தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
கடைசியாக முத்து காமிக்ஸ் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்தது. இப்போது சரியாக ஐந்து மாதங்கள் கழித்து அடுத்த இதழ் வெளிவர இருக்கிறது. அடுத்து வரப் போகும் முத்து காமிக்ஸ் பற்றிய முன்னோட்ட பதிவு இது.
தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்து வரப் போகும் ஒரு இதழுக்கு சரியாக பதிவிட்டது நம்முடைய வலைத்தளம் தான். அதுவும் அடுத்து வரப் போகும் இதழின் அட்டைப் படத்துடன் (இந்த அட்டைப் படம் லயன் காமிக்ஸ் அலுவலகத்தில் மட்டுமே உள்ளது). இந்த பதிவின் பெருமைகள் அனைத்தும் என்னுடைய நண்பர் ஒருவருக்கே சேரும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கிறேன். நன்றி நண்பரே, உங்களை நான் என்றும் மறக்க மாட்டேன்.
இந்த கதை சரியாக நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளிவந்தது. இதனுடைய ஆங்கில மூலம் உலகில் மிகச் சிலரிடம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிட தக்கது. குறிப்பாக ஆன் லைனில் இந்த புத்தகம் கிடைப்பது இல்லை. ஆனாலும் இந்த புத்தகம் நண்பர் ஒருவரிடம் இருப்பதால் இந்த புத்தகம் வெளிவந்த உடனே இதனைப் பற்றிய பதிவை நாம் வெளியிடலாம். என்ன சரிதானே?
முத்து காமிக்ஸ் இதழ் எண் 312 - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம் |
இந்த இதழை பற்றி சென்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் வந்த விளம்பரம் இதோ (இந்த கதை ஏற்கனவே பதினெட்டு வருடங்களுக்கு முன்பு விளம்பரம் செய்யப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது):
முத்து காமிக்ஸ் இதழ் எண் 311ல் வந்த விளம்பரம் - நிழல் எது? நிஜம் எது? - மந்திரவாதி மாண்டிரேக் சாகசம் |
சென்ற பதிவாகிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் மக்களிடம் சிறப்பான வரவேற்ப்பை பெற்றதை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். அதனை இன்னும் படிக்காத ரசிகர்களுக்கு இதோ ஒரு மீள்-விளம்பரம்:
அந்த பதிவை படிக்க இந்த அட்டைப் படத்தை கிளிக் செய்தாலே போதும். அருமையான இந்த கதை சரியாக இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு காணக் கிடைக்காத பொக்கிஷம். இந்த கதை இப்போது உங்களுக்கு உலக அளவில் கிடைக்கும் ஒரே இடம் சிவகாசி தான். உலகில் அனைத்து மொழிகளிலும் மிகவும் அரிதான புத்தகம் இது.
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 04562 – 262749.
உங்கள் ஆதரவை நாடும் - ஜாலி ஜம்ம்பர்.
38 comments:
பதிவிற்கு நன்றி
Thanks,,,,,
ஜாலி ஜம்ம்பர் அவர்களே ,
அட்டை படத்தை போட்டு கலக்கி விட்டீர்கள் ! . இக்கதை Mirror People கதையின் முதல் பாகமா ? இரண்டாம் பாகமா ? தெரியவில்லை .
Lovingly,
Limat
அடி தூள். அட்டகாசம்.
சமீபத்தில் வந்த இரண்டு மூன்று அட்டை படங்களில் இது சூப்பர்.
இந்த மாதிரி ஆர்வத்தை தூண்டினால் நாங்கள் எல்லாம் என்ன செய்வது?
உண்மையில் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் சந்தா கட்டி விட்டால் இந்த மாத்திரி இல்லாமல் அடிக்கடி புத்தகங்கள் வரும் என்று நம்புகிறேன்.
களிமண் மனிதர்கள் அட்டைப் பட விளம்பரம் வேறு ஆர்வத்தை தூண்டுகிறது.
மாயாவியை மறுபடியும் கொண்டு வந்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
//Anonymous said...
பதிவிற்கு நன்றி//
முதன்மை கருத்தாக வருகை தந்த அனானி தோழருக்கு நன்றி. உங்கள் ஆதரவை தொடருவீர்கள் என்றே நம்புகிறேன்.
ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//Ramesh said...
Thanks,,//
மிஸ்டர் ரமேஷ்,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//Limat said...
ஜாலி ஜம்ம்பர் அவர்களே ,
அட்டை படத்தை போட்டு கலக்கி விட்டீர்கள் ! . இக்கதை Mirror People கதையின் முதல் பாகமா ? இரண்டாம் பாகமா ? தெரியவில்லை .//
லக்கி லிமட் அவர்களே,
வருகைக்கு நன்றி.
இது இரண்டாம் பாகம் ஆகும்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//சுந்தர் said...
அடி தூள். அட்டகாசம்.
சமீபத்தில் வந்த இரண்டு மூன்று அட்டை படங்களில் இது சூப்பர்.//
உண்மைதான் சுந்தர்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
நன்றி ஜாலி ஜம்பர்.
புத்தகங்கள் வெளிவருவது சந்தோஷத்தை தருகின்றது. லயன் குழுமத்தினர் தொடர்ந்தும் புத்தங்களை நேரத்திற்கு வெளியிட்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துவார்கள் என்று நம்புவோம்.
புத்தக அட்டையைப் போட்டு ஆர்வத்தை பல மடங்கு கூட்டிவிட்டீர்கள் போங்கள். ;)
எம்ஜே
Mr. J Comics
It is very happy to see Mandrake's face in cover page after a very long time. Waiting for the book. Thanks for advance info
thanks a lot jolly jumper.
when is this book coming out?
excellent blog.
//Mr. J said...
நன்றி ஜாலி ஜம்பர்.
புத்தகங்கள் வெளிவருவது சந்தோஷத்தை தருகின்றது. லயன் குழுமத்தினர் தொடர்ந்தும் புத்தங்களை நேரத்திற்கு வெளியிட்டு நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துவார்கள் என்று நம்புவோம்.
புத்தக அட்டையைப் போட்டு ஆர்வத்தை பல மடங்கு கூட்டிவிட்டீர்கள் போங்கள். ;)
எம்ஜே
Mr. J Comics//
நன்றி திரு ஜெ.
முத்து காமிக்ஸ் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் எதிர் பார்க்கப்படுகிறது.
அடுத்து லயன் காமிக்ஸ் (மாடஸ்டி) மற்றும் காமிக்ஸ் கிளாசிக்ஸ் (மாயாவி) தயாராக உள்ளது என்பதும் நல்ல விடயமே.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//siv said...
It is very happy to see Mandrake's face in cover page after a very long time. Waiting for the book. Thanks for advance info//
Thanks Siv. Like everyone else. iam also waiting eagerly for this story which happens to be a rare commodity in comics circle.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//shaji said...
thanks a lot jolly jumper.
when is this book coming out?//
Thanks for the comment shaji. the book is expected in the 1st week of august. will see.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//Anonymous said...
excellent blog.//
Many thanks for the comment.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
ஜாலி ஜம்ப்பர் அவர்களே,
மிகவும் நன்றி. எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன மந்திரவாதி மாண்டிரெக் கதையை தமிழில் படித்து? ஏழெட்டு ஆண்டுகள் இருக்குமா? இனிமேல் தொடருவார் என்றே நம்புகிறேன்.
வரப் போகும் கதைக்கான முன்னோட்டம் தொடருமா?
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
உண்மையில் இந்த அட்டைப் படம் நன்றாகவே உள்ளது. சமீப கால அட்டைப் படங்களில் இது நன்றாகவே உள்ளது என்பது என் கருத்து.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே,
சிறப்பாக செயல்படுகிறீர்கள்.
இது போன்ற பதிவுகள் உண்மையில் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.
அதுவும் இந்த புத்தகம் இப்போது இணைய தளத்தில் கிடைப்பது இல்லை என்ற தகவல் புத்தகம் வாங்கும் ஆர்வத்தை இன்னமும் தூண்டுகிறது.
அடுத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் பற்றிய விளம்பரம் உண்மையில் காமிக்ஸின் பொற்காலம் திரும்பியதை போன்ற என்னத்தை அளிக்கிறது.
மிகுந்த மகிழ்வுடன், நன்றி.
அடுத்த பதிவு பற்றிய விளம்பரத்தை இப்போது தான் பார்த்தேன்.
இது என்ன புது கரடி?, தேவை இல்லாமல்? என்ன திடீரென்று ராணி காமிக்ஸ் பக்கம்?
சரி, இது என்ன ஒரு குறிப்பிட்ட கதை விமர்சனமா அல்லது ஜேம்ஸ் பாண்ட் பற்றிய முழு ஆய்வா?
அய்யா ஜாலி ஜம்ப்பர்,
இத்தனை நாட்களாக எங்கு இருந்தீர்கள்?
சிறப்பான வருகை. நல்ல ஆரம்ப பதிவுகள். தொடரட்டும் உங்கள் பணி. தற்போது பெரிய "தலைகள்" எல்லாம் அமைதியாக இருக்கும் நேரத்தில் உங்களைப் போன்றோரின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
ஜாலி ஜம்ப்பர்,
அட்டைப் படம் சிறப்பு. அதுவும் கண்ணாடி மனிதர்களின் கதையை பற்றிய முன்னோட்டம் சூப்பர்.
மந்திரவாதி மாண்டிரெக் கதைகளில் எட்டு கும்பல், காலன் என்ற லூசிபார் மற்றும் கண்ணாடி மனிதர்கள் கதைவரிசை அருமையாக இருக்கும். அதனால் நம்பி படிக்கலாம்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
உங்களின் ராணி காமிக்ஸ் அட்டை நல்ல நிலையில் இல்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னிடம் சிறப்பான அட்டை ஸ்கான் உள்ளது.
அடுத்த பதிவு எப்போது?
ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.
nice blog.
:)
//rajan said...
nice blog.
//
Thanks Rajan for the comment. wish to improve it.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//புலா சுலாகி said...
உங்களின் ராணி காமிக்ஸ் அட்டை நல்ல நிலையில் இல்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். என்னிடம் சிறப்பான அட்டை ஸ்கான் உள்ளது.
அடுத்த பதிவு எப்போது?//
மிக்க நன்றி புலா சுலாகி அவர்களே.
தங்களுக்கு மின் அஞ்சல் ஒன்று அனுப்பி உள்ளேன் பாருங்கள்.
அடுத்த பதிவு இந்த வாரத்தில் இருக்கும்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//புலா சுலாகி said...
ஜாலி ஜம்ப்பர்,
அட்டைப் படம் சிறப்பு. அதுவும் கண்ணாடி மனிதர்களின் கதையை பற்றிய முன்னோட்டம் சூப்பர்.
மந்திரவாதி மாண்டிரெக் கதைகளில் எட்டு கும்பல், காலன் என்ற லூசிபார் மற்றும் கண்ணாடி மனிதர்கள் கதைவரிசை அருமையாக இருக்கும். அதனால் நம்பி படிக்கலாம்.//
உண்மைதான். அதுவும் நாகம் என்று அழைக்கப் படும் அந்த லூசிபர் வரும் கதைகள் எனக்கு பிடிக்கும். அதைத் தவிர களிமண் ஒட்டகம் என்று அழைக்கப் படும் ஒரு வில்லன் இருக்கிறன். மிகச் சில கதைகளே வந்தாலும் மாறுவேடம் புனைவதில் மன்னன் ஆகிய அவனது சாகசங்கள் நன்றாக இருக்கும்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//புலா சுலாகி said...
அய்யா ஜாலி ஜம்ப்பர்,
இத்தனை நாட்களாக எங்கு இருந்தீர்கள்?
சிறப்பான வருகை. நல்ல ஆரம்ப பதிவுகள். தொடரட்டும் உங்கள் பணி. தற்போது பெரிய "தலைகள்" எல்லாம் அமைதியாக இருக்கும் நேரத்தில் உங்களைப் போன்றோரின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. //
உண்மைதான். ஆனால் தலைகள் மறுபடியும் வருவார்கள் என்றே நம்புகிறேன்.
//காமிக்ஸ் காதலன் said...
அடுத்த பதிவு பற்றிய விளம்பரத்தை இப்போது தான் பார்த்தேன்.
இது என்ன புது கரடி?, தேவை இல்லாமல்? என்ன திடீரென்று ராணி காமிக்ஸ் பக்கம்?
சரி, இது என்ன ஒரு குறிப்பிட்ட கதை விமர்சனமா அல்லது ஜேம்ஸ் பாண்ட் பற்றிய முழு ஆய்வா?//
நண்பரே,
பதிவு வரும்வரை பொறுத்திருந்து பாருங்களேன்?
//காமிக்ஸ் காதலன் said...
அடுத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் பற்றிய விளம்பரம் உண்மையில் காமிக்ஸின் பொற்காலம் திரும்பியதை போன்ற என்னத்தை அளிக்கிறது.//
உண்மைதான். அதுவும் நிறைய காமிக்ஸ் படிக்கும் வாய்ப்பும் அமைகிறது என்ற நிலை உருவாகும்.
//காமிக்ஸ் பிரியன் said...
ஜாலி ஜம்ப்பர் அவர்களே,
மிகவும் நன்றி. எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன மந்திரவாதி மாண்டிரெக் கதையை தமிழில் படித்து? ஏழெட்டு ஆண்டுகள் இருக்குமா? இனிமேல் தொடருவார் என்றே நம்புகிறேன்.
வரப் போகும் கதைக்கான முன்னோட்டம் தொடருமா? //
முன்னோட்டம் தொடரும்.
மண்டிரவதி மாண்டிரெக் கதைகள் தொடரும் என்றே நம்புகிறேன்.
கலக்கல் !!!!!!!!!!!!
இந்த ஒற்றை வார்த்தையை தவிர வேற எதுவும் உடனே சொல்லமுடியாத உணர்ச்சிப்பெருக்கில் இருக்கிறேன்..!!!
டெம்ப்ளேட் சூப்பர்...!!
now the blog looks great with all the add ons and design.
keep it up.
i second ravi in my comment. great work. continue.
கலக்கல் !!!!!!!!!!!!
இந்த ஒற்றை வார்த்தையை தவிர வேற எதுவும் உடனே சொல்லமுடியாத உணர்ச்சிப்பெருக்கில் இருக்கிறேன்..!!!
டெம்ப்ளேட் சூப்பர்...!!
eagerly waiting for the mandrake book.
by the way, mandrake stories have appeared in strips in tamil as well.
excellent concept of putting previews even before the book hits the stand.
wish you will keep it up.
Post a Comment
கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.
இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.
தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.
இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.
இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!