தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.
எப்போ வரும், எப்போ வரும் என்று பலரும் காத்திருந்த லயன் காமிக்ஸ் ஜம்போ ஸ்பெஷல்இதழ் ஒரு வழியாக வந்தே விட்டது. நேற்றே வந்திறங்கிய இந்த புத்தகங்களின் முதல் பக்கங்களை அனுப்பியமைக்கும், என்றும் அன்புடன் இருக்கும் நட்பிற்கும் திரு கிங் விஸ்வா அவர்களுக்கு நன்றி. தயவு செய்து தாமதிக்காமல் உடனடியாக வாங்கி விடுங்கள். பின்னர் தேடினாலும் கிடைக்காது.
இதோ, அந்த அட்டைப் படங்கள்:
வழக்கம் போல என்றுமே லயன் மற்றும் முத்து காமிக்ஸ் புத்தகங்களில் முதலில் படிப்பது ஆசிரியரின் ஹாட் லைன் தான். இதோ, அந்த பக்கங்கள். ஆம், வழகத்திற்கு மாறாக இந்த இதழில் இரண்டு பக்கங்கள் எழுதி உள்ளார் விஜயன் சார். சென்ற புத்தகமாகிய கொலை செய்ய விரும்பு ஹாட் லைனும் இரண்டு பக்கங்களே என்றாலும் அவை சிறிய வடிவமைப்பில் இருந்தவை.
இந்த புத்தகத்தின் பின்னால் இருந்த கடின உழைப்பை பற்றிய ஆசிரியரின் கருத்துக்கள் மற்றுமொரு ஹாட் லைனாக:
முதன்முறையாக இந்த கதாபாத்திரங்களை நம்முடைய மனக்கண் முன்னே உலாவ விட்ட கதையாசிரியர்களை பற்றி: மேலும், இந்த புத்தக தொடரில் பதிமூன்றாம் பாகமானது ஒரு வித்தியாசமான ஒன்றாகும். கிட்டத்தட்ட ஒரு கதை சுருக்கம் போல இருக்கும் (முந்தைய பனிரெண்டு இதழ்களுக்கும்). அந்த பதிமூன்றாம் பாகத்தை தனி இதழாக ஆசிரியர் வெளியிட இருப்பது மற்றுமொரு சிறப்பு.
அடுத்து வரப்போகும் எட்டு இதழ்களின் முன்னோட்டங்களை ஏற்கனவே கிங் விஸ்வாவின் இந்த பதிவில் பார்த்துவிட்டோம், இருந்தாலும் நெடுநாள் கழித்து லயன் காமிக்ஸில் எட்டு கதை விளம்பரங்கள்: பேக் டு பார்ம்?
இந்த ஏழு புத்தகங்களையும் முன்பதிவின் மூலம் வீடு தேடி வரச்செய்ய உடனடியாக இந்த முன்பதிவு கூப்பனை நிரப்பி அனுப்புங்கள்: மூன்று மாதத்தில் ஏழு புத்தகங்களும் வந்து சேரும்.
அடுத்தபடியாக, அனைவராலும் விரும்பி படிக்கப்படும் ஒரு தொடர்: சிங்கத்தின் சிறு வயதில் (பதினைந்தாம் பாகம்):
இந்த புத்தகத்தை பற்றிய முத்துவிசிரியின் முத்தான பதிவு இங்கே: http://muthufanblog.blogspot.com/2010/10/wait-is-over.html
அந்த பதிவின் மூலம் தெரியவரும் மற்றுமொரு முக்கியமான விஷயம்: தமிழ் காமிக்ஸ் உலகம் இணையதளத்தில் விரிவான, தெளிவான பதிவொன்று விரைவில் வரும்.
வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.
நன்றி. வணக்கம்.
19 comments:
ஒரு மணி நேரத்திற்கு முன் தான் காமிக்ஸ் கிடைக்கப் பெற்றேன். உடனடியாக போட்டோ எடுத்து போட்டுவிட்டேன். ராட்சஸ சைசில் ஒரு புத்தகம் அருமை.
விருந்தின் முன் மாதிரியைப் படித்துவிட்டேன்.
விருந்தினை சாப்பிட தயாராகிவிட்டேன்.
Super.
எனக்கெல்லாம் எப்போதுதான் புத்தகம் வருமோ? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அருமையான தகவல் நண்பரே.
புத்தகம் இன்னமும் கைப்பெறவில்லை.
ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இதனை படித்தது முடிக்கவே ஒரு நாள் ஆகும்போல இருக்கிறதே?
காமிக்ஸ் கிளாசிக்சில் மறுபடியும் ஜானி நீரோ கதையை காண்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சி. ஆனால். இந்த கதை ஏற்கனவே கிளாசிக்ஸ் தொடரில் வந்துவிட்டது.
இதுவரை வராத கதையாகிய ஜானி இன் லண்டன் போன்ற கதைகளை வெளியிட்டு இருக்கலாம்.
சென்னையில் எங்கு கிடைக்கும் என்று யாரவது தயவு செய்து கூறுங்கள்
sanjeevi,
சென்னையில் மட்டுமல்ல, வேறெங்குமே கடைகளில் இந்த புத்தகம் கிடைக்காது. நேரிடையாக பணம் பெற்று வாங்க வேண்டும்.
வாசகர்களே,
இந்த புத்தகம் கடைகளில் கிடைக்காது. ஆகையால் உடனடியாக லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு வாங்கிவிடுங்கள்.
நானும் இந்த புத்தகத்தின் பிரதியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அநேகமாக நாளையோ, மறுநாளோ வந்துவிடும்.
நாளை முதல் வேலையாக அடுத்த ஏழு இதழ்களுக்கும் முன்பதிவு செய்துவிடுவதே என்னுடைய தலையாய பணி.
விரைவில் (கிங் விஸ்வாவின் தமிழ் காமிக்ஸ் உலகம் தளத்தில் குறிப்பிட்டது போல) முழு வண்ணத்தில் கதைகளை தமிழில் படிக்கலாம் என்று ஆசிரியர் கூறியிருப்பது மனதிற்கு நிறைவை அளிக்கிறது.
அதைப்போலவே, இந்த இதழின் அட்டைப்படங்கள் ஒரிஜினல் அட்டைப்படங்கலாக இருப்பதும், வான்சின் கையொப்பம் இருப்பதும் வரவேற்க்கதக்க மாற்றங்கள்.
the scans and other pages made it look lovely.
the wait for more than a year was worth it.
to put it in tamil, Raja virundhu.
இதற்காகத்தானே இத்தனை நாள் காத்துக்கிடந்தோம்
இந்த தீபாவளி காமிக்ஸ் ரசிகர்கள் எவராலும் நினைத்துப்பார்க்க / மறக்க இயலா தீபாவளியாக இருக்குமென்பது மட்டும் நிச்சயம்
.
super.
kindly do post regularly.
அடடா சொல்ல மறந்துட்டேன்
அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))
.
execellent post. wonderful to look into the black background.
amazing post. nice scans
only yesterday, i got my 4 booked issues. and started distributing them to my friends who didn't order it in advance.
they were so happy to see that big book and it was weighing close to one KG.
Hai how to send money and get the book. Pl direct me.................RAJESH RAMAN
Dear Mr Rajesh,
//Hai how to send money and get the book. Pl direct me.................RAJESH RAMAN//
Kindly take a DD or Cheque Favouring "Prakash Publishers" payable at Sivakasi for a value of Rs 230/- for one book and send it to the following address:
Prakash Publishers,
No 8/D-5, Chairman P.K.S.S.A Road,
Amman Kovil Patti, Sivakasi, TN 626 189.
Phone: 04562-272649 (Mon-Sat 10AM-5.30 PM)
Post a Comment
கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!
தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.
இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.
தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.
இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.
இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.
இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!