தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இனிமேல் தொடர்ந்து காமிக்ஸ் பதிவுகளை இடுகிறேன் (செந்தழல் ரவி அண்ணே, ஓகேவா?). குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் வெளியாகும் காமிக்ஸ் புத்தகங்களை அட்டவணைப்படுத்தவாவது இது உபயோகமாகும். அதைப்போலவே வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் இந்த பாதம் என்ன என்ன காமிக்ஸ் புத்தகங்கள் வெளியானது என்பதை தேடவும் இந்த பதிவுகள் பயன்படும்.
இதற்க்கு முன்பாக, மதுரையில் காமிக்ஸ் எங்கே கிடைக்கும் என்று பல நண்பர்கள் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக இந்த தகவல்:
1. சூர்யா புக் செண்டர்
எண் 157/A, அழகர் கோவில் தெரு, தல்லாகுளம் போஸ்ட்,
மதுரை 2.
கடையின் தொலைபேசி எண்: 2533 042.
கைபேசி எண்: 99769 25649
அத்யாவசிய தேவை என்றால் மட்டுமே இந்த எண்ணில் அழைக்கவும், இல்லையெனில் கடையின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும்.
2. ஸ்ரீராம் நியூஸ் ஏஜென்சி,
78/47. நன்மை தருவார் கோவில் தெரு,
மதுரை 1.
அண்ணாமலை அவர்களின் கைபேசி: 99941 35847
சரி, இந்த மாதம் வெளியான காமிக்ஸ் புத்தகங்கள் என்னென்ன என்பதை பார்ப்போமா?
ஃபெப்ரவரி 2015: தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்
1. இரத்தப்படலம் (பாகம் 22 & 23)
இரத்தப்படலம் தொடரின் மறு ஆரம்பமான இந்த தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது பாகங்கள் இந்த இதழில் உள்ளன. 104 பக்கம் கொண்ட முழு வண்ண இதழின் விலை ரூபாய் 120.
2. ஆதலினால் காதல் கொள்ளாதீர்
வாய்ன் ஷெல்டன் தொடரின் தனி கதைகளில் இதுவும் ஒன்று. ஆகையால் முந்தைய கதைகளை படிக்காமலேயே இது புரியும் (இருந்தாலும் புதிய வாசகர்களுக்காக கதாபாத்திர அறிமுகம் செய்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்). 54 பக்க புத்தகத்தின் விலை ரூபாய் 60.
3. சைத்தான் விஞ்ஞானி (ஸ்பைடர் கதையின் முதல் மறுபதிப்பு)
தமிழ் காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் கதைகளில் இதுவரை மறுபதிப்பு செய்யப்படாத கதைகளில் ஒன்றான சைத்தான் விஞ்ஞானி கதை இம்மாதம் மறுபதிப்பு செய்யப்பட்டு வந்துள்ளது. சென்ற மாதமே சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகவேண்டிய இந்த இதழ், பைண்டிங் தாமதம் ஆனதால் இம்மாதம் வெளியாகி இருக்கிறது.
122 பக்கங்களை கொண்ட இந்த கருப்பு வெள்ளை இதழின் விலை ரூபாய் 50. இந்த இதழின் சைஸ் மேலே இருக்கும் இரண்டு இதழ்களை போல பெரியதாக இல்லாமல் கைக்கு அடக்கமாக, படிக்க ஏதுவாக உள்ளது. முன்பு பாக்கெட் சைசில் வந்த இந்த கதை இப்போது அதைவிட பெரிய அளவில் படிக்க நன்றாகவே இருக்கிறது.
இதைத்தவிர 2012 ஆண்டில் வெளியான இதழ்களின் மறுபதிப்பு வரிசையில் என் பெயர் லார்கோ மற்றும் டபுள் திரில் ஸ்பெஷலை தொடர்ந்து மூன்றாவதாக கேப்டன் டைகரின் தங்க கல்லறை இதழும் நூறு ரூபாய் விலையில் வெளியாகி இருக்கிறது.
1997ல் முதலில் கருப்பு வெள்ளையில் இரண்டு பாகங்களில் வெளியான இந்த இதழ் இப்போது முழு வண்ணத்தில் படிக்க அட்டகாசமாக இருக்கிறது. என்ன, கருப்பு வெள்ளை இதழின் மொழிபெயர்ப்பு கொஞ்சம் பட்டி, டிங்கரிங் செய்யப்பட்டு இருப்பது பழைய வாசகர்களுக்கு ஆங்காங்கே இடிக்கும்.
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி. வணக்கம்.
10 comments:
சூப்பர்.
தொடர்ந்து பதிவிட (செந்தழல் ரவியின் சார்பாகவும்) வாழ்த்துகள்.
அருமை சார் ..இனியாவது தாங்கள் தொடர்ந்து வர வேண்டும் ..புத்தகம் வெளிவந்த தகவலுடன் தங்கள் விமர்சனத்தையும் எதிர் பார்க்கிறேன் ..
அருமை சகோ.
நன்றி விஸ்வா.
//Paranitharan K said...
அருமை சார் ..இனியாவது தாங்கள் தொடர்ந்து வர வேண்டும் ..புத்தகம் வெளிவந்த தகவலுடன் தங்கள் விமர்சனத்தையும் எதிர் பார்க்கிறேன்//
நன்றி பரணி. கண்டிப்பாக இனிமேல் நம்முடைய விமர்சனம் வெளியாகும்.
//ரவி said...
அருமை சகோ.//
நன்றி ரவி.
எனதருமை காமிக் நண்பர்களே,
இடையில் அயர்ந்து இருந்த சில காமிக் வலைப்பூக்கள் மறுபடியும் பூக்க ஆரம்பித்து இருக்கின்றன. உங்களின் கவனத்துக்கு:
பயங்கரவாதி டாக்டர் செவனின் அகொதீக: இங்கே கிளிக்
முத்து விசிறியின் காமிக்ஸ் வலைப்பூ: இங்கே கிளிக்
ஒலக காமிக்ஸ் ரசிகரின் தளம்: இங்கே கிளிக்
பால கணேஷின் மேய்ச்சல் மைதானம்: இங்கே கிளிக்
கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம்: இங்கே கிளிக்
கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் 2: இங்கே கிளிக்
ஜாலி ஜம்ப்பரின் (நானேதான்) தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்: இங்கே கிளிக்
ஆஹா....அயர்ந்து இருந்த ஆறு காமிக் வலைப்பூக்கள் மறுபடியும் பூக்க ஆரம்பித்து இருப்பதை பார்க்க...இங்கே கிளிக்...சூப்பர்...!
என் பங்குக்கு ஒரு....இங்கே'கிளிக்'
அப்படியே கதையை, புத்தகத்தை பற்றிய விமர்சனமும் எழுதினால்.......
Nice article, good information and write about more articles about it.
Keep it up
success tips in tamil
Post a Comment
கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.
இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.
தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.
இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.
இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!