Sunday, November 15, 2009

லயன் காமிக்ஸ் 207 - கொலை செய்ய விரும்பு - விமர்சனம்

தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள்.

நீண்ட நாட்கள் ஆகி விட்டது நாம் சந்தித்து. இந்த இடைப்பட்ட காலத்தில் சில நல்ல விஷயங்கள் நடந்து உள்ளன. நம்முடைய சக காமிக்ஸ் நண்பர் லவ்டேல் மேடி அவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. திருமணம் இந்த மாத இறுதியில் ஈரோட்டில் நடைபெற உள்ளது. நான் கலந்து கொள்ள உள்ளேன், சக காமிக்ஸ் நண்பர்களை சந்திக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையுமே.

மேலும் நெடு நாள் காமிக்ஸ் வாசகர் ஹாஜா இஸ்மாயில் அவர்கள் ஒரு காமிக்ஸ் பிளாக் ஆரம்பித்து உள்ளார். இங்கே சென்று அதனை ரசிக்கவும். காமிக்ஸ் உலகின் முடி சூடா மன்னரைத்தான் காணோம். அவரை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள நடந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி அவர் தன்னுடைய பணி நிமித்தமாக அயல் நாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். எங்கிருந்தாலும் வாழ்க தலைவரே.

புத்தக விவரங்கள்

                                     தலைப்பு : SWEET CAROLINE

                                     எழதியவர் : பீட்டர் ஒ’டான்னல்

                                     ஓவியர் : நெவில் கால்வின்

                                     முதலில் வெளியானது : 29-11-1983 முதல் 19-04-1984 வரை (120 Strips)

                                     வெளியானது: EVENING STANDARD (5815-5914A)

                                     இந்தியாவில் : லயன் காமிக்ஸ்

                                     தமிழாக்கம் : S.விஜயன்

                                     வெளியீட்டு எண் # 207 தமிழ்

                                     தலைப்பு : கொலை செய்ய விரும்பு!

                                     முதலில் வெளியானது : நவம்பர் 06, 2009

LION 207 Covers

 

 

வழமை போல புத்தகத்தில் மிகுந்த ரசிக்கத்தக்க பகுதி ஆசிரியரின் ஹாட் லைன் தான். இதோ, அந்த பக்கங்கள். ஆம், வழகத்திற்கு மாறாக இந்த இதழில் இரண்டு பக்கங்கள் எழுதி உள்ளார் விஜயன் சார்.

lion comics hot line A Lion comics Hot line B

கதையின் முதல் இரண்டு பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

Lion 207 Pg 1 Lion 207 Pg 2

கதை விமர்சனம்: வழமையான மாடஸ்டி கடைக்கான பிளாட் தான் இதிலும் உள்ளது. மாடஸ்டியும், வில்லியும் ஓய்வு எடுக்க அமைதியான இங்கிலாந்து கிராமபுரத்தில் இருக்கும்போது அவர்களின் நண்பர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார், கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கும்போது.

விசாரணையில் இந்த கொலை ஒரு புதிய கூலிக் கும்பலின் வலிமையை பறைசாற்ற ஒரு விளம்பரம் என்று அறியும்போது நண்பர்கள் இருவரும் இந்த புதிய கும்பலை ஒழிக்க சபதம் மேற்கொள்கின்றனர். அந்த கும்பலை பற்றிய விவரங்களை அறிய ஒரு கிரிக்கெட் பந்துதான் மாடஸ்டிக்கு உதவுகிறது.

மேலும் தகவல் கொடுத்த நபரின் மனைவியை அந்த கும்பல் கடத்தி சென்று பிணையக்கைதியாக வைத்து இருக்கின்றனர். அப்போது மேஜர் டர்ரன்ட்டின் நண்பி ஒருவரும் இந்த கும்பலால் மிரட்டப் படுவதை அறிந்த மாடஸ்டி வலிய சென்று இந்த கும்பலின் இலக்கு ஆகிறாள். அதனால் எதிரிகளால் கைதாகிறாள் மாடஸ்டி.

    • வில்லி கார்வின் என்னவானார்?
    • மாடஸ்டி இருக்குமிடம் தெரிந்ததா?
    • மேஜர் டர்ரன்ட்டின் நண்பி கொலை மிரட்டலில் இருந்து தப்பித்தாரா?
    • பிணையக்கைதியை காப்பாற்ற முடிந்ததா?
    • அந்த புதிய கூலிக் கும்பல் யார்?

என்ற பல கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் இந்த கதை சிறப்பாக அமைந்து உள்ளது. படிக்க தவறாதீர்கள். கதை பற்றி விரிவாக பின்பு பேசலாம். இதோ இந்த புத்தகத்தில் உள்ள மற்ற கதை விளம்பரங்கள்:

Lion 208 Lion 209
Lion 210 2nd Story Zip Nolan

முடிவில் சிங்கத்தின் சிறு வயதை நாம் விட முடியாது அல்லவா? இதோ அந்த பக்கங்கள்:

SSV 14-1 SSV 14-2 SSV 14-3

//சாம்பியன்ஸ் கோப்பை பற்றி அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் கிரிக்கெட் சார்ந்த ஒரு கதையை வெளியிட இருக்கும் நம்முடைய ஆசிரியரின் திறமையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஆமாம், இந்த கதையில் கிரிக்கெட் ஆட்டமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வில்லி கார்வின் ஜாண்டி ரோட்ஸ் போல பீல்டிங் செய்வதை கவனியுங்கள்.//

என்று நம்முடைய முந்தைய பதிவில் எழுதி இருந்தோம். ஆனால், அதற்க்கு பின்னர் சாம்பியன்ஸ் கோப்பையும், ஆஸ்திரேலியா பயண தொடரும் முடிந்த நிலையிலேயே இந்த புத்தகம் வந்து உள்ளது. இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் வேளையில் வந்து என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டது இந்த புத்தகம். இதோ இந்த புத்தகத்தின் அட்டைப்பட மாதிரியும், ஆங்கில வடிவத்தின் முதல் பக்கத்தின் பிரதியும்.

Insider 4 Picture 1240

வழமை போல உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள், சந்திக்க விரும்பும் நண்பர்கள் ஈரோட்டிற்கு வரலாம்.

நன்றி. வணக்கம்.

பின் குறிப்பு: இந்த பதிவில் முதலில் உள்ள மாடஸ்டி படம் ஒரு அரிய படம் என்பதால் அதனை இங்கு அளித்து உள்ளேன். புகழ் பெற்ற ஓவியர் ஸ்டீபன் ரிச்சர்ட் போல்டேரோ என்ற ஓவியர் வரைந்த மாடஸ்டி அட்டைப்படம் இது. அவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு செல்லுங்கள்: பியர் ஏல்லி

26 comments:

மணிஜி said...

தலைவரே..இன்றுதான் வர முடிந்தது..சிறப்பு...முத்து காமிக்ஸ் உங்களிடம் உள்ளதா?குறிப்பாக காற்றில் கரைந்த கப்பல்கள்.....தலை கேட்ட தங்கப்புதையல்...

Miyaav said...

//இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் வேளையில் வந்து என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டது இந்த புத்தகம்//

India 32/4.

Saving Grace? Ha Ha Ha.

பின்னோக்கி said...

இந்த கதைய முன்னாடியே படிச்சுட்டேன். ஆனா கதை நியாபகமே வரமாட்டேங்குது. அடுத்த காமிக்ஸ் எப்ப வரும்னே தெரியலை. ரொம்ப இடைவெளி இருக்குறதால கதையெல்லாம் மறந்து போகுது

Ravindhar said...

Dear Friend,

super post. Thanks for the scans.

read this comics in englsih by downloading it here:

http://rapidshare.com/files/200872981/Modesty_Blaise_54_-_Sweet_Caroline.cbz

புலா சுலாகி said...

நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

நன்றாக இருந்தது பதிவு. அதுவும் அட்டைப்படம் பற்றிய கருத்து அருமை. புத்தகம் இன்னமும் எனக்கு வந்து சேராமையால் என்னால் கருத்து கூற இயலவில்லை. ஆனாலும் இப்போது தொடர்ந்து பல கதையின் விளம்பரங்கள் வருவது மகிழ்வை அளிக்கிறது.

காமிக்ஸ் பொற்காலம் திரும்புமா?

புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

புலா சுலாகி said...

காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

தயவு செய்து நம்முடைய லயன் / முத்து / காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களுக்கு சந்த தொகையாகிய ருபாய் முன்நூறை உடனடியாக கட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான் தொடர்ந்து காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும்.


புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//தண்டோரா ...... said...

தலைவரே..இன்றுதான் வர முடிந்தது..சிறப்பு...முத்து காமிக்ஸ் உங்களிடம் உள்ளதா?குறிப்பாக காற்றில் கரைந்த கப்பல்கள்.....தலை கேட்ட தங்கப்புதையல்..//

நண்பர் தண்டோரா அவர்களே,

வருகைக்கு நன்றி. நீங்கள் கேட்ட புத்தகங்கள் என்னிடம் உள்ளன. அவற்றை பற்றி ஏதேனும் விவரங்கள் வேண்டுமா? அல்லது பதிவிட வேண்டுமா? தெரிவியுங்கள். செய்து விடுவோம்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Miyaav said...
//இருந்தாலும் நாளை இலங்கை அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் வேளையில் வந்து என்னுடைய மானத்தை காப்பாற்றி விட்டது இந்த புத்தகம்//

India 32/4.

Saving Grace? Ha Ha Ha.//

நண்பரே, இருந்தாலும் இந்தியா தோற்கவில்லை அல்லவா?

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//பின்னோக்கி said...
இந்த கதைய முன்னாடியே படிச்சுட்டேன். ஆனா கதை நியாபகமே வரமாட்டேங்குது. அடுத்த காமிக்ஸ் எப்ப வரும்னே தெரியலை. ரொம்ப இடைவெளி இருக்குறதால கதையெல்லாம் மறந்து போகுது//

நண்பர் பின்னோக்கி அவர்களே, நீங்கள் சொல்வது உண்மைதான் என்றாலும் விஜயன் அவர்கள் அடுத்த வருடம் இந்த நிலையை மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Ravindhar said...
Dear Friend,
super post. Thanks for the scans.
read this comics in englsih by downloading it here:
http://rapidshare.com/files/200872981/Modesty_Blaise_54_-_Sweet_Caroline.cbz//

நன்றி ரவீந்தர் அவர்களே. பின்னோக்கி போன்ற பல நண்பர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

// புலா சுலாகி said...
நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே,

நன்றாக இருந்தது பதிவு. அதுவும் அட்டைப்படம் பற்றிய கருத்து அருமை. புத்தகம் இன்னமும் எனக்கு வந்து சேராமையால் என்னால் கருத்து கூற இயலவில்லை. ஆனாலும் இப்போது தொடர்ந்து பல கதையின் விளம்பரங்கள் வருவது மகிழ்வை அளிக்கிறது.

காமிக்ஸ் பொற்காலம் திரும்புமா?//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் புலா சுலாகி அவர்களே. அடுத்த வருடம் நமக்கெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//புலா சுலாகி said...
காமிக்ஸ் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:

தயவு செய்து நம்முடைய லயன் / முத்து / காமிக்ஸ் கிளாசிக்ஸ் இதழ்களுக்கு சந்த தொகையாகிய ருபாய் முன்நூறை உடனடியாக கட்டி விடுங்கள். அப்படி செய்தால் தான் தொடர்ந்து காமிக்ஸ் இதழ்கள் வெளிவரும். //

தயவு செய்து அனைவரும் சந்தா கட்டி விடுங்கள் தோழர்களே. இது ஒரு அன்புக் கட்டளை. தொகையை டீ.டி / மணி ஆர்டர் எடுத்து தான் கட்ட வேண்டும் என்பது இல்லை. காசோலை / செக் மூலமும் அனுப்பலாம்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

காமிக்ஸ் காதலன் said...

சூப்பர் பதிவு.

அருமையான படங்கள். புத்தகம் இன்னமும் எனக்கு கைவரவில்லை.

Vedha said...

excellent review with the originals.

waiting for the book to reach me.

Vedha said...

the scans are good.

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//காமிக்ஸ் காதலன் said...
சூப்பர் பதிவு.

அருமையான படங்கள். புத்தகம் இன்னமும் எனக்கு கைவரவில்லை.//

கருத்துக்கு நன்றி நண்பரே. இன்னமும் பலருக்கு புத்தகம் கைக்கு வரவில்லையாம். ஆகையால் வெயிட் செய்யுங்கள்.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said...

//Vedha said...
excellent review with the originals.

waiting for the book to reach me.//

thanks for the comment vedha. hope you will also post a new one very soon.

தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

காமிக்ஸ் பிரியன் said...

நல்லதொரு பதிவு, அருமையான ஸ்கான், நல்ல விமர்சனம்.

தொடருங்கள் தோழர்.

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

காமிக்ஸ் பிரியன் said...

அடுத்த பதிவு எப்போது? பிருந்தாவனமும் நந்தகுமாரனும்?

காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்

SIV said...

உங்களுடைய பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பதிவை சீக்கரம் இடுங்கள். ஆவலுடன் காத்து இருக்கிறோம்

Chezhi said...

காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பூங்காவனம் said...

காமிக்ஸ் நண்பர்களே,

வேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?

புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்

இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1

Kiruthigan said...

தொடரட்டும் நிம் பணி..

பகிர்வுக்கு நன்றி said...

பகிர்வுக்கு நன்றி

நல்ல பதிவு said...

நல்ல பதிவு

ILLUMINATI said...

புது போஸ்ட் சீக்கிரமே போடுங்க....

Post a Comment

கருத்து சொல்ல வந்த அனைவருக்கும் வணக்கம்! தங்கள் கருத்துக்களை வெளியிடும் முன் சிலவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

தங்கள் கருத்துக்கள் முடிந்தளவு காமிக்ஸ் மற்றும் அது உங்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாகவே இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பதிவு சம்பந்தமாகவே இருப்பின் மேலும் சிறப்பு.

இங்கு அரசியல் பேசுவதையும், பிறரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்விதத்திலும் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அப்படி வெளியிடப்படும் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் நீக்கபடுவது மட்டுமின்றி கருத்தை வெளியிட்டவர் தடையும் செய்யப் படுவார்.

தயை கூர்ந்து தங்களது ஜி-மெயில் அல்லது ப்ளாக்கர் பயனர்பெயரிலேயே பின்னூட்டம் இடவும். அல்லது தங்கள் பெயர் அல்லது புனைப்பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடவும். முகமிலி கருத்துக்களை தவிர்க்கவும். எப்போதும் உங்கள் முகவரி, தொலைபேசி, செல்பேசி எண் போன்ற தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம்.

இது ஒரு புத்தக சந்தை அல்ல. இங்கு காமிக்ஸ் விற்பனைக்கோ அல்லது பண்டமாற்றுக்கோ கிடைக்காது. ஆகையால் காமிக்ஸ் வேட்டையர்கள் பழைய புத்தகங்களை இங்கு தயவு செய்து கோர வேண்டாம் என கேட்டுகொள்கிறோம்.

இங்குள்ள படங்கள் அனைத்தும் எவ்வித லாபநோக்கும் இல்லாமல் ஒரு காமிக்ஸ் ஆர்வத்தை ஊக்கமூட்டும் முயிற்சிக்காகவே வெளியிடப்படுகின்ற. காப்பிரைட் உரிமையாளர்கள் ஆட்சேபித்தால் அவை நீக்கப்படும். ஆகையால் யாரும் வந்து பழைய புத்தகங்களின் ஸ்கேன்கள் கிடைக்குமா என கேட்க வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவற்றை மனதிற்கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்! நன்றி!

Blog Widget by LinkWithin