Wednesday, April 14, 2010

சிறப்பு பதிவு: லக்கிலுக்கின் ”மேற்கே ஒரு மாமன்னர்!”

 

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு விடுமுறை தின நல்வாழ்த்துக்கள். வழமை போல சமீப காலங்களில் பதிவிட இயலவில்லை. மன்னிக்கவும். அதனால் இன்று (இன்று மட்டுமே) ஒரு மீள்பதிவு. ரசிகர்கள் மன்னிக்க வேண்டுகிறேன். இனிமேல் இதுபோல தொடராது.


லயன் காமிக்ஸின் 202வது இதழாக முழுவண்ணத்தில் வெளிவந்திருக்கும் லேட்டஸ்ட் காமிக்ஸ் “மேற்கே ஒரு மன்னர்”. நிழலைவிட வேகமாக துப்பாக்கியை கையாளும் திறமை கொண்டவரான லக்கிலுக் ஒரு கோமாளிக்கூட்டத்திடம் மாட்டி படும் அவதைகள் வழக்கம்போல பெட்டிக்கு பெட்டி நகைச்சுவையாக அமைந்திருக்கிறது.

”தனிமையே என் துணைவன்” என்ற பாடலை கதையின் இறுதிக் கட்டத்தில் பாடுவது தான் லக்கிலுக்கின் வழக்கம். மாறாக இந்த கதையில் பாடலை பாடியவாறே அறிமுகமாகிறார். முன்பெல்லாம் செயின் ஸ்மோக்கராக இருந்த லக்கிலுக் சில ஆண்டுகளாக தம் அடிப்பதை விட்டு விட்டதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது.

கிராஸ் சிட்டியின் செல்வந்தர் ஒருவர் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டு தான் அமெரிக்காவின் மன்னர் என்று நினைத்துக் கொண்டு, அரண்மணை, இராணுவம், அமைச்சர்கள் இத்யாதிகளை தன் சொந்த செலவில் அமைத்து கும்மி அடித்துக் கொண்டிருக்கிறார். கிராஸ் சிட்டிக்கு வரும் லக்கிலுக் ஏதோ ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில் அவருக்கு உதவிவிட உடனடியாக லக்கிலுக்கை தளபதி ஆக்கிவிடுகிறார்.

ஒரு மரியாதைக்காக அந்த மன்னரின் (?) அரண்மனைக்கு விசிட் அடிக்கும் லக்கிலுக்குக்கு அதிர்ச்சி. பைத்தியக்காரனாக இருந்தாலும் அந்த மன்னர் ஒரு இராணுவத்தையே நிஜமாக அமைத்திருப்பதை காணுகிறார். ஒரு பைத்தியக்காரன் கையில் அழிவு ஆயுதங்களோடு இராணுவம் இருப்பது ஆபத்தானது என்று ஊருக்குள் எச்சரிக்கிறார்.

யாரும் (ஷெரிப் உட்பட) லக்கிலுக்கின் எச்சரிக்கையை சீரியஸாக எடுக்கவில்லை. லக்கிலுக் பயந்தது போலவே ஒரு மொள்ளமாறி அந்த பைத்தியக்கார மன்னனுடன் சேர்ந்துவிட அவர்கள் வசம் இருக்கும் இராணுவம் கிராஸ் சிட்டியை கைப்பற்றி வங்கியை கொள்ளையடிக்கிறது. இந்த கூத்துகளுக்கெல்லாம் லக்கிலுக் எப்படி முடிவு கட்டுகிறார் என்பதை விலாநோக சிரிக்க வைத்து சொல்கிறார்கள்.

பத்து ரூபாய் விலையில் முழு வண்ணத்தில் வெளியாகியிருக்கும் “மேற்கே ஒரு மாமன்னர்” இப்போது கடைகளில் பரபரப்பாக விற்பனையாகிறது. இந்த இதழின் ஹாட்லைன் பகுதியில் லயன் காமிக்ஸ் ஆசிரியர் எஸ்.விஜயன் ஒரு விவகாரத்தை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். சினிமா படங்களுக்கு வீடியோ பைரசி வருவது போல இப்போது காமிக்ஸ்களும் சிடி வடிவில் திருடி விற்கப்படுகிறதாம். அது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பது கீழே!



“இரத்தப் படலம்” - தொடரும் ஒரு சோக காவியத்தை யாரும் மறந்திருக்க முடியாது. கமல் நடித்த “வெற்றி விழா” படத்துக்கே அந்த காமிக்ஸ் தொடர் தான் இன்ஸ்பிரேஷன் என்பார்கள். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வந்து கொண்டிருக்கும் அத்தொடர் ஒரே புத்தகமாக (முழுமையான பதினெட்டு பாகங்களும் சேர்ந்து) ரூ. 200 விலையில் மிக விரைவில் வர இருக்கிறது. வில்லியம் வான்ஸ் என்ற ஓவியர் வரைந்த தத்ரூப சித்திரங்கள் இத்தொடரின் சிறப்பு. காமிக்ஸ் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இது. அதுகுறித்த விளம்பரங்கள் கீழே :




நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

23 comments:

லக்கிலுக் said...

காமிக்ஸ் குறித்து தமிழிலோ, ஆங்கிலத்திலோ இந்த வலைப்பூவில் எழுத ஆர்வமிருக்கும் நண்பர்கள் தங்களது ஜிமெயில் முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Anonymous said...

தங்களின் பதிவு என்னை சிறுவயதிற்க்கு இட்டுச்சென்றுவிட்டது.

இரும்புக்கை மாயாவி,வேதாளம்,மாண்ட்ரேக்
போன்றவர்களை மறக்க முடியுமா?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இந்தியாவில் வெளிவந்தாலும் இங்கே இலங்கைக்கு வர நாளாகும். எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

காமிக்ஸ் வாங்கவென்றே இந்தியாவுக்கு வரவேண்டும் என நெடுநாள் ஆசை.

என்னதான் இந்தக் கம்யூட்டரோட கிடந்தாலும், காமிக்ஸ் வாசிக்கிறதில உள்ள சந்தோசம் வேறொன்றிலும் கிடையாது.

இவான் said...

லக்கி ... எனக்கு கொஞ்சம் காமிக்ஸ் பத்தி எழுத ஆர்வம் இருக்கிறது. சென்னையில் லயன், முத்து காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது என்று சொன்னால் நன்றாகயிருக்கும். எனது gmail முகவரி,
ivaan.h(~a~t~)gmail(~d~o~t~)com

சாலிசம்பர் said...

சூதாட்ட விடுதியில் வில்லனின் துப்பாக்கியை தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு எகிறி விழ வைத்து விடுவார்.யார் சுட்டது என்று வில்லன் திரும்பி பார்க்கும்பொழுது சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார் லக்கிலூக்.அந்த மின்னல் வேகம் லக்கியைத் தவிரவேறு யாருக்கும் வராது.

மே.ஒ.மாமன்னர் அரசியல் கலந்த அற்புதமான அங்கதக்கதை.வாசிக்கும் போது விஜயகாந்தும்,பண்ருட்டியும் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.

இவான் said...

லக்கி ... எனக்கு கொஞ்சம் காமிக்ஸ் பத்தி எழுத ஆர்வம் இருக்கிறது. சென்னையில் லயன், முத்து காமிக்ஸ் எங்கே கிடைக்கிறது என்று சொன்னால் நன்றாகயிருக்கும். எனது gmail முகவரி,
ivaan.h(~a~t~)gmail(~d~o~t~)com

அரை பிளேடு said...

ம்ம்ம்
சென்னையில இருந்தா முதல் ஆளா கடையில வாங்கிடுவேன்.

Missing the "Lion comics". :(

Thanks for your review.

கருப்பன் (A) Sundar said...

லயன், முத்து காமிக்ஸ் அத்தனையும் ஒன்று விடாமல் படித்திருக்கிறேன். இருப்பினும் இந்த லக்கிலுக் பற்றி தங்கள் முந்தய பதிவுகளை படித்தபிறகுதான் தெரிந்து கொண்டேன். மதுரையில் பல புத்தக கடைகளில் தேடிவிட்டேன் கிடைக்க மாட்டேன் என்கிறது :-(

லக்கிலுக் said...

இவான்!

உங்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருக்கிறது :-)

Athisha said...

நிறைய ஆர்வம்

dhoniv@gmail.com

billyjohn said...

பதினெட்டு வருட காமிக்ஸ் வாசிப்பு/ரசிப்பு அனுபவம் இருக்கிறது. எழுத ஆர்வமும் இருக்கிறது.. இதுவரையில் எழுதி பழக்கமில்லாவிட்டாலும் இனிமேல் நிச்சயம் எழுத வேண்டும். எனக்கும் அழைப்பு அனுப்ப இயலுமா

Billyjohn.1980@gmail.com

லக்கிலுக் said...

மின்னஞ்சல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறேன். சேர்ந்ததும் சும்மா இருக்காமல் ஏதாவது எழுதுங்கள். நாங்களே எத்தனை பேரில் மாற்றி மாற்றி எழுதுவது? :-(

மெய்யாலுமே தாவூ தீருது!!

Rafiq Raja said...

லக்கி, எனக்கும் தமிழில எழுத ஆசையே, இருந்தாலும் என்னுடைய வலை பதிவேடை அன்னிய மொழி நண்பர்களும் படிக்க ஏதுவாக ஆங்கிலத்தில் பதிவேதே உகந்தது என்று கருதினேன். அதனால் என்ன, அப்படியே நமது தமிழ் காமிக்ஸ் வலை பதிவேடில் உறுப்பினராகி பதிவு செய்தால் போயிற்று. :)

எனக்கும் அழைப்பு அனுப்புங்கள்.

rafiqraja AT gmail DOT com

SIV said...

எனக்கும் நிறைய ஆர்வம். அழைப்பு அனுப்ப இயலுமா?
siva2827@gmial.com

Subash said...

I love comics
மாயாவியின் கதைகளில் ஆரம்பித்து டெக்ஸ்வில்லர் லக்கிலுக் வரை காமிக்ஸ் ஆக அப்பாவிடம் சொல்லி செலவழித்தது ஏராளம்.

இரத்தப்படலம் வெளியாகிவிட்டதா?
அதை போஸ்டில் எவ்வாறு வாங்கலாம்?

Anonymous said...

உங்கள் வலை பதிவின் முயற்சி பாராட்டுக்குரியது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

இனிமேல் இந்த தளத்தில் வேறு எங்கும் இடப்படாத பதிவுகளை இட வேண்டியது என்னுடைய பொறுப்பு. தோழர் லக்கி லுக் / இளவஞ்சி, எனக்கு காண்டிரிபியுடர் ஆக சேர்க்கும் இன்விடேஷனை அனுப்புங்கள். நானே இங்கு பதிவுகளை இடுகிறேன். இது என்னுடைய மின் அஞ்சல் முகவரி:jollyjumper.chn@gmail.com

பின்னோக்கி said...

லக்கிலூக்கின் அருமையான நகைச்சுவையான கதைகளில் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமானது.
1. சூப்பர் சர்க்கஸ்
2. புரட்சித்தீ
3. பயங்கர பொடியன்
4. பரலோகத்திற்கோர் பாலம்
5. போனி எக்ஸ்பிரஸ்

பூங்காவனம் said...

அன்புடையீர்,

அனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.

கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.


லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஸ்டார்ட் மியூசிக்................................................................................................

Anonymous said...

அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

நிர்வாக குழு,

தகவல் வலைப்பூக்கள்.....

http://thakaval.net/blogs/comics/

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் (மீள்)இடுகை
படித்து சந்தோஷம்.
நண்பர்களது இடுகைகள், குறிப்பாக ஜாலிஜம்பர்
உடைய இடுகைகள் எப்போது வரும்ங்க?

Charubala said...

இங்கே இவற்றையெல்லாம் படித்தபின் நானும் ஒரு காமிக்ஸ் ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நான் பொக்கிஷம் போல் காத்து வந்த ஒரு காமிக் புத்தகத்தை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பியிடம் கொடுத்து தொலைந்து விட்டது, மிக நீண்ட நாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் கதையின் தலைப்பும் மறந்து விட்டது யாராவது தெரிந்தால் கூறவும் : கதை நாயகன் ஒரு முயல் வில்லன்: பாலு என்ற புலி ஒற்றன் : ஒரு நரி முயல்தான் காட்டில் உள்ள அனைத்து விலங்குகளையு காப்பாற்றும் தெரிந்தால் கூறவும்.நன்றி

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin