Tuesday, October 9, 2007

மாயாவிகளின் உலகில்


உயிர்மை- செப் 2003 -
வார்த்தைகளும் படங்களும் -
டிராட்ஸ்கி மருது

கட்டுரைத் தொடரில் இருந்து சில பகுதிகள்.

*

1950 களின் மத்தியில் முதலாம் வகுப்பு படிக்கும் போதே இந்த நோய் என்னைப் பீடித்து விட்டது. இன்று வரை அது தீரவே தீரவில்லை என்பதுடன் அந்த நோய் தரும் மயக்கம் சுகமான அனுபவமாகவும் மாறி விட்டது.அம்மயக்கத்தினூடே என்னைப்போல ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கொண்டவனை நீங்கள் காணவே முடியாது என்றுதான் கூறுவேன். உலகம் முழுவதிலும் என்னைப் போன்ற நோயாளிகளுக்கு கணக்கே இல்லை. அவர்களும் அவரவர் நாடுகளில் இன்றைய நவீன கலாச்சாரச் சூழலில் 'மிக ஆரோக்கியமானவர்களாக' இருந்து வருகிறார்கள். அத்தகைய சூழல் இங்கு இல்லாததால் அந்த ஆரோக்கியம் எனக்குக் கிட்டாமல் போய்விடக்கூடாது என்று அலைந்து திரிந்து அந்த மயக்கத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறேன்.

மதுரையில் 1956-57 களில் மிகச்சிறிய வயதில் என் தந்தை என்னையும் என் சகோதரர்களையும் ரீகல் டாக்கீஸுக்கு அழைத்துச் செல்வார். அப்படிச் செல்லும்போது அவருடைய பால்யகால நண்பர் சுவாமிநாதன் டவுன் ஹால் சாலையில் நடத்திய 'பாரதி புத்தக நிலையத்தில்' சுமார் இரண்டு மணி நேரம் செலவிடுவோம். தியேட்டருக்குப் போகுமுன் புத்தகக் கடையிலிருந்த வெளிநாட்டு காமிக்ஸ்கள் அனைத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற வேகத்தில் புரட்டிக் கொண்டிருப்பேன். இன்றுவரை அந்த உணர்ச்சி வேகம் அப்படியேதான் இருக்கிறது.மிகுந்த ஆசையுடன் பல புத்தகங்களை வாங்கினாலும் எல்லாப் புத்தகங்களையும் வாங்க முடியவில்லையே என்ற பெரும் ஏமாற்றத்துடன் தான் எப்போதும் திரும்புவேன்.
...
...
...
டார்ஜான் என்னைக் கொள்ளை கொண்ட பாத்திரம். டார்ஜானின் உடல் அமைப்பை வரைந்து பார்ப்பது ஒரு வளரும் ஓவியனுக்கு மிகச்சிறந்த பயிற்சியாகும். காமிக்ஸ் ஓவியர் ஹேகார்த் வரைந்த சிங்கத்தின் வாயைப் பிளக்கும் டார்ஜானை வரைந்து பார்த்துப் பெருமைப் பட்டுக் கொள்வேன்.

....
....
....
படங்களோடு தொடராக நடத்தப் படுகிற, சொல்லப் படுகிற காமிக்ஸ் புத்தகங்களைச் சிறுவயதில் பார்க்க ஆரம்பித்த நான் அனிமேஷன், கிராபிக் நாவல். இண்டர்நெட், செல்போன்வழி அனுப்பப் படும் அனிமேட்டட் பிக்சர் மெசேஜ், டிஜிட்டல் சினிமா, எல்சிடி ஹோர்டிங், என அதன் பல பரிணாமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் மற்றும் காமிக்ஸ்களின் மொழிதான் இந்த நூற்றாண்டின் மொழியாக அறியப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சொல்ல முடியாதவற்றையெல்லாம் இந்த ஊடகத்தில் சுலபமாக சொல்லிவிட முடிகிறது. மற்ற நாடுகளை விட ஜப்பானியரும், பிரெஞ்சுக்காரர்களும் இவ்வடிவத்திற்கு அடிமையாகி விட்டார்கள். ஜப்பானில் மாதத்திற்கு நாற்பதுக்கும் மேற்பட்ட காமிக்ஸ் பத்திரிகைகள் ஒவ்வொன்றும் சுமார் 300 பக்கங்கள் கொண்டதாக வெளிவருகின்றன. காமிக்ஸ் ஓவியர்கள் சினிமா நட்சத்திரங்கள் போல அங்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறார்கள். இந்தக் காட்சிக் கலாச்சாரத்தை நாம் வளர்த்தெடுக்காததால் தான் உலகமொழியாகிய சினிமா நம்நாட்டில் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

*****************************

மருதுவின் இந்தக் கட்டுரையில் தமிழ்காமிக்ஸ்களைப் பற்றி நேரடியாகப் பேசாவிட்டாலும் காமிக்ஸ் ரசிகனின் உணர்வுகளைச் சொல்கிறார். மேலும் நம்நாட்டில் போதுமான அங்கீகாரம் காமிக்ஸ்களுக்கு கிடைக்காததையும் ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

ஆனாலும் தமிழில் வாசிக்க ஆரம்பித்தவர்களில் இன்றைய 25 வயது முதல் சுமார் 50 வயதுக்குட்பட்ட தலைமுறையினர் தமிழ்காமிக்ஸ்களை வாசித்திருப்பார்கள். அதன் இன்பம் அறிந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. மருது போன்ற மூத்த தலைமுறையினர் நேரடியாக வெளிநாட்டு காமிக்ஸ்களை வாசித்து வளர்ந்தது போலவே இன்றைய இளைய தலைமுறையும் காமிக்ஸ் என்றால் ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை மட்டுமே கண்டு வளர்வதை காண முடிகிறது. காமிக்ஸ் கதாபாத்திரங்களை தொலைக்காட்சித் திரையில் காட்டூன் சானல்களிலும் சினிமாத்திரையிலும் அசைபடமாகவே கண்டு விடுகிறார்கள். இன்னமும் நூலிழையில் உயிர்வாழும் முத்துகாமிக்ஸ் போன்ற தமிழ் காமிக்ஸ் இதழ்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்ய நம்மாலான முயற்சியாக தமிழ் காமிக்ஸ் உலகம் போன்ற வலைப்பதிவுகளும் உதவட்டும்.

8 comments:

Unknown said...

Same thing i am also like comics very much like madiravathi mandrek

ரவி said...

பதிவுகள் போட ஆரம்பிக்கலாம் !!!!

என்னுடைய காமிக்ஸ் நினைவுகளை எழுதுகிறேன்...

ரவி said...

பின்னூட்டங்கள் வலதுபுறம் வரும் வழிசெய்யவும்...

ரவி said...

சரியாக உங்கள் ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்...

தமிழில் தரமான காமிக்ஸ்களை மீண்டும் வருமா என்பது கேள்விக்குறியே...

ஆக்ரமித்துவிட்ட ஜெட்டிக்ஸும், கார்ட்டூண் நெர்வொர்க்கும் மற்ற மற்ற ஆக்டிவிட்டீஸும்...

ஹும் அது ஒரு காலம்...

லக்கிலுக் said...

ஸ்டார் காமிக்ஸ் என்று காமிக்ஸை லயன் ரசிகர்கள் தொடங்கியிருக்கிறார்கள். முதல் இதழ் எனக்கு அன்பளிப்பாக வந்தது. அதுகுறித்து எழுதுகிறேன். பிக் எப்.எம்.மில் பணிபுரியும் நண்பர் விஸ்வா அதனை நடத்துகிறார்.

மிக மிக தரமான காமிக்ஸ் அது. முழுக்க வண்ணத்தில் உயர்தர காகிதத்தில். பொருளாதார ரீதியாக முதல் இதழ் சரியாக போகவில்லையாம்.

Rafiq Raja said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே, நன்பனே... நன்பனே... நன்றி.

Ram Kasi said...

நன்றி. கண்டுகொண்டேன் நல்லதொரு வலைப்பக்கம். i tried real hard to type in tamil.
good effort people. i too love reading comics, and i could sense the authors feelings. you have mentioned that , ppl between 25 and 50, would have certainly crossed that comic era, incl me also. i dont fall under that segment, i am 24.( ha ha ha )

david santos said...

My friend, Please!

Send an email to the Brazil embassj your country and repor the injustice that the brazilian courts are making with this girl

Thank you

The resignation is to stop the evolution. (David Santos in times without end)

David Santos

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin