Showing posts with label முன்னோட்டம். Show all posts
Showing posts with label முன்னோட்டம். Show all posts

Thursday, December 29, 2011

The reurn of இரும்புக்கை மாயாவி - லயன் கம்பேக் ஸ்பெஷல் (Jan 2012)

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

இந்த வருடம் (2011) நம் அனைவருக்கும் மிகவும் சோதனையாக அமைந்தது கண்டு வருத்தம் அடைந்தாலும், அடுத்தது என்ன என்று எதிர்நோக்குகையில் குகையின் முடிவில் வெளிச்சம் மிகவும் பிரகாசமாக தெரிகிறது. ஆமாம், தோழர்களே. நம்முடைய அபிமான லயன் காமிக்ஸ் இந்த இன்டர்நெட் யுகத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதன் முதல் கட்டமாக இதோ எடிட்டர் விஜயன் சாரின் பிரத்யேக வலைப்பூ:

http://lion-muthucomics.blogspot.com/

மீள்வருகையின் முதல் கட்டமாக அற்புதமான ஆர்ட் பேப்பரில் உயர்தர அச்சில் முழுவண்ணகலவையில் ஒரு மீள்வருகை சிறப்பு இதழ் தயாராகி வருகிறது. நேற்று சிவகாசி சென்ற நான் மேலும் பல விவரங்களை சேகரித்து வந்துள்ளேன். அதன் விளைவே இந்த பதிவு.

  • புத்தகத்தின் விலை: ருபாய் நூறு மட்டுமே.
  • புத்தகத்தின் அளவு: சைஸ் (சமீபத்தில் வந்த விண்வெளி கொள்ளையர் அளவு)
  • புத்தக பக்கங்கள்: இருநூறு பக்கங்கள்.
  • புத்தகத்தின் அமைப்பு: நூறு பக்கங்கள் முழு வண்ணத்தில் + நூறு பக்கங்கள் கருப்பு வெள்ளையில்.
  • புத்தகத்தில் உள்ள கதைகள்: ஐந்து
  • புத்தகம் கிடைக்குமிடங்கள்: லயன் காமிக்ஸ் அலுவலகம்,சென்னை புத்தக கண்காட்சி
  • எப்போது முதல் கிடைக்கும்: ஜனவரி பத்தாம் தேதி முதல்
  • புத்தகத்தை வாங்குவது எப்படி: ருபாய் 130 ஐ முன்பதிவு லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் செய்து வாங்கலாம். சென்னை வாசகர்கள் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கலாம்.

லயன் காமிக்ஸ் மற்றும் முத்து காமிக்ஸ் வாசகர்கள் ஒரு விஷயத்தை நன்றாக யோசிக்க வேண்டும். தமிழில் தரமான அச்சில், நல்ல தாளில், தெளிவான சித்திரங்களுடன், திறமையான மொழிபெயர்ப்புடன் காமிக்ஸ் படிக்க வேண்டுமெனில் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலக எண்ணிற்கு போன் செய்து (04562-272649) சந்தா விவரங்களை கேட்டறிந்து சந்தா கட்டவும், உங்கள் வீடு தேடி காமிக்ஸ் புத்தகங்கள் வந்து சேரும். இந்த புத்தகத்தில் உள்ள கதை விவரங்கள்:

1. லக்கி லுக் ஒற்றர்கள் ஓராயிரம்

2. கேப்டன் பிரின்ஸ் - பரலோகப்பாதை பச்சை

3. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை

4. எஜன்ட் காரிகன் - சாத்தானின் தூதன் டாக்டர் செவன்

5. இரும்புக்கை மாயாவி முழுநீளக்கதை

புத்தகத்தின் அட்டைப்படங்கள்:  (நன்றி விஜயன் சார்)

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு முகப்பு அட்டை

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் சிறப்பு வெளியீடு பின் அட்டை

Lion Comeback special front cover Lion Comeback special back cover

 

இந்த வருடம் ஒரு மாதம் விடுமுறையில் வந்து இருப்பதால் காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் சென்னை புத்தக கண்காட்சியில் சந்திக்க ஆவல். குறிப்பாக அய்யம்பாளையம் அவர்களை.

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றி. வணக்கம்.

Sunday, September 20, 2009

முன்னோட்டம் 2:லயன் காமிக்ஸ் 207-கொலை செய்ய விரும்பு

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான் (அந்த முதல் முன்னோட்டத்தை இங்கே கிளிக் செய்து படியுங்கள்). அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் கூட லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.

சரி வெறுமனே அட்டைப் படங்களை மட்டும் போடாமல் வேறு சில தகவல்களையும் வழங்கலாம் என்று நினைத்ததால் இந்த பதிவு தொடர்கிறது. சென்ற இதழ் மாண்டவன் மீண்டானில் அடுத்த லயன் காமிக்ஸ் பற்றிய விளம்பரம் இப்படி ஆக வெளியாகி இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Next issue Ad

வழமை போல இந்த இதழையும் நாம் ஏற்கனவே படித்து விட்டதால் இதோ இந்த இதழின் சில உள் படங்களை விளம்பரம் போல மாற்றி அமைத்ததின் விளைவை பாருங்கள்.

Next Issue A
Next Issue B
Next Issue c
Next Issue makeup

என்ன நண்பர்களே, இந்த முன்னோட்டம் பிடித்து இருந்ததா? என்ன பிடிக்கவில்லையா? சரி, சரி, இதோ இந்த லயன் காமிக்ஸ் புத்தகத்தின் முழு படம்.

both

சாம்பியன்ஸ் கோப்பை பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சார்ந்த ஒரு கதையை வெளியிட இருக்கும் நம்முடைய ஆசிரியரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆமாம், இந்த கதையில் கிரிக்கெட் ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வில்லி கார்வின் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதை கவனியுங்கள்.

இந்த புத்தகம் இன்னும் ஓரிரு வாரங்களில் அனைவருக்கும் வந்து சேர்ந்து விடும். அப்போது இதனை பற்றிய முழுமையான விமர்சனத்தை பார்க்கலாம். வழமை போல இந்த புத்தகம் எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரே பதில்: தயவு செய்து சந்தா தொகையை உடனே செலுத்துங்கள் என்பதுதான். அப்படி முடியாதவர்கள், இந்த பதிவை படியுங்கள்.

நன்றி, வணக்கம்.

Saturday, September 12, 2009

அடுத்த பதிவு?

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

இந்த புத்தகம் வெளிவந்தபோது அமோக வரவேற்ப்பை பெற்றது. தற்போதைய ரசிகர்களுக்கு இது அந்த அளவுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் இது ஒரு கிளாசிக் என்பதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.

 

இந்த பதிவு ஒரு டீசர் தான். முழுமையான பதிவு அடுத்த வாரத்தில் வெளிவரும். அதற்குள் இந்த படத்தை பார்த்து இது எதைப் பற்றியது என்று கண்டுபிடிக்க முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். 
என்னை மாதிரி இருக்கும் சிலருக்கு இதோ சில குளு'க்கள்:
 
 
* இந்த புத்தகம் எண்பதுகளில் வந்தது.
* இந்த புத்தகத்தின் கர்த்தா தற்போது தமிழ் சினிமாவில் இருக்கிறார்.
* இந்த புத்தகம் கிடைக்காதா என்று இன்னமும் பலர் தேடி அலைகின்றனர். ரேர் புத்தகம்.
* இதன் கதை சிறைச்சாலையில் ஆரம்பித்து பிளாஷ்பேக்கில் சொல்லப்படும்.
விடைகளை கமெண்ட் மூலமும் தெரிவிக்கலாம்.
நன்றி வணக்கம்.

Friday, July 24, 2009

முன்னோட்டம் 1: முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? Preview

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

 

கடைசியாக முத்து காமிக்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இப்போது சரியாக ஐந்து மாதங்கள் கழித்து அடுத்த இதழ் வெளிவர இருக்கிறது. அடுத்து வரப் போகும் முத்து காமிக்ஸ் பற்றிய முன்னோட்ட பதிவு இது.

 

தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான். அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.

இந்த கதை சரியாக நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. இதனுடைய ஆங்கில மூலம் உலகில் மிகச் சிலரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிட தக்கது. குறிப்பாக ஆன் லைனில் இந்த புத்தகம் கிடைப்பது இல்லை. ஆனாலும் இந்த புத்தகம் நண்பர் ஒருவரிடம் இருப்பதால் இந்த புத்தகம் வெளிவந்த உடனே இதனைப் பற்றிய பதிவை நாம் வெளியிடலாம். என்ன சரிதானே?

முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? -  மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

Muthu Comics 312 Mandrake Nizhal Edhu Nijam Edhu

இந்த இதழை பற்றி சென்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் வந்த விளம்பரம் இதோ (இந்த கதை ஏற்கனவே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு விளம்பரம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது):

முத்து காமிக்ஸ் இதழ் எண் 311ல் வந்த விளம்பரம் - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம்

Muthu Comics Issue No 311 Dated 03-02-2009 Next Issue

Comics Classics Issue No 24

சென்ற பதிவாகிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் மக்களிடம் சிறப்பான வரவேற்ப்பை பெற்றதை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். அதனை இன்னும் படிக்காத ரசிகர்களுக்கு இதோ ஒரு மீள்-விளம்பரம்:

 

அந்த பதிவை படிக்க இந்த அட்டைப் படத்தை கிளிக் செய்தாலே போதும். அருமையான இந்த கதை சரியாக இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு காணக் கிடைக்காத பொக்கிஷம். இந்த கதை இப்போது உங்களுக்கு உலக அளவில் கிடைக்கும் ஒரே இடம் சிவகாசி தான். உலகில் அனைத்து மொழிகளிலும் மிகவும் அரிதான புத்தகம் இது.

 

நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04562 – 262749.

 

உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.

Blog Widget by LinkWithin