Monday, March 21, 2011

சென்னையில் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்கள்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள். நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு நானும் தமிழ் காமிக்ஸ் பற்றி பதிவெழுதிக்கொண்டு இருந்தேன். ஆனால் பணிச்சுமையும், இட மாற்றமும் சேர்ந்து என்னை கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக பதிவிடாமல் தடுத்தது. இதோ, நம்முடைய லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் ஆசிரியர் போல நானும் புத்துணர்வு பெற்று திரும்பி விட்டேன். இனிமேல் அடிக்கடி பதிவுகளை இட முயல்கிறேன்.

இன்று காலையில் திரு முத்து விசிறி அவர்களின் பதிவினில் இந்த கமெண்ட்டை கண்டேன், மன வருத்தம் கொண்டேன், இந்த பதிவினை இடும் சபதம் பூண்டேன்  (அட, விஜய டி.ராஜேந்தர் அவர்களை நேரில் சந்தித்ததில் இருந்து நமக்கும் இப்படி எல்லாம் ப்புளோவில் எதுகை மோனையாக வருகிறதே?). இதோ அந்த கமென்ட்:  //சரியில்ல....... said...

பிரண்ட்ஸ்.... மே ஐ கம் இன்? வணக்கம் நண்பர்களே..... நான் காமிக்ஸ் ரசிகன் ஆன போதும், சென்னையிலேயே வசிக்கின்ற போதும்.., எனக்கு இன்னும் ரத்தப்படலம் கிடைத்திட்ட பாடில்லை..... என்னுடைய காமிக்ஸ் தாகத்தை மீண்டும் கெளப்பி விட்ட உங்க எல்லோருக்கும் கோடி நன்றிகள். வரும் வாரத்தில் கார் புக் செய்து சிவகாசி கிளம்பப்போகிறேன்....... சென்னை கடைகளில் மகா மட்டமான பத்தகங்கள் கிடைக்கின்றது... லயன் கிடைப்பதில்லையே என்ற வயித்தெரிச்சலை விஜயன் ஸாரிடம் சொல்லாம் என்று இருக்கிறேன்...( அவரை சந்திக்க முடிந்தால்...) பழைய புத்தகங்கள்...(கைவசம் உள்ள பிரதிகள்) அனைத்தையும் அள்ளிக்கொண்டு வரும் முடிவில் இர்க்கிறேன்.... மற்றும் எனது ப்ளாக்கில் காமிக்ஸ் பற்றிய ஒரு பதிவு இடப்போகிறேன்.... வேறு ஒரு நாட்டில் இருக்கும் ஒரு தமிழ் நண்பன் காமிக்ஸ் அனுபவத்தை தான் எழுதப்போகிறேன்... டைம் கெடைச்சா வாங்களேன்!!! நவ் பை பை!!!//

இப்படி பலரும் கேட்பதால் இனிமேல் லயன் காமிக்ஸ் கிடைக்கும் இடங்களை எல்லாம் புகைப்படம் எடுத்து அந்த விலாசங்களை இப்படி பதிவிட்டால் புதிய வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்ற எண்ணத்தில் உருவாகியது தான் இந்த பதிவு.

 

சென்ற வாரத்தின் கடைசி இரண்டு நாட்கள் சென்னையில் ஒரு அலுவலகவேலை காரணமாக வந்து இருந்தேன் (அதாவது கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது). சென்னையில் பிரபலமாக இருக்கும் தி.நகரில் சென்னை சில்க்ஸ் பின் பக்கத்தில் இருக்கும் ஹோட்டல் தாஜ் கெமர் இன் ஹோட்டலில் தான் தங்கி இருந்தேன். அருமையான ஹோட்டல். அதன் அருகிலேயே ஒரு சப்பாத்திக்கடை வேறு. சொல்லவே வேண்டாம், அங்குதான் இரவினில் உணவு.

இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பரொருவரை சந்திக்க மயிலாப்பூர் சென்று இருந்தேன். அப்போது அவர் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் வாங்க என்று லஸ் கார்னர் அருகில் இருந்த சங்கீதா ஹோட்டலின் முகப்பில் இருந்த ஐஸ் கிரீம் பார்லருக்கு அழைத்து சென்று கோன் ஐஸ் வாங்கி கொடுத்தார். அற்புதமான சுவையுடன் இருந்த அந்த ஐஸை சுவைத்துக்கொண்டே நடக்கையில் அருகில் இருந்த கடையில் அந்த அதிசயத்தை கண்டேன்.

லஸ் கார்னர் நேரு செய்தித்தாள் விற்பனையகம் - புத்தம் புதிய லயன் காமிக்ஸ் வெள்ளையாய் ஒரு வேதாளம் விற்பனைக்கு 

Nehru News Mart, Mylapore, Luz Corner Lion Display

லஸ் கார்னர் நேரு செய்தித்தாள் விற்பனையகம் - புத்தம் புதிய காமிக்ஸ் கிளாசிக்ஸ் களிமண் மனிதர்கள்  - இரும்புக்கை மாயாவி சாகசம்

Nehru News Mart, Mylapore, Luz Corner CC Display

லஸ் கார்னர் - மயிலாப்பூர் - நேரு செய்தித்தாள் விற்பனையகம் - லஸ் கார்னர் சிக்னல் அருகில் - சங்கீதா ஹோட்டல் இருக்கும் வரிசையில்

Nehru News Mart, Mylapore, Luz Corner

 

இதைத்தவிர சென்னையில் இன்னும் சில இடங்களில் காமிக்ஸ் கிடைக்க கண்டேன். அவற்றை பற்றி விரைவினில் முழுவதுமாக புகைப்படங்களுடன் பதிவிடுகிறேன். அதுவரையில் சென்னையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் சில இடங்களை பற்றிய விவரங்கள் இதோ:

1. Mylapore Tank தெப்பக்குளம் பெட்ரோல் பேங்க் அருகில் (ஸ்ரீகுமரன் எதிரில்) இருக்கும் புத்தகக்கடை.

 

2. Mount Raod Anand Theatre Bus Stop Pavement News Paper Shop ஆனந்த் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இருக்கும் நடைபாதை கடை.

 

3. T.Nagar Bus Depot. Krishnaveni Theatre Entrance Book Shop தி.நகர் பஸ் டிப்போ எதிரில் கிரிஷ்ணவேணி தியட்டர் வாசலில் இருக்கும் புத்தகக்கடை இங்கேதான் இப்போது லத்திகா என்ற குடும்ப படம் ஓடுகிறது.

 

4. Mambalam Railway Station Book Stall தி.நகர் மாம்பலம் ரெயில் நிலைய புத்தகக்கடை.

 

5. Koyambedu Bus Depot Book Stall கோயம்பேடு பஸ் நிறுத்த புத்தகக்கடை.

 

Chennai Distributor: இவை தவிர கடந்த ஐந்து ஆண்டுகளில் வந்த புத்தகங்களை சிவகாசி செல்லாமல் சென்னையிலேயே வாங்க:

Mr V.P. ரத்தினம் (Phone Number: 044-2495 0495)

No 12, நைனான் தெரு,

அபிராமபுரம்,

சென்னை 600018.

சென்னையில் இருந்த இரண்டு நாட்களில் கடுமையான பணிச்சுமை. ஆகையால் சக பதிவர்களை சந்திக்க இயலவில்லை. அதுவுமில்லாமல் இந்த பயணம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டதாக இருந்த காரணத்தினால் முன்கூட்டியே திட்டமிட இயலவில்லை. அடுத்த மாதம் குட் பிரைடே அன்று நண்பர் ஒருவருக்கு சென்னையில் ஒரு முக்கிய வேலை இருப்பதால் அவருடன் நானும் வரவுள்ளேன். அப்போது சந்திக்கலாம் தோழர்களே.

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.

நன்றி. வணக்கம்.

11 comments:

Lucky Limat லக்கி லிமட் said...

வந்தோம்ல பஸ்ட்

Anonymous said...

Nandri Namba! I am searching for books all round in chennai.

Anonymous said...

சூப்பர். இதோ கிளம்பி விட்டேன் தி.நகர் கடைக்கு.

வானம்பாடி said...

முன்பு அசோக் பில்லர் சந்திப்பில் உதயம் தியேட்டர் முனையில் இருந்த ஒரு புத்தகக் கடையில் கிடைத்து வந்தது.

Cibiசிபி said...

Wow it's really good effort

Thanks buddy

King Viswa said...

நண்பரே,

சென்னையில் காமிக்ஸ் கிடைக்கும் மற்ற இடங்களை பற்றிய விவரங்களை உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பி உள்ளேன். அவற்றையும் இணையுங்கள்.

பை தி வே, அடுத்த மாதம் வரும்போது தகவல் தெரிவியுங்கள், சந்திப்போம்.

HAJA ISMAIL said...

இன்னும் "இரத்தப்படலம் "கிடைக்க வில்லையா? வருத்தம்தான் நண்பரே!! எனக்கு கிடைத்து விட்டது விரைவிலேயே அதைபற்றி ஒரு பதிவு எனது கண்ணோட்டத்தில் இட இருக்கிறேன்.
சரி சிவகாசி போனபின் அங்கே நம்முடைய ஆசிரியர் "விஜயன்" அவர்களை நான் கேட்டதாக சொல்லுங்கள்.
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்.

cap tiger said...

நன்றி நண்பரே! நானும் வழக்கமாக வாங்கிகொண்டு இருந்த சிலபுத்தககடைகள் இப்போதெல்லாம் லயன்காமிக்ஸ் பற்றி கேட்டாலே , நம்ம சில்லறை பாக்கியை கேட்கும்போது முறைக்கும் பஸ் கண்டக்டர் போல பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் :) ஹைய்யா, இனி அபிராமபுரம் போகவேண்டியதுதான் பாக்கி! மீண்டும் தங்கள் முயற்சிக்கு நன்றி! அப்படியே, விஸ்வா சொன்ன பிற கடைகளை பற்றியும் தகவல் இணைக்கவும்!

Anonymous said...

Dear fiends i havelion comics 200 book anyone need pls call me 9677142992.nitharsun

Kumargin said...

சென்னையில் காமிக்ஸ் கிடைக்கும் மற்ற இடங்களை பற்றிய விவரங்களை pls send to mail Id kumargin1977@gmail.com

King Viswa said...

Kumar,

சென்னையில் லயன் & முத்து காமிக்ஸ் கிடைக்குமிடம்: டிஸ்கவரி புக் பேலஸ்

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin