Thursday, June 10, 2010

இரத்தப் படலம் காமிக்ஸ் புத்தகம் வெளியீடு

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு தேக்க நிலை வந்துள்ளது என்னவோ மறுக்க இயலாத உண்மைதான். அதனை போக்க என்னவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பது இருட்டில் உள்ள புத்தகம் போல இருக்கிறது. படிப்பதற்கு ஒரு வெளிச்சம் தேவை. இந்த நிலை எப்போது மாறும் என்ற ஒரு ஆயாசம் வந்துள்ளது மறுக்க முடியாத உண்மை. பார்க்கலாம், நிலைமை ஒரு நாள் மாறும் என்பது உறுதி, ஆனால் அது எவ்வளவு சீக்கிரம் என்பதுதான் கேள்வி.

ஆனால், சினிபுக் நிறுவனத்தினர் ஆங்கிலத்தில் சொன்னமாதிரி வெளியிட்டு விட்டனர். விலை ருபாய் நானூற்றி ஐம்பது (ஒரே ஒரு கதை மட்டும் - அதாவது முதல் பாகம் மட்டும் - முழு வண்ணத்தில்). உலக அளவில் விற்பனை சந்தை உள்ள வசதி, ஆங்கில புத்தகங்களுக்கு இந்தியாவில் உள்ள மோகம், இந்த கதையின் பிரம்மாண்டம், சமீபத்தில் படமாகவும் வந்த விளம்பர வசதி என்று பல காரணிகளை சொன்னாலும்கூட, தமிழில் படிக்கும் அந்த சுகம் இதில் இல்லைதான்.

இப்போதைக்கு முதல் இதழ் மட்டும்தான் வெளிவந்துள்ளது, மற்ற இரண்டு இதழ்களும் அடுத்த இரண்டு மாதங்களில் வந்துவிடுமாம். இதோ அந்த அட்டைகளின் அணிவகுப்பு.

இரத்தப் படலம் - பாகம் 1 அட்டை

இரத்தப் படலம் - பாகம் 2 அட்டை

இரத்தப் படலம் - பாகம் 3 அட்டை

XIII Cover XIII 2nd book Cover XIII 3rd Book cover

இந்த புத்தகத்தின் சில சாம்பிள் பக்கங்களை அந்த நிறுவனத்தினரே கொடுத்துள்ளனர். பார்த்து ரசியுங்கள்.

இரத்தப் படலம் - ஆங்கிலத்தில் - முழு வண்ணத்தில் – பக்கம் 1

இரத்தப் படலம் - ஆங்கிலத்தில் - முழு வண்ணத்தில் - பக்கம் 2

Page1 Page 2

இந்த கதை ஒரு மறக்க முடியாது சரித்திரம் ஆகும். பல தடவை படிக்கும்போதும் எனக்கு கண்ணில் நீர் வராத குறைதான், ஆம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த உணர்சிபூர்வமான கதை இது. இந்த கதையின் சில ஓவியங்கள் ஆன்லைனில் கிடைத்தன. உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி.

 

நேற்று நம்முடைய சக தோழர் பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்களுக்கு பிறந்த நாள், தாமதமானாலும் கூட வாழ்த்து சொல்வதில் தவறில்லை. பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தோழர். அவருக்கு பிடித்த மேஜர் ஜோன்ஸ் அவர்களின் படமும் இந்த வரிசையில் இருப்பது அவருக்கு மகிழ்வை தரும் என்றே நம்புகிறேன்.

3 7 5
6 8 9
4 1 2

நண்பர் விஸ்வா கேள்வி பதில்களுக்கு என்று தனியாக ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளார். காமிக்ஸ் சம்பந்தமான அனைத்துக் கேள்வி பதில்களுக்கும் அங்கு விடை கிடைக்குமாம். சுட்டி இதோ: தமிழ் காமிக்ஸ் உலகம்.

அங்கு கேட்க வேண்டிய கேள்விதான், இருந்தாலும் இங்கேயே எழுப்புகிறேன் - இரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் எப்போது வரும்?

நன்றி, வணக்கம்.

33 comments:

Cibiசிபி said...

அப்பாடி மீ தி 1st

Cibiசிபி said...

// தமிழில் படிக்கும் அந்த சுகம் இதில் இல்லைதான். //

ரொம்ப சரியாய் சொன்னீங்க போங்க

திரு விஜயன் சார் தான் இதற்க்கு மனசு வைக்கணும்

இருந்தாலும் கலரில் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான்

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. இன்னைக்குத்தான் லயன் ஆபிசுக்குப் பேசுனேன்.. ஜூலை மாசக் கடைசிலதான் XIII புத்தகம் வருமாம்..

ILLUMINATI said...

நண்பரே! ஜூலை மாதக் கடைசி என்பதே லயன் காமிக்ஸ் பதிப்பகத்தாரின் பதிலாக இருக்கிறது.
பார்க்கலாம்.

King Viswa said...

//அங்கு கேட்க வேண்டிய கேள்விதான், இருந்தாலும் இங்கேயே எழுப்புகிறேன் - இரத்தப் படலம் ஜம்போ ஸ்பெஷல் எப்போது வரும்?//

நண்பரே,
உங்கள் கேள்விக்கு பலர் பதில் அளித்தாலும், (கிட்ட தட்ட சரியான பதில்தான் என்றாலும்கூட) அட்டைப்படங்களை காண நீங்கள் ஓரிரு நாட்கள் காத்திருங்கள்.

தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் அவை இந்த ஞாயிறு அன்று வலையேற்றப்படும்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நன்றி சிபி சார். தொடர்ந்து வாருங்கள்.

கலரில் பார்ப்பது ஒரு சுகம் என்றால், தமிழில் படிப்பது மற்றொரு சுகம். இரண்டும் ஒருங்கே கிடைப்பதில்லையே? (தங்கப் பதக்கம் சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பா.. இன்னைக்குத்தான் லயன் ஆபிசுக்குப் பேசுனேன்.. ஜூலை மாசக் கடைசிலதான் XIII புத்தகம் வருமாம்.//

தகவலுக்கு நன்றி நண்பரே, இருந்தாலும்கூட லயன் காமிக்ஸ் ஆபீசில் நீங்கள் யாரிடம் இருந்து தகவலை பெற்றீர்கள் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் கடந்த ஆறு மாதங்களாக எப்போது போன் செய்தாலும் "அடுத்த வாரத்தில் வந்து விடும்" என்பதே பதிலாக இருக்கிறது.

அதனால் தான் விஸ்வாவிடன் கேட்கிறேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//ILLUMINATI said...
நண்பரே! ஜூலை மாதக் கடைசி என்பதே லயன் காமிக்ஸ் பதிப்பகத்தாரின் பதிலாக இருக்கிறது.
பார்க்கலாம்//

நண்பரே,

நன்றி. விஸ்வாவின் பதிலையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் அவை இந்த ஞாயிறு அன்று வலையேற்றப்படும்//

நன்றி. சீக்கிரம் வெளியிடுங்கள் தோழர்.

Lucky Limat - லக்கி லிமட் said...

நண்பரே,
பல ஆங்கில scanlations கிடைத்தாலும் அதையெல்லாம் டவுன்லோட் மட்டும் செய்து விட்டு படிக்காமல் இருப்பது நமது ஜம்போ ஸ்பெஷலுக்காக தான். ஜூலையில் கிடைக்கும் என்பதும் விஸ்வா அட்டைப்படங்களை பதிவேற்ற போகிறார் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

அப்பறம் நண்பரே , நிறைய வேலை பளுவோ? பதிவையே காணோம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தகவலுக்கு நன்றி நண்பரே!

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//அப்பறம் நண்பரே , நிறைய வேலை பளுவோ? பதிவையே காணோம்.//

ஆமாம் சிவ். வருகைக்கு நன்றி.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//தகவலுக்கு நன்றி நண்பரே//

நன்றி நிஜாம் சார். அடிக்கடி வாங்க.

Vedha said...

the 2nd and 3rd cover loks stunning. infact, this is the 1st time am seeing them.

Vedha said...

thanks for the info. waiting for viswa update.

Anonymous said...

விஸ்வா அப்டேட் போட்டுட்டார் போல

King Viswa said...

அப்டேட் வெகு விரைவில் வரும் செந்தழல் ஜி.

rajaganesh said...

ஹாய்,
கிங்விஷவா நண்பரெ ரத்த படலம் அட்டை படங்கள் என்ன ஆச்சி?

Rebel Ravi said...

From The Desk Of Rebel Ravi:

jolly,

very good post with lots of information. will definately buy.


Rebel Ravi,
Change is the Only constant thing in this world.

Unknown said...

நான் சிறுவதிலிருந்து காமிக்சின் ரசிகன். இப்போது கூட வாங்கி வைத்துக்கொள்வது உண்டு. எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் கடன் தருவேன். காமிக்ஸ் புத்தகங்களை மட்டும் தருவதில்லை. அது என்னுடைய நெறிங்கிய நண்பனாக இருந்தாலும். இங்கே யாருக்கும் காமிக்ஸின் அருமை தெரிவதில்லை. அது ஏதோ சிறுபிள்ளை மட்டும் படிப்பது என்று நினைக்கிறார்கள். இப்போது கூட என் நண்பர்கள் என்னை கிண்டல் செய்வதுண்டு. இந்த தளங்களை எதார்ச்சயமாக பார்க்க நேர்ந்தது. நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்னைப்போல் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது அளவிட முடியாத சந்தோஷத்தை தருகிறது. பழய காமிக்ஸின் அட்டைகளைப்பார்க்கும் போது மலரும் நினைவுகள் வருகின்றன. அது ஏற்படுத்தும் உணர்ச்சிகளுக்கு வார்த்தை கொடுக்க தெரியவில்லை எனக்கு.அந்தப் புத்தகங்கள் இப்போது என்னிடமில்லை.

Admin said...

நண்பர்களே நானும் காமிக்ஸ் களின் தீவிர வாசகன். தற்போது துபாயில் இருக்கின்றேன். இங்கு தமிழ் காமிக்ஸ் கள் இல்லை. இயன்றவரை முயன்று விட்டேன். இந்திய பதிப்ப்கங்கள் மூலம் பெறலாமா?

எனக்கு ஒன்லைன் புத்தகங்களில் அவ்வளவு நாட்டமில்லை.ஒன்லைன் நூற்கள் தொலைபேசி முத்தங்கள் போல. அவை அவ்வளவாக சுவாரசியமாக இருக்காது.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

நண்பரே,

வலையுலகிற்கு புதியவனான என்னுடைய ஜேம்ஸ் பாண்ட் குறித்த புதிய வலைத்தளம், தமிழில் - உங்கள் ஆதரவை நாடி.

http://007intamil.blogspot.com/2010/06/x.html

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

நன்றி திரு ரவி அவர்களே.

அடிக்கடி வருகை தாருங்கள். இந்த ஞாயிறு மறுபடியும் புதிய பதிவுடன் வருகிறேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//அந்தப் புத்தகங்கள் இப்போது என்னிடமில்லை//

விஜய் நண்பரே,
லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் வந்த காமிக்ஸ்களை வைத்துள்ளனர். விற்பனைக்கு. அதே விலையில். வாங்க நினைத்தால் வாங்கலாம்.

வருகைக்கு நன்றி.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//sarhoon said...
நண்பர்களே நானும் காமிக்ஸ் களின் தீவிர வாசகன். தற்போது துபாயில் இருக்கின்றேன். இங்கு தமிழ் காமிக்ஸ் கள் இல்லை.//நண்பரே, உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் துபைக்கே புத்தகத்தை தபாலில் அனுப்புவார்கள்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

ஜேம்ஸ் நண்பரே,

வலையுலகிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன். வாழ்த்துக்கள்.

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

புத்தகம் இன்றுதான் கிடைத்தது. வண்ணக் கலவை சற்று குறைவாக இருந்தாலும், மனதளவில் நிறைவு பெற்றேன்.

மீ த ஃபர்ஸ்ட்டு said...

மீ தி டுவென்டி எய்ட்து.

Admin said...

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...
//sarhoon said...
நண்பர்களே நானும் காமிக்ஸ் களின் தீவிர வாசகன். தற்போது துபாயில் இருக்கின்றேன். இங்கு தமிழ் காமிக்ஸ் கள் இல்லை.//நண்பரே, உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் துபைக்கே புத்தகத்தை தபாலில் அனுப்புவார்கள்.//

எனக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளினை தர முடியுமா

King Viswa said...

//எனக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளினை தர முடியுமா//

O4562-272649.

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

Sweatha Sanjana said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin