நம்முடைய தமிழ் கிராபிக் நாவலின் படங்களின் தரத்தையும் கனிப்ப்புங்கள். பின்னர் விலையை சற்று பாருங்கள். (புகைப் படங்களை கிளிக் செய்தால் படம் பெரிதாக திறக்கும்).

notes of a war story cover notes of a war story inner page notes of a war story price

 

தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தக கடைகளிலும் கிடைக்கும் இந்த புத்தகங்களை சற்றே வாங்கி படித்து பாருங்களேன் தோழர்களே. இப்படி பட்ட முயற்சிகளை நம்மைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்கள் ஊக்குவிக்காவிட்டால் வேறு யார்தான் செய்வார்கள்?

23 comments:

shaji said...

there is no post here. any error? i cannot read anything here. kindly check.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//shaji said...
there is no post here. any error? i cannot read anything here. kindly check.//

shaji, kindly refresh your browser. if you are using internet explorer, kindly change to another browser such as google chrome or the best one, firefox.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

வெளிப்படையாக என் கருத்துக்களை முன் வைக்கிறேன், தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

பிரகாஷ் என்பவரின் இந்த புது முயற்சியையா நீங்கள் சிறப்பானது என்கிறீர்கள்.

நம்ப முடியவில்லை நண்பரே, டாக்டர் பிரகாஷிற்கு திரு.அசோகன் கிராபிக் நாவல் வாங்கித்தராவிட்டாலும், லயன் காமிக்ஸையாவது வாங்கித் தரட்டும்.

அவர் வரைந்த இந்த ஓவியங்களையா கீழே உள்ள கிராபிக் நாவலுடன் ஒப்பிடுகிறீர்கள்.

தயவு செய்து நீங்கள் உதாரணம் காட்டியுள்ள ஆங்கில கிராபிக் நாவலின் அந்த 3 பக்கங்களையும் சிரமம் பாராது ஸ்கேன் செய்து போடுவீர்களானால் அச்சித்தித்திரங்களின் தரம் சற்றுப் புரியக்கூடும்.

இம்முயற்சியை வரவேற்பது காமிக்ஸ் கலையையே அவமதிக்கும் ஒர் செயலாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன்.

ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மேலும் வருத்த வேண்டாம் என டாக்டர். பிரகாஷிடமும், திரு அசோகனிடமும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நிச்சயமாக இலவசமாக தந்தால் கூட காமிக்ஸ் ரசிகன் எனும் வகையில் இக் கிராபிக் நாவலை என்னால் அங்கீகரிக்க முடியாது நண்பரே.

படங்களை கிறுக்கி விட்டு, கீழே எழுதினால் அது கிராபிக்ஸ் நாவலாகி விடாது. பரபரப்பிற்காக ஒர் கலையை கூறு போடுவதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கிறேன்.

உங்கள் பதிவில் தமிழில் வெளிவந்த முதல் கிராபிக்ஸ் நாவல் என்பதை அறிமுகம் செய்ய விரும்பும் நல்ல உள்ளம் தெரிகிறது. ஆனால் நண்பரே இந்த கிராபிக்ஸ் நாவல் தமிழ் காமிக்ஸ் சரித்திரத்தில் இடம் பிடிக்காது போனால் நான் மகிழ்வேன்.

இங்கு நான் எழுதியுள்ள கருத்துக்கள் கிராபிக் நாவலை குறித்து மட்டுமே நண்பரே.

உற்சாகத்துடன் தொடருங்கள் உங்கள் அதிரடிகளை

காமிக்ஸ் காதலன் said...

ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

நல்லதொரு அறிமுகம். கண்டிப்பாக வாங்கி படித்து விடுகிறேன்.கிரைம் நாவல் இன்னமும் வருகிறதா நண்பரே?

அடுத்ததாக ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
யார் இந்த மரண அடி மல்லப்பா?

யுவகிருஷ்ணா said...

நல்ல அறிமுகம். தொடருங்கள் தோழர்!

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

தங்களின் உண்மையான கருத்துக்களுக்கு நன்றி நண்பர் கனவுகளின் காதலரே.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

காமிக்ஸ் காதலரே,

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தங்களின் வலைப் பூ பற்றி நமது தளத்தில் சுட்டி அமைக்கப் பட்டு விட்டது. நன்றாக உள்ளது உங்கள் பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

வருகைக்கு நன்றி தோழர் யுவ கிருஷ்ணா அவர்களே. தங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

புலா சுலாகி said...

இது ஒரு சோதனை முயற்சியா அல்லது இதனைப் போல தொடர்ந்து வெளிவருமா?

தொடர்ந்து வந்தால் அது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு சோதனைக் காலம் தான்.

அசோகன் அவர்களின் வியாபார யுத்திகள் பல புத்தகங்களை ஜெயிக்க வைத்து இருந்தாலும் இந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவது சந்தேகமே.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

புலா சுலாகி said...

நண்பரே, நீங்கள் ஒரு புத்தகத்தை அறிமுகப் படுத்தியது பற்றிய பதிவு என்றால் நன்று. இதைத் தவிர வேறதுவும் சொல்வதற்க்கில்லை.

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

Lucky Limat - லக்கி லிமட் said...

நானும் இந்த புத்தகத்தை கடையில் பார்த்தேன் நண்பரே , ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை . வைத்து விட்டு வந்து விட்டேன் . மீண்டும் சென்று வாங்கி படிக்கச் வேண்டும்

அன்புடன் ,
லக்கி லிமட் - காமிக்ஸ் உலவல்

Vedha said...

thanks for the intro...........er.... should i say warning?

it is nice to try out something new. so these people have all the rights to do so.

to answer someone who queried: oh yeah, crime novel is still getting published.

Vedha said...

by the way, i felt very bad about the comparison between gipi and dr prakash. for that matter, comparison between any two sets of creators is grossly unfair.

for those who came in late, the book that you have taken is "Notes of a war story" and it was created by the celebrated italian graphic novelist gipi who has won so many accolades for his earlier works such as the innocents, garage band etc.

those who want to see the cover, click HERE and for those who want to see how good his art work is, visit HERE

Good introduction and your enthusiasm is shown in the way you have taken care by giving us introduction about the doctor from old novel and not talking anything about his "adventures" in real life.

all the best for future posts. each and every one of your posts are in different light. thats good to know.

Vedha said...

by the way, is this book available in chennai? thats amazing to know my friend shaz was looking for this for 4 months and he has to order this and acquire at a very high cost. this is a old book (3-4 years old) and loosely based on balkan war.

try it out, not that great but still a good read.

உருப்படாத உடன்பிறப்பு said...

மோட்சத்திற்கு அப்பால் = மினி மோட்சம்

ஹீ ஹீ ஹீ... ஆமாம், சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் தியேட்டருக்கு அடுத்து இருப்பது மினி மோட்சம் தியேட்டரே.

உருப்படாத உடன்பிறப்பு.

இரவின் நிசப்தம்-Silent Night said...

அனைவருக்கும் வணக்கம்.

இந்த ஒரு புத்தகத்தை குறித்து இங்கு நடக்கும் விவாதங்கள் அனைத்தும் மகிழ்வை அளிக்கின்றன. தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் மீது உங்களுக்கு உள்ள ஆர்வத்தை இவை பறை சாற்றுகின்றன. நன்றி.

ஆனால், ஒரு விடயம்: இந்த பதிவை பதித்தவரை தவிர வேறு யாராவது இந்த கதையை படித்தார்களா? இங்குள்ள கருத்துக்களை காணும்போது யாருமே படிக்காமல் தான் தங்களுடைய கருத்தை கூறி இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அப்படி படித்து இருந்தால் அந்த கதையில் கதாநாயகனுக்கு தோழன் ஒரு ஓணான் என்று கூறி இருப்பார்கள். அதனால் படிக்காமலே வெறும் நான்கு பக்கங்களின் ஸ்கான்'ஐ வைத்து இவ்வாறு (சற்றே கடினமான வார்த்தைகளை வைத்து) கருத்து கூறுவது எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றெல்லாம் கூறாமல் சற்று நிதானமாக சிந்தித்தால், இந்த புத்தகம் இப்போது உள்ள நிலையை கூறுகிறது. அதாவது ஓவியர்கள் யாரும் புதிதாக வருவது இல்லை. மேலும் இருப்பவர்களை யாரும் சிறப்பாக உபயோகிப்பதும் இல்லை. அதனாலேயே ஓவியங்களின் தரம் இப்போதுள்ள ஜன ரஞ்சக பத்திரிக்கைகளிலும் குறைந்துள்ளது. கணினியை உபயோகிப்பது அதிகரித்துள்ளது. ஓவியர்களின் - அதனால் - ஓவியங்களின் தரமும் குறைந்து உள்ளது. ஓவியத் தரம் தான் முக்கியம், கதை அல்ல என்று நிர்ணயம் செய்தால் நியோ கிளாசிக்கல் ஓவிய பாணியில் வந்துள்ள தற்கால கதைகள் அனைத்துமே அடி பட்டு போய் விடும், மாங்கா உட்பட.

நான் கண்டது வரையில் செல்லப்பன் அவர்களின் தரத்தில் எந்த ஒரு ஓவியரும் வர வில்லை. அதே சமயம் உலகத் தர ஓவியர்களும் இந்த அளவுக்கு சிரத்தையுடன் இருந்ததும் இல்லை. பல உலகத் தர காமிக்ஸ் புத்தகங்களை என்னால் கோடிட்டு காட்ட இயலும், கதைகள் அற்புதமாகவும் படங்கள் சுமாராகவும் இருக்கும் அந்த வகை பாணியை ரசிக்க கற்றுக் கொண்ட நமக்கு என் இன்னமும் ஒரு மேல்நாட்டு மோகம் பரவிக் கிடக்கிறதோ என்று புரியவில்லை. ஓவியர் மருது அவர்கள் பல முறை கூறியது போல ஓவியங்களை புரிதல் என்பது ஒரு கலை. நாம் அனைவரும் ஒரு வகையில் ஒரே மாதிரியான காமிக்ஸ் கதைகளை படித்து இருப்பதால் இந்த மனோபாவம் ஏற்படுகிறதோ என்று கூட நான் வியப்பது உண்டு. அனைவரும் மாங்கா, மாங்கா என்று கொண்டாடும் அந்த வகை ஓவியங்களை பாருங்கள். குறிப்பாக புத்தரை பற்றி வந்த அந்த எட்டு பாகங்களின் ஓவியங்களை பாருங்கள். கண்டிப்பாக (கதை பலமாக இல்லாவிடில்) நம்முடைய பொன்னி காமிக்ஸ் ஓவியர் ஸ்ரீகாந்த் அவர்களின் தரமும் இந்த தரமும் வேறுபடவில்லை.

இந்த புத்தகத்தை ஒரு மாங்கா என்று கூறி ஆங்கிலத்தில் வரைந்தவர் பெயர் வெளியிடாமல் இருந்து ருபாய் எழுநூறு விலையில் வெளியிட்டு இருந்தால் ஒரு வேலை அனைவரும் ரசித்து இருப்பார்களோ என்ற எண்ணமும் மேலிடுகிறது. சில வகை ஓவியங்கள் கதை பற்றிய புரிதலுடன் தான் அழகாக இருக்கும். (நடிகர் தனுஷ் போல - எங்களை பார்த்தவுடனே பிடிக்காது, பார்க்க பார்க்க தான் பிடிக்கும்). அதனால் கதையை ஒரு முறை படித்து விட்டு கருத்துக்களை கூறுவது நலம். இல்லைஎனில், சினிமொட்டோகிராபி நன்றாக இல்லை என்று ஒரு நல்ல படத்தை நிராகரிப்பது போலாகும். அதே சமயம் படங்கள் நன்றாக இருப்பதால் மொக்கை கதையை கூட ரச்ப்பதும் இதே வகை தான்.

மேலும் பொதுவான ஒரு தளத்தில் கருத்துக்களை பதிக்கும்போது (என்னதான் நேர்மையான கருத்துக்களாக இருந்தாலும் கூட) சற்று கவனமாக செயல்படுதல் நலம். வெளிப்படையான கருத்துக்கள் பலரின் மனதை நோகடிப்பதோடு அது ஒரு முன்மாதிரி ஆக அமைந்து விடவும் வாய்ப்புண்டு. இதனை பின் பற்றி பலரும் அதே மாதிரி கருத்துக்களை முன் வைக்கவும் வாய்ப்புண்டு, சைக்கிள் ஸ்டாண்டில் உள்ள முதல் சைக்கிள் சரிந்தவுடன் மற்ற அனைத்தும் சரிவதைப் போல.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//புலா சுலாகி said...
நண்பரே, நீங்கள் ஒரு புத்தகத்தை அறிமுகப் படுத்தியது பற்றிய பதிவு என்றால் நன்று. இதைத் தவிர வேறதுவும் சொல்வதற்க்கில்லை.//

நண்பர் புலா சுலாகி அவர்களே, இந்த புத்தகத்தை அறிமுகம் செய்ய ஆசைப் பட்டேன். வேறுதுவும் இல்லை.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Lucky Limat லக்கி லிமட் said...
நானும் இந்த புத்தகத்தை கடையில் பார்த்தேன் நண்பரே , ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை . வைத்து விட்டு வந்து விட்டேன் . மீண்டும் சென்று வாங்கி படிக்கச் வேண்டும் //

நன்றி லிமட். வங்கி பாருங்கள். நன்றாக இருந்தால் மறுபடியும் வந்து கமெண்ட் இடுங்கள். சந்தோசப் படுவேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Vedha said...
by the way, i felt very bad about the comparison between gipi and dr prakash. for that matter, comparison between any two sets of creators is grossly unfair.//

i agree with that vedha. the comparison was meant only for price aspects.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Vedha said...
by the way, is this book available in chennai?//

yes, it is available in chennai in landmark shop.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//உருப்படாத உடன்பிறப்பு said...
மோட்சத்திற்கு அப்பால் = மினி மோட்சம்

ஹீ ஹீ ஹீ... ஆமாம், சென்னை புரசைவாக்கத்தில் மோட்சம் தியேட்டருக்கு அடுத்து இருப்பது மினி மோட்சம் தியேட்டரே. //

மிகவும் நன்றி நண்பரே.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Moonless Night - Silent + Deadly said...
அனைவருக்கும் வணக்கம்.//

விரிவான கருத்துக்கு நன்றி. உங்களுக்கு மின் அஞ்சல் ஒன்று அனுப்பி உள்ளேன். பாருங்கள். நன்றி.

SIV said...

இந்த புத்தகத்தை போன வாரம் வாங்கினேன். 20 பக்கங்கள் படித்திருப்பேன். அதற்கு மேல் படிக்க முடியவில்லை. தமிழ் காமிக்ஸ் உலகிற்கு எவிதத்திலும் பயனளிக்காத முயற்சி என்பது என் கருத்து. Dr. பிரகாஷ் / அசோகன் ஆகியோர் அடுத்த முறையாவது சற்று சிரத்தையுடன் எதாவது செய்ய வேண்டும்.

அசோகன் அவர்களுக்கு காமிக்ஸ் ஆர்வம் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே. பல தரமான காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன்.

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin