Friday, December 3, 2010

டை ப்ளுதொஷே - இரத்தப்படலம் கதாசிரியரின் திரைப்படம்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

இரத்தப்படலம் கதையை படித்து முடித்துவிட்டு ஆவலுடன் அடுத்த புத்தகங்களை எதிர்பார்த்திருக்கும் வேளையில், இரத்தப்படலம் கதையை எழுதிய ஆசிரியர் ஷான் வான் ஹாமே அவர்களை பற்றி ஆசிரியர் விஜயன் சாரின் ஒரு சிறுகுறிப்பு: இதனை படித்துவிடுங்கள், பின்னர் பதிவை தொடருங்கள்.

Van Hammeஇரத்தப்படலம் கதையை எழுதிய ஆசிரியர் ஷான் வான் ஹாமே அவர்களை பற்றி தீவிரமாக தேடி, அலசி ஆராயந்துக்கொண்டிருக்கையில், அவர் கதை எழுதி, அந்த கதை திரைப்படமாக தியேட்டரில் வெளிவந்துள்ளது என்பதைக்கேள்விப்பட்டவுடன், உடனடியாக இந்தப்பதிவினை இட்டுவிட்டேன். 

இந்த படமானது டை ப்ளுதோஷே என்ற ஷான் வான் ஹாமேவின் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்ட உருவாக்கப்பட்ட ஒன்றாகும். உண்மையில் இந்த காமிக்ஸ் கதை ஒரு சீரியஸ் ஆனா கதையாகும். ஆனால் இந்த சினிமா படமாக்கப்பட்ட விதத்தில் இருந்து இது ஒரு பிளாக் காமெடி என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. காமிக்ஸ் கதையில் பெண்ணின் தகப்பனார் ஆக வரும் அந்த நபரும் (ஹெர்மன் வால்சர் - திரைப்படத்தில் நடிகர் அர்மின் ரோடே) மற்றும் அந்த தலைமை சமையல்காரரும் (பிரான்ஸ் பெர்கர் - திரைப்படத்தில் நடிகர் உயே ஓஸ்சென்கேனேக்ட் ) இருவரும் மிகவும் சீரியஸ் ஆன கதாபாத்திரங்கள் ஆக வருபபவர்கள். அதுவும் நட்டத்தில் இயங்கும் அந்த ஹோட்டலை நடத்தி துன்பத்தில் இருக்கும் பிரான்ஸ் பெர்கரின் கதாபாத்திரம் ஒரு சிறப்புவாய்ந்த ஒன்றாக இருந்தாலும், அடிக்கடி கோபப்படும் பெண்ணின் தந்தையாக வரும் ஹெர்மன் வால்சர் பாத்திரம் தான் கதையின் மையம். அந்த பாத்திரத்தின் முன்கோபமே இந்த மொத்தக்கதைக்கும் காரணம்.

ஆம், மகளின் கல்யாண விழாவில் சமையல்காரர் சற்று மரியாதைக்குறைவாக நடந்து கொண்டார் என்று அவர் கோபித்துக்கொள்ள, அதன் விளைவாக நடக்கும், (சற்றும் நம்ம இயலாத) சம்பவங்களின் கோர்வையே இந்த நிமிடங்கள் ஓடும் ஜெர்மன் திரைப்படம். இந்த படம் ஆங்கிலத்தில் இன்னமும் மொழிமாற்றம் செய்யப்படவில்லை. இருந்தாலும் ஜெர்மனியில் இருந்து அந்த தலைப்பை ஆங்கில மொழியாக்கம் செய்தால் "பிளடி மேரேஜ்" என்று சொல்லாம்.

குறிப்பிட்டு சொல்வதானால் இரண்டு கர்வம் கொண்ட ஆண்களின் மோதல் என்று இந்த படத்தை சொல்லலாம். அதிலும் குறிப்பாக அந்த இறுதிக்காட்சியில் இருவரும் பேசாமல் முறைத்துக்கொள்ளும் காட்சியும், அதனை தொடரும் அந்த திக் திக் கிளைமேக்ஸும் சூப்பர்.

படத்தின் போஸ்டரே ஆயிரம் கதைகளை சொல்லும் விதத்தில் திறம்பட உருவாக்கப்பட்டு உள்ளது. கண்டு களியுங்கள்: அதுவும் பெக்கின்பா படங்களில் இருப்பதைவிட அதிகம் துப்பாக்கிகள் என்று சொல்லும் விததிலேயே நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Poster   

படத்தின் கிரெட்டிடுகளில் நம்ம ஷான் வான் ஹாமே அவர்களின் பெயரை கவனியுங்கள்:

credits

இந்த காமிக்ஸ் கதைதான் இப்படி திரைப்படமாக மாறியது: (இதில் இருக்கும் அந்த ஹெர்மான் என்பவர்தான் நம்ம கேப்டன் பிரின்ஸ் கதைகளின் மூலம் நம்மை மகிழ்விப்பவர்):

bluthochzeit_gr

படத்தின் மற்ற விவரங்கள்:

விக்கிபீடியா: http://de.wikipedia.org/wiki/Die_Bluthochzeit

IMDB லிங்க்: http://www.imdb.com/title/tt0382572/

போஸ்டர்: http://www.imdb.com/media/rm1826984704/tt0382572

Film டிரைலர்: http://www.imdb.com/video/screenplay/vi403178265/

 

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றி. வணக்கம்.

25 comments:

பயங்கரவாதி டாக்டர் செவன் said...

மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

தலைவர்,
அ.கொ.தீ.க.

King Viswa said...

மீ தி செகண்டு.

//பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!//

அதே, அதே, சபாபதே.

King Viswa said...

நண்பரே,

இவ்வளவு விவரமாக பதிவிட்ட நீங்கள் இந்த படத்தின் பதிவிறக்க சுட்டியையும் தரலாமே? (தந்திருக்கலாமே?)

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

மீ தி தேர்டு.

அதுவும் நம்ம சிபி அண்ணன் வர்றதுக்கு முன்னாடியே. எப்புடி?

ஒலக காமிக்ஸ் ரசிகன் said...

நீங்கள் சொல்ல மறந்துவிட்ட விஷயங்கள் இரண்டு.

ஷான் வான் ஹாமே அவர்களின் காமிக்ஸ் கதையாகிய லார்கோ வின்ச் ஏற்கனவே படமாக வந்து விட்டது. அதனைப்பற்றிய நமது கனவுகளின் காதலரின் பதிவு இதோ: கனவுகளின் காதலர் - லார்கோ வின்ச்

அதனைப்போலவே ஷான் வான் ஹாமே அவர்களின் காமிக்ஸ் கதையாகிய இரத்தப்படலம் தொலைகாட்சி படமாக வேறு வந்தள்ளது. அதனைப்பற்றிய நமது கிங் விஸ்வாவின் பதிவுக்கான சுட்டி இதோ: கிங் விஸ்வா - இரத்தப்படலம் தொலைகாட்சி தொடர்

Cibiசிபி said...

வாவ் சூப்பர் பதிவு
முத்து விசிறி அவருடைய பதிவில் கூறியது போல காமிக்ஸ் உலகம் களை கட்டிவிட்டது :))
.

Cibiசிபி said...

// அதுவும் நம்ம சிபி அண்ணன் வர்றதுக்கு முன்னாடியே. எப்புடி? //

நம்மள கலாயக்கிறதே இவருக்கு வேலையா போச்சு :((

இன்னைக்கி நீங்க கோவிலுக்கு எதுவும் போகவில்லையா ;-)
.

ஜேம்ஸ் பாண்ட் 007 said...

சார்,

//இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//

என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//மீ த ஃபர்ஸ்ட்டு!

பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!//

தலைவரே.

நன்றி , மீண்டும் வருக.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//இவ்வளவு விவரமாக பதிவிட்ட நீங்கள் இந்த படத்தின் பதிவிறக்க சுட்டியையும் தரலாமே? (தந்திருக்கலாமே?//

சுட்டியை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் கட்டாயம் அளிக்கிறேன்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//ஒலக காமிக்ஸ் ரசிகன் said...
நீங்கள் சொல்ல மறந்துவிட்ட விஷயங்கள் இரண்டு.//

அவற்றை நீங்கள் அளித்தமைக்கு நன்றி ரசிகரே.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//முத்து விசிறி அவருடைய பதிவில் கூறியது போல காமிக்ஸ் உலகம் களை கட்டிவிட்டது//

உண்மைதான்.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் ௦௦௭//

பதிவுக்கும் வருகைக்கும் நன்றி.

காமிக்ஸ் பிரியன் said...

நல்ல அறிமுகம், படத்தின் டவுன்லோட் லிங்க் கிடைத்தால் மறவாமல் கொடுக்கவும்.

காமிக்ஸ் பிரியன் said...

நல்லதொரு பொழுதுபோக்கு படமாக தெரிகிறது. பார்த்து விடுகிறேன், இங்கே இன்னமும் லார்கோ வின்ச் டீவிடியே கிடைக்கவில்லை.

காமிக்ஸ் பிரியன் said...

படத்தின் போஸ்டர் ஆங்கிலத்தில் உள்ளது, எனவே படம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் வந்திருக்கவேண்டும். ஆகையால் ஆங்கில டவுன்லோட் தளங்களில் தேடினால் கிடைக்கும்.

The Spider said...

படத்தை பற்றிய தகவலுக்கு நன்றி நண்பா.

The Spider said...

நல்லதொரு பதிவு. நன்றாக கோர்வையாக இருந்தது உங்கள் நடை. அப்படியே யாரோ என்னருகில் அமர்ந்து கதையை சொல்வது போல. இப்போதுதான் கதைசொல்லிகளே இல்லையே?

The Spider said...

அப்படியே படம் டவுன்லோட் இணைப்பையும் அளிக்கவும்

காமிக்ஸ் காதலன் said...

புதிய பொலிவுடன், புதிய பகுதிகளுடன் - காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல்


இனி, ஒவ்வொரு வெள்ளியும் - உங்கள் பேவரிட் இணையதளத்தில். படிக்க தவறாதீர்கள்.

Cibiசிபி said...

உங்களுக்கும் மற்றும்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
.

CAPTAIN HECHAI said...

நண்பரே!!
வான் ஹாமே உருவாக்கிய எந்த கதையும் சோடை போனதில்லை, அபார வெற்றியையே அடைந்துள்ளது என்பது அவருடைய திறமைக்கு சான்றாகும்..கமிக்ஸ்தான் என்றில்லை,திரைப்படமும் ஒரே கலக்கல்தான்,என்பது,உங்கள் பதிவிலேயே தெரிகிறது. அந்த "லார்கோ வின்ச்" யையும் திரு விஜயன் அவர்கள்
, நமது லயனில் கொண்டு வருவேன் என்று கூறியதால், அதையும் நாம் படிக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்றே நினைக்கிறேன் உங்களின் அருமையான பதிவுக்கு மிக்க நன்றி

CAPTAIN HECHAI said...

அன்புள்ள அருமை நண்பர் ஜாலி ஜம்பர' அவர்களே!!! மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார்!! தங்களின் பதில் என்ன? என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்http://hajatalks.blogspot.com/2010/12/rathna-comics-written-by-haja-ismail.html#comments

பயங்கரவாதி டாக்டர் செவன் said...மக்களே,

பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!


http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு

தலைவர்,
அ.கொ.தீ.க.

December 24, 2010 2:11 AM

Anonymous said...

காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

முஸ்தபா, எண்ணூர்.

Murali said...

i am living in usa how do get all the comics by mail ,can anyone advise me
thx
muraliwesthill@gmail.com

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin